Go to full page →

உயிரோடிருப்பவர்களுக்கு நடைபெறும் நியாயத்தீர்ப்பு!, ஆகஸ்டு 30 Mar 483

“ஆகையால் நீ கேட்டு பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்.” -வெளிப்படுத்தல் 3:3. Mar 483.1

நியாயத்தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்ட அந்த வேளையிலே அதாவது, 1844-ம் ஆண்டில் — 2300 நாட்களின் முடிவிலே, நுட்ப நியாய விசாரணையும் பாவங்கள் கிறுக்கப்படும் வேலையும் ஆரம்பமானது. கிறிஸ்துவின் நாமத்தை என்றாவது தங்கள்மீது எடுத்துக்கொண்ட அனைவரும் நுட்பமாகச் செய்யப்படும் இந்த ஆய்வை கடந்துசெல்லவேண்டும். “புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” உயிரோடிருந்தவர்களும் மரித்தவர்களும் நியாயந்தீர்க்கப்பட்டார்கள் —வெளி. 20:12. “அனைவரும் தங்களது விசுவாசத்தின்படி நீதிமான்களாக ஆக்கப்பட்டு, தங்களது கிரியைகளின்படியே நியாயம் தீர்க்கப்படுவார்கள்” என்று நியாயாதிபதி கூறினார். Mar 483.2

மனம் வருந்தி அறிக்கைசெய்யப்படாத-விட்டுவிடப்படாத அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படாது; அவைகள் பதிவேடுகளினின்றும் அகற்றப்பட மாட்டாது. ஆண்டவருடைய அந்த நாளிலே, பாவிக்கு எதிராக, அது ஒரு சாட்சியாக நிற்கும். Mar 483.3

யாரெல்லாம் தீய மனப்பாங்குகள் மேலாதிக்கஞ் செலுத்தத்தக்கதாக முனைப்பாக கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்களோ, அவர்களுக்கு முன்பாக, தீவிரமான போராட்டம் இருக்கிறது. ஆயத்தமாகும் வேலையானது, ஒவ்வொரு நபரும் செய்யவேண்டிய தனிப்பட்ட வேலையாகும். நாம் குழுக்களாக இரட்சிக்கப்படுகிறதில்லை. ஒருவருடைய தூய்மையும் பயபக்தியும் இத்தகைய குணங்கள் பெற்ற இன்னொருவரது குறைகளை ஈடுசெய்துவிடாது. அனைத்து ஜாதிகளும் அவரது நியாயதீர்ப்பிற்கடியில் கடந்து செல்ல வேண்டியதிருப்பினும், அவர் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட காரியத்தையும் பூமியின்மீது வேறு எவருமே இல்லாததுபோன்று, மிகவும் நெருக்கமாகவும், மிகவும் நுட்பமான ஆராய்ச்சியோடும் விசாரணை செய்வார். ஒவ்வொருவரும் சோதிக்கப்பட்டு, கரை திரை மற்றும் வேறுஎதுவும் இல்லையென்பதாக்க் கண்டறியப்பட வேண்டும். Mar 483.4

பரலோகத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்தில், இந்த நுட்ப நியாய விசாரணையானது நடந்துகொண்டிருக்கிறது; பல ஆண்டுகளாக இந்தப் பணி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் — ஒருவருக்கும் தெரியாது எவ்வளவு சீக்கிரத்தில்-இந்த நியாய விசாரணையானது உயிரோடு இருப்பவர்களுக்கும் கடந்து வரும் என்று தெரியாது. அந்த பயங்கரமான, தேவ சமூகத்தில் நமது ஜீவியங்கள் பரிசீலனைக்குக் கொண்டுவரப்படும். இச்சமையத்திலே எல்லாவற்றையும்விட மீட்பர் கூறியுள்ளபடி, “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்” (மாற்கு 13:33) என்ற எச்சரிப்பை ஒவ்வொரு ஆத்துமாவும் கவனித்திருப்பது இன்றியமையாததாகும்; “ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன் மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்” — வெளிப்படுத்தல் 3:3. ⋆ Mar 484.1

வாக்குத்தத்த வசனம்: Mar 484.2

“ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” - பிரசங்கி 12:14. Mar 484.3