Go to full page →

பொருத்தனை பரிசுத்தமானது CCh 156

ஒவ்வொருவனும் தனக்குத் தானே நீதிபதியாயிருந்து, தன் இருதயத்தில் நிர்ணயிக்கிறபடி கொடுக்கலாம். ஆனால் அனேகர் அனனியா சப்பிராளைப் போல தசமபாகத்தை வஞ்சித்து, தங்கள் சகோதரர்கள் அறியமாட்டார்களென எண்ணி, அதே பாவத்தைச் செய்கிறார்கள். இப்படிச் சிந்தித்து குற்றவாளிகளான தம்பதிகள் நமக்கு எச்சரிப்பின் உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவ மூலம் தேவன் நம் இருதயங்களை ஆராய்கிறாவர் என்பதைரூபிக்கிறார். மனிதனுடைய நோக்கங்களும் திட்டங்களும் அவருக்கு மறைவாக இருக்க முடியாது. மனிதனில் தொடர்ந்து காணப்படும் பாவத்தைக் குறித்து ஜாக்கிரதை யாயிருக்கும்படி தேவன் கிறிஸ்தவர்களுக்கு ஓர் நித்திய எச்சரிப்பை கொடுத்திருக்கிறார். CCh 156.2

எழுத்தாலோ, சொல்லாலோ நாம் நம் சகோதரர்களுக்கு முன் நமக்கும் தேவனுக்குமிடையே செய்த பொருத்தனைக்கு அவர்களே வெளிப்படையான சாட்சிகள். அப்பொருத்தனை மனிதனிடம் செய்யப்படவில்லை. ஆனால் பிறனுக்கு எழுதிக் கொடுக்கும் யாதாஸ்தைப்போல் அது தேவனுக்குக் கொடுக்கப்பட்டதாகும். தேவனுக்குச் செய்த பொருத்தனையைப்போன்று, வேறேந்த யாதாஸ்தும் அவ்வளவாக் கட்டுப்படுத்தாது. CCh 157.1

உடன் மனிதனுக்குக் கொடுத்த வாக்கை மாற்றிக் கொள்ளப் பொதுவாக மனிதர் யோசிப்பதில்லை. எல்லா ஈவுகளையும் அருளிய கடவுளுக்குச் செய்த பொருத்தனை இதை விட முக்கியத்துவம் வாய்ந்தது; அப்படியானால் ஏன் நாம் அதிலிருந்து விலகிக்கொள்ள முயலவேண்டும்? நீதிஸ் தலங்களுக்கு இப்பொருத்தனைகள் கொண்டுபோகப்படாதவையாதலால் அவைகளுக்கு மதிப்புக் குறைவா? அவைகள் தேவனுக்குக் கொடுத்த வாக்குகளானபடியால் ஒருவன் அவைகளை குறைவாக மதிக்கலாமா? நீதி ஸ்தலங்களுக்கு கொண்டு போகப்படாதென்பதினால் அவைகளுக்கு மதிப்பு மதிப்பு குறைவாகுமா?இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் விலையேறப்பெற்ற தியாகத்தினால் மீட்கப்பட்டதாகக் கூறிக் கொள்ளும் ஒருவன் தேவனை வஞ்சிக்கலாமா? அவனுடைய பொருத்தனைகளும், செய்கைகளும் பரலோக நீதி ஸ்தலத்திலுள்ள தராசுகளில் நிறுக்கப்படுகிறதில்லையா? CCh 157.2

ஒரு சபை அதன் அங்கத்தவர்கள் செய்த பொருத்தனைகளுக்குப் பொறுப்பாகும். தன் பொருத்தனைகளைச் செய்ய அசட்டைபண்ணும் ஒரு சகோதரனை சபையார் கண்டால், அவனிடம் பட்சத்தோடும் தெளிவோடும் அதைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். உத்தமனாயிருந்து அவன் தன் பொருத்தனையை நிறைவேற்றக்கூடாத சூழ் நிலையிலிருக்கக் கண்டால், சபை அவனுக்கு அனுதாபத்துடன் உதவ வேண்டும். இப்படி சிக்கல்களை நீக்கி, தாங்களே ஆசீர்வாதங்களைப் பெறலாம். 4T. 469-470. CCh 157.3