Go to full page →

அத்தியாயம்-63 CCh 722

நினைவில் இருக்க வேண்டிய சில காரியங்கள் CCh 722

இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு அளித்த அறிவுரையானது சகல யுகங்களிலும் வாழுகின்ற அவருடைய பின்னடியார்களுக்கு அளிக்கப்பட்டது. “உங்களைக் குறித்து எச்சரிகையாயிருங்கள்” என்று அவர் கூறியபொழுது, காலத்தின் முடிவில் வாழுகின்றவர்களை மனதில் எண்ணியே அவ்வாறு கூறினார். நாம் ஓவ்வொருவரும் தனித்தனியாக நமது இருதயத்திலே பரிசுத்த ஆவியின் அருமையான ஈவுகளைப் பேணி வைக்க வேண்டும். 5T 102. CCh 722.1

பெரும் நெருக்கடி வரவிருக்கின்றது. அதில் வரும் பரீட்சைகளையும் சோதனைகளையும் எதிர்ப்பதற்கும் அக்காலத்தில் நாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கும் வருந்தியுழைக்கின்ற விசுவாசம் தேவையாகும். என்றுபோதிலும் நாம் மகிமையான வெற்றியை அடையலாம். விழிப்புடனே ஜெபித்து, விசுவாசிக்கின்ற ஒரு ஆத்துமாவும் சத்துருவின் கண்ணியில் அகப்படுவதில்லை. CCh 722.2

கர்த்தருடைய சத்திய வசனங்களின் திறவுகோல்களையுடைய சகோதரரே, இந்த உலக சரித்திரத்தின் முடிவான காட்சிகளின் நடுவே நீர் எந்த பாத்திரத்தை வகிப்பீர்? இந்தப் பக்திவினயமான யாதார்த்த நிலைகளைப் பற்றி நீர் விழிப்புடையவராயிருக்கிறீரோ? பரத்திலும் பூவுலகிலும் நடைபெற்று வருகின்ற பெரும் ஆபத்தை நீர் அறிந்திருக்கின்றீரோ? வெளிச்சத்தைப் பெற்று தீர்க்கதரிசனத்தை வாசிக்கவும் கேட்கவும் தருணமுடையவராக விளங்கிய அனைவரும் எழுதப்பட்டவற்றைக் குறித்து அசதியாகவிராமல் ஜாக்கிரதையாக விருங்கள். “ஏனெனில் காலம் சமீபமாயிருக்கின்றது.” உலகின் சகல துன்பங்களுக்கும் காரணமாக விருக்கின்ற பாவத்துடனே யாரும் விளையாட வேண்டாம். தூக்க மயக்கத்திலும் முட்டாள்தனமான நிர்விசாரத்திலும் மூழ்கிக் கிடக்காதீர். முழுவதுமாக நீங்கள் கர்த்தருடைய படசத்திலே இருப்பதாக அறியுங்கள். உண்மையுள்ள இருதயத்திலும் நடுக்கமுடைய உதடுகளிலுமிருந்து “யார் நிலை நிற்கக் கூடும்?” என்ற கேள்வி எழட்டும். கிருபையின் காலத்தின் இந்தக் கடைசி மணி நேரத்தில் உங்களுடைய குணக் கட்டுமானத்திற்கென்று மிகவும் நல்ல பொருட்களைத் தேர்ந்து உபயோகித்தீர்களா? உங்கள் ஆத்துமாக்களின் ஒவ்வொரு கறையும் போக அவற்றைக் கழுவினீர்களோ? வெளிச்சத்தைப் பின்பற்றினீர்களோ? உங்கள் விசுவாச அறிக்கைக்கு ஒத்ததாக உங்கள் செயலும் இருக்கின்றதோ? CCh 722.3

ஒர் அளவிற்குக் கிறிஸ்தவ வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருந்தும். தராசிலே நிறுக்கப்படும் பொழுது குறைவுள்ளவர்களென்று கருதப்படுவதால் நித்திய ஜீவனை இழப்பதும் சாத்தியமே. வேதாகம கட்டளைகளுள் சிலவற்றைப் பின்பற்றுவதால் இவன் கிறிஸ்தவன் என்று ஒருவனைப் பிறர் எண்ணுவது சாத்தியமே. ஆயினும் கிறிஸ்தவ குணத்திற்கு அத்தியாவசியமான தகுதிகள் இல்லாமையால் அவன் நாசமடையலாம். கடவுள் உங்களுக்களித்த எச்சரிப்புகளை நீங்கள் அசட்டை செய்தால் அன்றி அவற்றை குறித்து நிர் விசாரமாக இருந்து, பாவத்தைப் பேணி அல்லது அதற்குப்போக்குச் சொல்வீர்களானால், உங்கள் ஆத்தும கதியை நீங்களே நிர்ணயிக்கிறீர்கள். நீங்கள் தராசிலே நிறுக்கப்பட்டு குறைவுடையவர்களாகக் காணப்பாடுவீர்கள். கிருபையும் சமாதானமும் பாவ மன்னிப்பும் என்றென்றும் திரும்பவும் அளிக்கப்படாமற் போகும். உங்கள் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் எட்டாமலே இயேசு கடந்து போய் விடுவார். கிருபை நமதாகும் பொழுதே, இரட்சகர் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, நித்தியத்திற்கென்று திருந்திய கிரியையை நாம் நடப்பிப்போமாக. 6T 404, 405. CCh 723.1

சாத்தான் நித்திரையாக இருக்கவில்லை. உறுதியான தீர்க்கதரிசன வசனம் பிரயோஜனமான கிரியை நடப்பிக்காதபடிக்கும் அவன் நன்றாக விழித்திருக்கிறான். மிகுந்த திறமையுடனும் வஞ்சகமுடைய வல்லமையினாலும், திருவசனத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தம் நிறைவேறாமற் போவதற்கு அவன் அலுவல் நடப்பிக்கின்றான். வருடங்கள் நெடுகிலும் சத்தியத்திற்குப் பிரதியாகத் தான் சிருஷ்டித்திருக்கும் சூட்சுமம் மிகுந்த போலி நியாயங்களின் உபயோகத்தால் மனிதருடைய மனதை ஆண்டுகொண்டான். இந்த ஆபத்து நாளிலே நீதியை நடப்பிக்கின்றவர்கள் தெய்வப்பயத்துடனே தாவீது “நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்” (சங். 119:126) என்று கூறியது போலவே, தாங்களும் கூறி, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். 9T 92. CCh 724.1

உலகிலுள்ள பிற மக்கள் யாரும் அறியாத சத்தியங்களை நாம் அறிந்திருப்பதாகப் பேர் பெற்றுள்ளோம். அத்தகைய விசுவாசத்திற்கு இசைந்ததாக, நம்முடைய குணமும் வாழ்க்கையும் இலங்க வேண்டும். நீதிமான்கள் அருமையான தானியத்தைப் போலவே கட்டுகளாகக் கட்டப்பெற்று பரமகளஞ்சியத்தில் சேர்க்கப்படுவதும், களைகள் எல்லாம் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டுச் சுட்டெரிக்கப்படுவது போலவே, கடைசி பெரும் நாளில் பொல்லாதவர்கள் சுட்டெரிக்கப் படுவதுமான நாள் நமது பேரில் வருகின்றது. அறுப்பின் முடிவு வரைக்கும் கோதுமையும் களைகளும் ஒன்றாகவே வளரும். CCh 724.2

வாழ்வின் கடமைகளை நிறைவேற்றும் பொழுது, நீதி மான்கள் தங்களின் முடிவுமட்டாக அவபக்தியுடையவர்களுடனே தொடர்புடையவராயிருப்பர். இருளின் பிள்ளை களுக்கும் ஒளியின் பிள்ளைகளுக்கு மிடையேயுள்ள பேதம் விளங்கும்படி, இவர்கள் நடுவே அவர்கள் வாசம் பண்ணத்தக்கதாக, தம்முடையவர்களைக் கர்த்தர் சிதறடித்திருக்கிறார். இவ்வாறு தங்களை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க” வேண்டும். (1 பேதுரு 2:9.) இருதயத்தில் ஒளிவிடும் தெய்வ அன்பு, வாழ்வில் வெளிப்படும் கிறிஸ்து போன்ற நடத்தை ஆகிய இவை, உலக மனிதருக்குப் பரலோகத்தின் ஒரு காட்சியை அவர்கள் கண்டு, அதின் மேன்மையைப் பெரிதென்று உணருமாறு அருளப்பட்ட்து. 5T 100. CCh 724.3

பொல்லாத மனிதரையும் தூதரையும் தனக்கு எதிரிகளாக்கிக் கொள்ளாமல் ஒருவனும் தேவனுக்கு ஊழியஞ் செய்யக்கூடாது. கிறிஸ்துவின் அணியில் சேர விரும்புகின்ற ஒவ்வொரு ஆத்துமாவின் பாதையிலும் அவர்களைத் தொடருமாறு பொல்லாத ஆவிகள் நியமிக்கப்படுகின்றன. ஏனெனில் தன்னுடைய பிடியிலிருந்து தப்பிய இரையைப் பிடிக்கும்படி சாத்தான் நாடுகிறான். தங்களுக்கே ஆக்கினைத் தீர்ப்பு வரும்படியாக தீயோர் பலத்த வஞ்சகங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். உண்மையின் வேஷத்தை இவர்கள் தரித்து, கூடுமானால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். 5T 595. CCh 725.1