Go to full page →

மீதியான சபை CCh 745

சகரியா கண்ட யோசுவாவையும் தூதனையும் பற்றிய தரிசனம் பெரிய பாவ நிவாரண நாளின் முடிவிலிருக்கிற தெய்வ மக்களின் அனுபவத்திற்கு மிகவும் பொருத்தமாயிருக்கிறது. மீதியான சபை பெருங் கஷ்டத்திலும் இடுக்கணிலும் அகப்படும். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்கள் வலுசர்ப்பத்தின் கோபத்தையும் அதின் சேனைகளின் கோபத்தையும் உணருவார்கள். உலகிலுள்ளவர்களை யெல்லாம் தன்னுடைய குடிகளென்று காட்டிச் சாத்தான் தொகையிடுகின்றான். விழுந்து போன சபைகள் அவனுடைய ஆதீனத்தில் உள்ளன. என்ற போதிலும் அவனுடைய மேலாதிக்கத்தை எதிர்க்கும் ஒரு சிறிய கூட்டம் இன்னமும் அங்கே இருக்கின்றது. CCh 745.2

இஸ்ரவேலரை அழிப்பதற்கு அஞ்ஞான ஜாதிகளை அவன் எழுப்பியது போலவே, விரைவில் தெய்வ ஜனத்தை அழிப்பதற்கு பூமியிலுள்ள பொல்லாத அதிகாரிகளை அவன் எழுப்புவான். தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிராக மனுஷ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அனைவரிடமும் எதிர்பார்க்கப்படும். கடவுளுக்கு உண்மையாக விருந்து தங்கள் கடமைகளை நிறைவேற்றுவோர் பயமுறுத்தவும் நிந்திக்கவும் பெற்று கொலைத் தீர்ப்பு கூறப் பெறுவர். “பெற்றோராலும், சகோதரர்களாலும், இன ஜனங்களாலும், தோழர்களாலும் காட்டிக் கொடுக்கப்படுவார்கள்.” CCh 746.1

அவர்களுடைய ஒரே நம்பிக்கை தெய்வ கிருபையைச் சார்ந்திருக்கின்றது. அவர்களுடைய ஒரே பாதுகாப்பு பிரார்த்தனையே. தூதனுக்கு முன்பாக யோசுவா வேண்டுதல் செய்து நின்றது போல, மீதியான சபையார் நொறுங்கிய இருதயமும் ஊக்கமான விசுவாசமும் உடையவர்களாக பாவ மன்னிப்பையும் விடுதலையையும் இயேசுவாகிய பரிந்து பேசும் தங்கள் இரட்சகரின் மூலமாக அடைவதற்கு நாடுவர். தங்களுடைய வாழ்வில் பாவம் மிகுந்துள்ளதை அவர்கள் அறிவார்கள். தங்களுடைய பலவீனத்தையும் அபாத்திரத் தன்மையையும் அவர்கள் உணர்ந்து, தங்களையே நோக்கிப் பார்க்கும் போது சோர்வடையப் போகின்றனர். யோசுவாவுக்கு விரோதஞ் செய்வதற்கு சோதனைக்காரன் அவன் அருகில் நின்றது போலவே, இவர்கள் அருகிலும் நிற்கின்றான். அவர்களுடைய குறைவுபட்ட குணமாகிய அழுக்கு வஸ்திரங்களை அவன் சுட்டிக் காண்பிக்கின்றான். அவர்களுடைய பலவீனத்தையும் தப்பிதத்தையும் நன்றியறிதல் இன்மையால் அவர்கள் நடப்பித்த பாவங்களையும் அதினிமித்தமாகத் தங்கள் மீட்பருக்கு அவர்கள் கொண்டு வந்த அவமானத்தையும் கிறிஸ்துவானவருக்கு நேர் எதிரான அவர்களுடைய சுபாவத்தையும் அவன் எடுத்துக் காட்டுகிறான். தங்களுடைய காரியம் மிகவும் குறைவுடையது என்றும், தங்களுடைய தீட்டின் கறைகள் ஒருபொழுதும் சுத்தமாகாதென்றும் எண்ணுமாறு செய்து, ஆத்துமாக்கள் மிரளும்படி செய்வதற்கு அவன் முயலுகின்றான். தன் சோதனைகளுக்கு அவர்களை அவன் இணங்கச் செய்து, தெய்வத்தை வழிபடுவதை விட்டு அவர்கள் நீங்கும் பொழுது மிருகத்தின் முத்திரையை அவர்கள் பெற்றுக்கொள்ளத் தக்கதாக அவர்களுடைய விசுவாசத்தை அழித்து விடலாமென்று அவன் எண்ணுகின்றான். CCh 746.2

அவர்கள் பேரில் சுமந்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தெய்வ சந்நிதியில் அவன் எடுத்தியம்பி, தங்கள் பாவங்களினால் தெய்வ பாதுகாப்பிற்கு அவர்கள் நீங்கலாகியபடியால், பாவிகளை அழித்துப் போடும்படியாகத் தனக்கு அவர்கள் பேரில் உரிமையளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் கூறுகின்றான். தெய்வ தயவிற்கு தான் புறம்பானது போலவே அவர்களும் நீங்கலாகி விட்டனர் என்று விளக்குகின்றான். “தெய்வம் என்னையும் என் தூதர்களையும் தமது சமுகத்தினின்று தள்ளிவிட்டிருக்க, இவர்களை அந்த இடங்களில் எங்களுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்வாரோ? இவர்கள் தெய்வ கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் என்று பெயர் தரித்திருந்தும், கற்பனைகளைக் கைக் கொண்டார்களோ? தெய்வத்தைப் பார்க்கிலும் இவர்கள் தங்களை அதிகமாக நேசிக்கவில்லையா? அவருடைய ஊழியத்திற்கடுத்தவைகளுக்கு மேலாகத் தங்கள் நன்மைகளைப் பிரதானமாக்கவில்லையா? அவர்களுடைய அன்பு உலகக் காரியங்களைப் பற்றி இருக்கவில்லையா? அவர்களுடைய வாழ்க்கையிலே காணப்படுகிற பாவங்களையும், அவர்களுடைய சுயநலத்தையும், அவர்களுடைய கசப்பையும் ஒருவர் மேலொருவர் கொண்டுள்ள பகையையும் பாரும், தெய்வமே” என்று முறையிடுகின்றான். CCh 747.1

தெய்வ மக்கள் அனேக காரியங்களில் மிகவும் குறைவுள்ளவர்களே. என்னென்ன பாவங்களைச் செய்யும்படி தான் அவர்களைச் சோதித்திருக்கிறானென்று சாத்தான் நன்றாக அறிவான். அவற்றை மிகைப்படுத்தி அவன், “தேவன் என்னையும் என் தூதர்களையும் தமது சமுகத்தினின்று தள்ளி விடுவதற்குக் காரணமாகிய அதே பாவங்களைச் செய்து, குற்றமுள்ளவர்களாயிருக்கும் இவர்களுக்கு நற்பலனை அளிப்பாரோ? கர்த்தாவே, இவ்வாறு நீர் செய்தால் அது நீதியாகாது. அவர்களுக்கு விரோதமான தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறான். CCh 747.2

கிறிஸ்துவின் பின்னடியார் பாவஞ் செய்திருப்பதிலும் தீமையின் ஆட்சிக்குத் தங்களை அவர்கள் விட்டுவிட வில்லை. தங்கள் பாவங்களைத் தள்ளிப் போட்டு, தாழ்மையோடும் மனஸ்தாபத்தோடும் கர்த்தரைத் தேடினார்கள். தெய்வ மத்தியஸ்தர் அவர்களுக்காக மன்றாடுகின்றார். அவர்களுடைய நன்றிகேட்டினால் மிகுந்த அபகீர்த்திக்குள்ளாகும் அவர்களுடைய பாவத்தையும் அவர்களுடைய மனந்திரும்புதலையும் அறிந்திருக்கின்ற இயேசுவானவர் “சாத்தானே, கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக. இந்த ஆத்துமாக்களுக்காக நான் என் ஜீவனைக் கொடுத்தேன். அவர்கள் என் உள்ளங் கைகளில் வரையப்பட்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார். CCh 748.1