Go to full page →

வேலைக் கதிபதிகள் LST 162

வாலிபர் ஜீவனின் பிரியமற்ற வேலைகளுக்கும் பளுவான பாரங்களுக்கும் தப்பித்துக் கொள்வ தெவ்வாறு என்று கல்வி போதிக்கிறதில்லை என்னும் கருத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். மேலான முறைகளையும் உன்னதமான நோக்கங்களையும் கற்பித்து வேலையை இலகுவாக்குவதே கல்வியின் நோக்கம். அவர்கள் தங்களுக்கென்று பெரிய லாபத்தை அடைகிறதல்ல, ஆனால் உலக வேலையில் தங்கள் பாகத்தைச் செய்கிறதினாலும் தங்களிலும் பெலவீனமான அல்லது அறிவீனமானவர்களுக்கு உதவி செய்கிறதினாலும் தங்கள் ஆண்டவரை மகிமைப் படுத்துவதே ஜீவனின் மெய்யான நோக்கமென்பதை அவர்களுக்குப் போதியுங்கள். LST 162.2

திருத்தமின்றி யோசனையற்ற விதமாய் சரீர வேலை அடிக்கடி செய்யப் படுகிறதினாலேயே அது அற்பமாய் எண்ணப் படுகிறதிற்கு முதல் பெரிய காரணமாம். அது பிரியத்தினிமித்தமல்ல, அவசியத்தினிமித்தம் செய்யப்படுகிறது. வேலையாள் வேலையில் முழு மனதையும் செலுத்துகிறதில்லை, அன்றியும் அவன் தன மரியாதையை விரும்புகிறதுமில்லை. கைத்தொழில் பயிற்சி இத் தப்பிதத்தைச் சரிப்படுத்த வேண்டும். திட்டம், திருத்தத்தின் பழக்கங்களை அது ஸ்திரப்படுத்த வேண்டும். மாணவர் யூகமாயும் கிரமமாயும் நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ளவேண்டும்; காலத்தைச் செட்டிமைப் படுத்தவும் ஒவ்வொரு நிமிஷத்தையும் பிரயோஜனப் படுத்தவும் அவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும், அவைகளை எப்பொழுதும் விருத்தி செய்வதற்கான ஆசையையும் அவர்களில் ஏவி எழுப்ப வேண்டும் நரரின் முளைகளும் கைகளும் அதை எவ்வளவு பூரணமாய்ச் செய்யக்கூடுமே அவ்வளவு பூரணமாய் தங்கள் வேலையைச் செய்ய வேண்டுமென்பதே அவர்கள் நோக்கமாயிருக்கட்டும். LST 162.3

அத்தகைய பயிற்சி வாலிபரை வேலையின் அடிமைகளாக்காமல் அதிபதிகளாக்கும். அது கஷ்ட உழைப்பாளியின் பங்கை இலகுவாக்குவதுடன் தாழ்வான எத்தொழிலையும் கனமுள்ளதாக்கும். எவனொருவன் வேலையை குற்றேவலராக மாத்திரம் கருதிக் கொண்டு விருத்தியடைவதற்கு எவ்வித பிரயத்தினமும் செய்யாமல் சுயமரியாதையுள்ள மௌதேகத்தில் அதை நோண்டிக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு உள்ளபடி அது ஒரு பாரமாகத்தான் இருக்கும். ஆனால் தாழ்வான வேலையிலுள்ள விஞ்ஞானம் காண்போருக்கு அதிலுள்ள மேன்மையும் அழகும் தெரியும்; அவர்கள் அதை உண்மையாயும் செம்மையாயும் செய்வதில் இன்புறுவார்கள். LST 163.1

அத்தகைய பயிற்சி பெற்ற வாலிபனுடைய ஜீவிய அழைப்பு எத்தகையதாயினும் அது உத்தம அழைப்பாயிருக்கிற படியினால், அவன தன உத்தியோகத்தை பிரயோஜனமும் கனமுமானதோர் உத்தியோகமாக்கிக் கொள்வான். ---- Ed. 218-22. LST 163.2