Go to full page →

புதிய வெளிச்சம் என்று கருதப்படுவது அனேகரை வஞ்சிக்கும் CCh 727

முழு உலகத்தின் பேரிலும் வரவிருக்கும் நாசத்திலே தேவனுடைய மீதியான ஜனத்தை அகப்படுத்த முடியுமென்று சாத்தான் நம்புகின்றான். கிறிஸ்துவின் வருகை சமீபமாக விருக்கும்பொழுது அவர்களை கவிழ்த்துப் போடுவதற்கு முன்னிலும் அதிக உறுதியும் தீர்மானமும் அவன் உடையவனாயிருக்கின்றான். புதிய வெளிச்சமும் வெளிப்படுத்தலும் உடையவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகின்ற ஆண்களும் பெண்களும் எழும்புவார்கள். அவர்களுடைய இயல்பு விசுவாசத்தின் பழைய எல்லைக் குறிகளின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிப்பது தான். அவகளுடைய உபதேசங்கள் கடவுளுடைய திருவசனத்தின் பரீட்சைக்கு நிற்காது. ஆயினும் ஆத்துமாக்கள் பலர் வஞ்சிக்கப்படுவர். CCh 727.3

பொய்யான அறிக்கைகள் பரவும், சிலர் இந்தக் கண்ணியிலே அகப்படுவார்கள். அவர்கள் இந்த வதந்திகளை நம்பி, தாங்களும் அதைப் பரப்புவார்கள். பெரும் வஞ்சகனுக்கும் அவர்களுக்குமிடையிலே இவ்விதமான ஒரு தொடர்பு ஏற்படும். கடவுள் அனுப்புகிற தூதுகளைப் பகிரங்கமாக இவர்கள் எதிர்த்து நிற்காமல் பல வழிகளிலும் தங்கள் அவிசுவாசத்தை உறுதியுடனே வெளிப்படுத்துவார்கள். கூறப்படும் பொய்யான வாக்கு மூலங்கள் யாவும் இந்த அவிசுவாசத்தைப் போஷித்துப் பலப்படுத்தும். இவ் வழியாகவும் பல ஆத்துமாக்கள் தவறான வழியில் திருப்பப்படுவர். CCh 728.1

ஒவ்வொரு வகையான பிசகையும் நாம் மிகவும் ஊன்றிக் கவனித்து விட்டோம் என்றெண்ண வேண்டியதில்லை. ஏனெனில் மனிதரைச் சத்தியத்தினின்று வழி விலகச் செய்வதற்குச் சாத்தான் இடைவிடாமல் வகை தேடுகின்றான். 5T 295, 296. CCh 728.2