Go to full page →

சிலுவை நீக்கப்பட்டது LST 22

நான் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், இயேசுவின் புண் சிரிப்புகள் மாத்திரம் என் இருதயத்தைச் சந்தோஷபிக்கக் கூடுமானால், அவர் எனக்குக் கட்டளையிடும் எதையும் எவ்வளவு கஷ்டப்பட்டாயினும் செய்வேன் என்ற தீர்மானத்துடன் நான் மறுபடியும் கர்த்தர் முன்னிலையில் போனேன். முன்னே என் மனதிற்குக் கலக்கமுண்டாகின் அதே கடமை எனக்குத் திரும்பவும் காட்டப்பட்டது. தேவனுடைய ஜனங்களோடு என் சிலுவையை எடுப்பது தான் அக்கடமை. சீக்கிரத்தில் சமயம் கிடைத்தது; அன்று சாயரட்சை என் சிற்றப்ப வீட்டில் ஜெபக் கூட்டம் நடந்தது, அதற்கு நான் போயிருந்தேன். LST 22.3

ஜெபத்திற்கு மற்றவர்கள் முழங்காற்படியிட்ட பொது நானும் அவர்களுடன் பணிந்து முழங்காற்படியிட்டேன். சிலர் ஜெயித்ததும் என்னை அறியாமலே என் சப்தம் ஜெபத்தில் எழும்பிற்று. அத்தருணம் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் கேட்போருக்கு மாத் திரம் கிடைக்கக் கூடிய அனேக அருமையான முத்துக்களைப் போல எனக்குக் காட்டப்பட்டன. நான் ஜெபிக்கையில் வெகு காலமைச் சுமந்து கொண்டிருந்த ஆத்தும பாரமும் வேதனையும் என்னை விட்டு நீங்கினது; கர்த்தரின் ஆசீர்வாதம் மெதுவாயிறங்கும் பனியைப் போல் என் மீதிறங்கினது. என் உள்ளத்தின் ஆழங்களிலிருந்து தேவனைத் துதித்தேன். இயேசுவும் அவருடைய மகிமையுமே ஒழிய வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை. என் பக்கத்தில் நடந்ததென்னவென்பது எனக்கு ஒன்றும் தெரியாது. உணர்ச்சியற்றுப் போனேன். LST 22.4

அன்றிரவு நான் வீட்டிற்குப் போக முடியாதபடிக்கு அவ்வளவு வல்லமையாய்த் தேவ ஆவியானவர் என் மேல் தங்கினார். அறிவு தெளிந்து நான் விழித்துப் பார்த்த பொது, நாங்கள் ஜெபக் கூட்டத்திற்காகக் கூடியிருந்த என் சிற்றப்பா வீட்டில் என்னைப் பத்திரமாய் வைத்துப் பராமரித்ததாகக் கண்டேன். அடுத்த பகல் நான் திரும்ப வீட்டுக்கு வந்த பொது, என் மனதில் பெரிய மாறுதல் உண்டாயிருந்தது. முந்தின சாயங்காலத்தில் நான் என் தந்தை வீட்டை விட்டுப் புறப்பட்ட அதே ஆளாயிருந்ததாக எனாக்குத் தோன்றவில்லை. “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்” என்னும் வசனம் எப்பொழுதும் என் எண்ணத்திலிருந்தது. சங் 23:1. இவ்வார்த்தைகளை நான் மெதுவாய்த் திரும்பவும் உச்சரித்த போது என் உள்ளம் சந்தோஷத்தால் பொங்கிற்று. LST 23.1