Go to full page →

நம் முன் ஓர் சோதனைக்காலம் LST 123

சீக்கிரத்தில் உலகமெங்கும் உபத்திரவமுண்டாகும், ஒவ்வொரு வரும் தேவனை யறியும்படி தேட வேண்டியது அவரவர் கடமையாகும் . தாமதித்திருக்க நமக்குச் சமயமில்லை. LST 123.3

சபையைப்பற்றித் தேவன் கொண்டிருக்கும் அன்பு மட்டற்றது. அவர் தமது சுதந்தரத்தின் பேரில் சதா கவலை யுள்ளவராயிருக்கிறார். சபையை சுத்திகரிப்பதற்கும் அதின் தற்கால தன்மைக்கும் நித்திய நன்மைக்கும் அவசியமான உபத்திரத்தைத் தவிர வேறேவ்வித உபத்திரவமும் அதற்கு வர அவர் இடங்கொடார். அவர் பூமியிலே தமது ஊழியத்தை தொடங்கும்போதும் அதை முடிக்கும்போதும் ஆலயத்தைச் சுத்திகரித்தாற்போல தமது சபையையும் சுத்திகரிப்பார். தமது ஜனங்கள் மிகுந்த பக்தியும் பெலமும் அடைந்து உலகமெங்கும் சிலுவை வெற்றிகளைக் கொண்டு போவதற்கென்றே அவர் சபைக்கு பரிட்சையையும் துன்பத்தையும் வருவிக்கிறார். எல்லாரும் செய்வதற்கு அவரிடம் ஓர் வேலையுண்டு. LST 124.1

எப்பொழுதும் பெருகி விருத்தியடைய வேண்டும். வேலை ஒவ்வொரு நகரத்திற்கும் தேசத்திற்கும் ஜாதிக்கும் போய் மேன் மேலும் முன்னேறி பெலமும் ஸ்திரமும் உறுதியும் பெற வேண்டும்.-- 9T 228 LST 124.2