Go to full page →

ஸ்தோத்திர காணிக்கை ஏழைகளுக்குரியது CCh 158

ஒவ்வொரு சபையிலும் ஏழைகளுக்கென நிதி இருக்க வேண்டும். தனக்கு வசதிபோல், ஒவ்வொருவரும் வாரம் ஒரு முறை, அல்லது மாதம் ஒரு முறை ஸ்தோத்திரக் காணிக்கை செலுத்துவானாக. சுகம், ஆகாரம், ஆடையாவையும் கடவுள் தந்து வருகிறாரேன அது நம் நன்றியைக் காட்டும் காணிக்கையாக இருப்பதாக. தேவன் நம்மை ஆசீர்வதித்தற்குத் தக்கபடி, துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், ஏழைகளுக்கென நாம் கொடுக்கலாம். இதைக் கவனிக்கும்படி விசேஷமாக நம் சகோதரரை அழைக்கிறேன். ஏழைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெரு வாழ்வைக் குறைத்து, ஆம், செளகரியங்களையும் குறைத்து, மிகவருந்தி, ஆகாரமும் ஆடையுமின்றி தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இப்படி அவர்களுக்குச் செய்வதினால் நீங்கள் அவருடைய பரிசுத்தவான்களின் மூலம் கிறிஸ்துவுக்கே செய்கிறீகள். துயரப்படும் மனுக்குலத்தோடு அவர் தம்மை ஒன்றிக்கிக் கொள்ளுகிறார். உங்கள் மனதில் தேவைகளாகத் தோன்றும் யாவையும் அடைந்து தீருமட்டும் காத்திருக்க வேண்டாம். மனமுண்டானால் கொடுத்தும், மனமில்லையானல் கொடாமலுமிருக்கும்படி உங்கள் மனவுணர்ச்சிகளின் போக்கில் போகதிருங்கள். தேவனுடைய நாளில் பரலோக புத்தகங்களில் காணும்படி விரும்புகிறவர்கள் போல . . . ஒழுங்காகக் கொடுங்கள். 5T. 150,151. CCh 158.1