Go to full page →

அத்தியாயம்-66 CCh 750

இதோ சீக்கிரமாய் வருகிறேன் CCh 750

சமீப காலத்திலே ஒரு இரவு வேளையில் என்னுடைய மனது பரிசுத்த ஆயினால் உணர்த்தப்பட்ட பொழுது. நான் நம்புகிற பிரகாரமாக கர்த்தர் சீக்கிரமாய் வருவதாயிருந்தால். நாம் சத்தியத்தை ஜனங்களுக்கு முன்பாக வைப்பதற்கு இன்னமும் அதிகமாக செயல் புரிய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றிற்று. இதை யடுத்து 1843, 1844-ம் வருஷங்களில் அட்வெந்து விசுவாசிகள் செயல் புரிந்ததை நான் நினைத்தேன். அப்பொழுது அடிக்கடி வீடு வீடாகச் சந்தித்தோம். தெய்வ வசனத்தில் கூறப்பட்டிருப்பதைக் குறித்து, ஜனங்களை எச்சரிப்பதற்குத் தளராத முயற்சிகள் செய்தோம். அத்தனை உண்மையாக முதல் தூதனின் தூதைக் கூறி அறிவித்தவர்கள் செய்த முயற்சிகளைப் பார்க்கிலும், அதிகமான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும். இந்த உலக சரித்திரத்தின் முடிவை நாம் விரைவாக நெருங்குகின்றோம். இயேசுவானவர் விரைவில் வருகிறாரென்று உணரும் பொழுது ஒருபொழுதும் நாம் செய்யாத பிரகாரமாக ஊழியம் செய்வதற்கு ஏவப்படுவோம். ஜனங்களுக்கு எச்சரிப்பின் சத்தத்தை முழங்குவதற்கு நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நம்முடைய சொந்த வாழ்விலே நீதியின் வல்லமையையும் சத்தியத்தின் வல்லமையையும் நாம் விளங்கச் செய்ய வேண்டும். தெய்வ பிரமாணத்தை மீறினதினிமித்தமாக உலகம் அவரைச் சந்திக்க வேண்டியதாகிறது. மீறுதலினின்று நீங்கி கீழ்ப்படிகிறவர்கள் மாத்திரமே மன்னிப்பையும், சமாதானத்தையும் பெறுவார்கள். CCh 750.1

ஜீவ வசனமாக இருக்கும் சத்தியத்தைப் பெற்ற அனைவரும் அதைப் பெறாதிருக்கிறவர்கள் அந்த அறிவை அடைவ தற்கு உழைப்பார்களென்றால், எவ்வளவு நன்மை விளையும்! சமாரிய ஸ்திரீ கூறியதைக் கேட்டு, கிறிஸ்துவண்டை வந்த சமாரியரைக் குறித்து அப்பொழுதே வயல் அறுவடைக்கு ஆயத்தமாய் இருப்பதாக கிறிஸ்துவானவர் தம்முடைய சீஷர்களிடத்திலே பேசினார். “அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” யோவா. 4 : 35. சமாரியர் சத்தியத்தின் மேல் பசியாயிருந்த படியால் அவர்களுடனே கிறிஸ்துவானவர் இரண்டு நாள் தங்கினார். அந் நாட்கள் எத்தனை சுறுசுறுப்பானவை! அந் நாட்களின் உழைப்பின் பலனாக “அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அனேகர் விசுவாசித்தார்கள்.” அவர்களுடைய சாட்சி மொழி இது: “அவருடைய உபதேசத்தை நாங்கள் கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக இரட்சகர் என்று அறிந்து விசுசாசிக்கிறோம்.” (யோவான் 4 : 41, 42.) 3T. T.435, 436. CCh 750.2