Go to full page →

பரிசுத்தவான்கள் பரமேறுதல் LST 34

நாங்கள் யாவரும் ஒன்றாய் மேகத்தில் பிரவேசித்துக் கண்ணாடிக் கடலுக்கு ஏழு நாட்கள் ஏறிச் சென்றோம்; அப்பொழுது இயேசு கிரீடங்களைக் கொண்டுவந்து, தமது சொந்த வலது கரத்தினாலே அவைகளை எங்கள் சிரசின் மேல் வைத்தார். பொற் சுரமண்டலங்களையும் ஜெய ஓலைகளையும் அவர் எங்களுக்குத் தந்தார். இங்கே கண்ணாடிக் கடலின் மேல் 144000 பெரும் பூரண சதுர வடிவமாய் நின்றார்கள். அவர்களில் சிலருடைய கிரீடங்கள் மிகவும் பிரகாசமாயிருந்தன. மற்றவர்களுடயவை அவ்வளவு பிரகாசமாயில்லை. சிலருடைய கிரீடங்கள் நட்சத்திரங்களால் பளுவாய்க் காணப்பட்டன. மற்றவர்களுக்கு நட்சத்திரங்கள் சொற்பமாயிருந்தன, ஆனாலும் தங்கள் கிரீடங்களோடு எல்லோருக்கும் பூரண திருப்தி. மேலும் அவர்கள் யாவரும் தங்கள் புயங்கள் முதல் பாதங்கள் வரை ஒரு மகிமையான வெள்ளைச் சால்வை அணிந்திருந்தனர். நாங்கள் கண்ணாடிக் கடலைத் தாண்டி நகரத்தின் வாசலுக்குச் சென்றபோது தூதர்கள் எங்களைச் சுற்றியிருந்தனர். இயேசு தமது மகத்துவமும் மகிமையுமுள்ள புயத்தை உயர்த்தி முத்து வாசலைப் பிடித்து மினுமினு வென்றிருந்த அதின் கீல்களுக்குப் பின்னால தள்ளிக்கொண்டு, எங்களைப் பார்த்து “நீங்கள் உங்கள் அங்கிகளை என் இரத்தத்தில் துவைத்துக் கொண்டு என் சத்தியத்திற்காக உறுதியாய் நின்றீர்கள், உள்ளே பிரவேசியுங்கள்” என்றார். நாங்கள் யாவரும் உள்ளே பிரவேசித்ததும் எங்களுக்கு அந்நகரத்தில் எங்கும் பூரண சுதந்திர மிருந்ததெனக் கண்டோம். LST 34.1