Go to full page →

ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் LST 167

ஒவ்வொரு ஜோடி கரங்கள் வேலை செய்ய ஊக்கமான வேலையுண்டு. ஒவ்வொரு வேலையும் மானிடரின் ஈடேற்றத்திற்காயிருப்பதை காண்பிப்பதாக. உதவி செய்யப்பட வேண்டியவர்கள் அநேக ருண்டு. தன்னைத்தானே பிரியப்படுத்தும்படி ஜீவிக்காமல் சொற்ப ஆசீர்வாதங்களுக்குள்ள மற்றவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமயிருக்கு வேண்டுமென்று ஜீவிக்கிறவனுடைய இருதயம் திருப்தியடைந்து பூரிக்கும். சோம்பேறிகள் விழித்து வாழ்வின் தத்துவார்த்தமான காரியங்களை எதிர்பார்ப்பார்களாக. தேவ வார்த்தையை எதுத்து அதின் பக்கங்களை ஏடு ஏடாக ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள் வசனத்தின்படி செய்கிறவர்களாய் இருந்தால் ஜீவியம் உண்மையில் உங்களுக்கு உயிருள்ள தத்துவார்த்தமான காரியமாயிருப்பதுடன் பலன் மிகுதியாயிருக்கக் காண்பீர்கள். LST 167.4

தமது பெரிய நோக்கத்தில் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் வைத்திருக்கிறார். அவசியப்படாத தாலந்துகள் அருளப் படுகிறதில்லை. தாலந்து கொஞ்சமாய் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். தேவன் அதற்கு ஓர் இடம் வைத்திருக்கிறார். அந்த ஒரு தாலந்தும் உண்மையாய் உபயோகிக்கப்பட்டால் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிற அதே வேலையை அது செய்யும். மனத் தாழ்மையுள்ள குடிசை வாசியின் தாலந்துகள் வீடுவீடாக வேலை செய்ய அவசியப்படுகிறது. அவை கீர்த்தி பெற்ற வரங்களை விட அதிகம் செய்யக் கூடும். LST 168.1