Go to full page →

முடிவு சமீபமாயிருக்கிறது CCh 725

கிறிஸ்துவானவர் இவ்வுலகத்திற்குத் திரும்புவது அதிக காலத்திற்குத் தாமதமடைவதில்லை. இதுவே ஒவ்வொரு தூதின் முக்கிய கருத்தாக இருப்பதாக. கட்டுப்படுத்தும் தேவ ஆவியானவர் இப்பொழுதே உலகினின்று எடுத்துக்கொள்ளப்படுகிறார். சுழல்கள், புயல்கள், பெருங்காற்று, அக்கினி, வெள்ளம், நிலத்திலும் நீரிலும் விளையும் ஆபத்துக் கள் யாவும் ஒன்றன் பின்னொன்றாக தொடர்ந்து நேருகின்றன. விஞ்ஞானம் இவற்றிற்கு விளக்கமளிப்பதற்கு வகை தேடுகின்றது. தெய்வ குமாரனின் துரித வருகையைப்பற்றிச் சொல்லுகின்ற அடையாளங்கள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருந்தும், மெய்யான காரணமாகிய இதையன்றி வேறு காரணங்களினால் இவை நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமட்டாக வீசாதிருக்கும்படி வானத்தின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கும் தூதர் மனிதருடைய கண்களுக்கு மறைவாக விருக்கின்றனர். இந்தக் காற்றுகளை விட்டுவிடுமாறு கடவுள் கட்டளையிடும்பொழுது, பேனா முனையினால் வர்ணிக்கவியலாத அத்தகைய போராட்டம் தோன்றும். CCh 725.2

திரையை அகற்றி, அழியப் போகும் உலகைப் பற்றிய தெய்வ நோக்கங்களையும் நியாயத்தீர்ப்புக்களையும் நீங்கள் அறிவதற்குக் கூடுமானால், உங்களுடைய சொந்தப் போங்கையும் நீங்கள் கவனித்தால், நீங்கள் உங்களுடைய சொந்த ஆத்தும இரட்சிப்பினிமித்தமும், உங்கள் உடன் மனிதரின் ஆன்ம இரட்சிப்பினிமித்தமும் பயமும் நடுக்கமுமடைவீர்கள். இருதயத்தை உருக்கும் ஊக்கமுள்ள பிரார்த்தனைகள் பரத்திற்கு நேராக ஏறெடுக்கப்பெறும். மண்டபத்திற்கும் பலி பீடத்திற்கும் நடுவே நீங்கள் அழுது உங்களுடைய ஆவிக்குரிய குருட்டுத்தனத்தையும் பின் வாங்குதலையும் அறிக்கையிடுவீர்கள். 6T 406, 408. CCh 726.1