Go to full page →

தவறி நடப்போரைச் சீர்ப்படுத்தல் LST 173

காணமற்போன வெள்ளிக் காசு தவறி நடப்போரையும் வழி தப்பித் திரிவோரையும் குறிக்கும்படி சொல்லப் பட்டிருக்கின்றது. காணாமற் போன வெள்ளிக் காசைக் கண்டுபிடித்த ஸ்திரீயானவாளின் ஜாக்கிரதை நீதியின் பாதையை விட்டு வழிதப்ப நடப்போரின் விஷயமாய் கிறிஸ்துவின் பின்னடியார்களுக்கிருக்க வேண்டிய கடமையைக் குறித்து அவர்களுக்கு ஓர் பாடம் போதிக்கிறதாயிருக்கிறது. ஸ்திரீயானவள் அதிக வெளிச்சமுண்டாகும் படி விளக்குக் கொளுத்தினாள், பிறகு வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடினாள். LST 173.2

தேவனை விட்டு வழிதப்பிப் போனதனிமித்தம் உதவியைத் தேடுகிறவர்களின் விஷயமாக கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய கடமை இங்கே தெளிவாய் விஸ்தரிக்கப் பட்டிருக்கிறது. தவறி நடப்போர் அந்தகாரத்திலும் தப்பிதமான மார்க்கத்திலும் இருக்கும்படி விட்டுவிடக் கூடாது. ஆனால் திரும்பவும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்படிக்குக் கிடைக்கத்தக்க சகல வழி வகைகளையும் கையாட வேண்டும். விளக்கு கொளுத்தப் பட்டிருக்கிறது; அந்தகாரத்திலும் அவிசுவாசத்திலும் மூடப்பட்டிருப்போரின் காரியங்களைக் கவனிப்பதற்கு பரம வெளிச்சமுடைய ஊக்கமான ஜெபத்துடன் சத்தியத்தின் தெளிவான விஷயங்கள் அடங்கிய தேவ வசனம் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. தவறி நடப்போரிடம் போகத் தக்கதாக கிறிஸ்தவர்கள் தேவ வசனத்தின் நியாயங்களினாலும் அதின் கண்டிப்புரைகளினாலும், பயமுறுத்தல்களினாலும், தைராய் வார்த்தைகளினாலும் தங்களைப் பெலப்படுத்திக் கொள்ளலாம். இவ்விசயத்தில் அஜாக்கிரதையாய் அல்லது அசட்டையாயிருந்தால் அது தேவனுக்கு பிரியமாய் இராது. LST 173.3