Go to full page →

நுட்ப நியாயவிசாரணை!, ஆகஸ்டு 31 Mar 485

“சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத் தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின் தொடரும்.” - 1 தீமோத்தேயு 5:24. Mar 485.1

நுட்ப நியாய விசாரணையின் வேலையும், பாவங்கள் அகற்றிப்போடப்படுதலும் நமது ஆண்டவருடைய இரணடாம் வருகைக்கு முன்பாக நிறைவேற்றப்படவேண்டியவைகளாகும். மரித்தவர்களுக்கு பதிவேடுகளில் அவர்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் காரியங்களை வைத்து நியாயந்தீர்க்கப்படவேண்டியதிருப்பதால் நியாயத்தீர்ப்பு முடியும்வரை மனிதர்களின் பாவங்கள் அகற்றப்படுவது கூடாத காரியமாகும். அச்சமயத்தில் தான் அவர்களது காரியங்கள் நியாயம் விசாரிக்கப்பட முடியும். நுட்ப நியாய விசாரணை முடிவடையும்போது கிறிஸ்து வருவார். ஒவ்வொரு மனிதனுடைய கிரியைகளுக்குத்தக்கதாக வழங்கப்படவிருக்கும் வெகுமதி அவரோடுகூட வரும். Mar 485.2

பதிவேடுகளில் எழுதப்பட்டவைகளின்படி, அனைவரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள்; அவர்களது கிரியைகளுக்குத்தக்கதாக வெகுமதி அளிக்கப்படும். இந்த நியாயவிசாரணை, மரித்தவுடன் நடைபெறுவதல்ல. Mar 485.3

ஆசரிப்புக்கூடாரத்தின் நிழலாட்டமான ஆராதனையிலே பிரதான ஆசாரியன், இஸ்ரவேல் ஜனங்களுக்காக பாவ நிவாரணம் செய்த பின்னர் வெளியே வந்து, அங்கு குழுமியிருக்கும் சபையாரை ஆசிர்வதிப்பார். இயேசுவும் தமது மத்தியஸ்த வேலை முடிவடைந்தவுடன், நித்தியஜீவனுக்காகக் காத்திருக்கும் மக்களை ஆசிர்வதிப்பதற்காக-இரட்சிப்பதற்காகக்-பாவமில்லாமல் தரிசனமாவார். ஆசாரியனாக, ஆசாரிப்புக்கூடாரத்திலிருந்து பாவங்களை அகற்றுவதிலே, போக்காட்டின் தலையின்மீது பாவங்களை அறிக்கை செய்து முடிப்பான்; அதுபோன்று, கிறிஸ்துவும் பாவத்தை ஆரம்பித்தவனும் தூண்டியவனுமாகிய சாத்தான்மீது அனைத்துப்பாவங்களயும் வைப்பார். Mar 485.4

போக்காடானது, இஸ்ரவேலரின் பாவங்களைச் சுமந்தபடியே குடியில்லாத வனாந்திரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட்து. அதைப் போன்று, சாத்தானும் தேவனுடைய மக்களைத் தூண்டி, பாவஞ்செய்யவைத்த அனைத்துக் குற்றங்களயும் சுமந்தவனாக, ஓராயிரம் ஆண்டுகளுக்கு குடிமக்களில்லாத-பாழாகிக்கிடக்கும் இந்த பூமியிலே அடைக்கப்படுவான். இறுதியிலே, பாவத்தின் முழு தண்டனையும் துன்மார்க்கர் அனைவரையும் அழிக்கின்ற அந்த நெருப்பில் அனுபவிப்பான். Mar 486.1

இந்த பூமியில் குடியிருக்கிற மக்களில் சிலரே-ஆம்; வெகுசிலரே, நித்தியத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படியாக மீட்கப்படுவார்கள். சத்தியதிற்கு கீழ்ப்படிவதன்மூலம், தங்களது ஆன்மாக்களை பூரணப்படுத்தாத, பெருந்திரளான மக்கள், இரண்டாம் மரணத்திற்கென்று நியமிக்கப்படுவார்கள். Mar 486.2

பாவமன்னிப்பைப் பெற்ற விசுவாசிகளின் பாவங்கள், ஆசரிப்புக்கூடாரத்தினின்று அகற்றப்படும்பொழுது, பூமியிலே தேவனுடைய மக்களுக்கு மத்தியில், ஒரு சிறப்பான சுத்திகரிப்பின் வேலை, அதாவது பாவத்தை அகற்றிப்போடும் வேலை நடைபெறும்.⋆ Mar 486.3

வாக்குத்தத்த வசனம்: Mar 486.4

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” - நீதிமொழிகள் 28:13. Mar 486.5