Go to full page →

போலியான ஒரு எழுப்புதல்!, ஜனவரி 25 Mar 49

“மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தகப்பன்மாருக்கு கீழ்ப்படியாத வர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,.. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.” - 2 தீமோத்தேயு 3:1,2,5 Mar 49.1

பூமியின்மீது தேவன் அனுப்பப்போகும் நியாயத் தீர்ப்புகள் (தண்டனைகள்) இறுதியாக மக்களைச் சந்திப்பதற்கு முன்னர், அப்போஸ்தலர் காலத்திற்கு பின்னான காலங்களிலிருந்து இன்று வரை காணப்படாத அளவிற்கு, ஆண்டவருடைய மக்கள் மத்தியிலே எழுப்புதலோடுகூடிய, ஆரம்பகாலத்தில் இருந்ததுபோன்ற, தேவபக்தி காணப்படும். ஆவியும், தேவனுடைய வல்லமையும் அவரது பிள்ளைகளின்மீது ஊற்றப்படும். இவ்வுலகத்தின்மீது கொண்ட அன்பானது தேவன் மீதும், அவரது வசனத்தின் மீதும் கொண்டிருந்த அன்பை அகற்றிப் போட்டது; எனவே அப்படிப்பட்ட சபைகளினின்று அநேகர் அந்தச் சமயத்தில் விலகிக் கொள்வார்கள். ஆண்டவரது இரண்டாம் வருகைக்காக, ஒரு ஜனத்தை ஆயத்தம் பண்ண வேண்டிய அச்சமயத்தில், கூறியறிவிக்க வேண்டுமென்று தேவன் திட்டமிட்டிருந்த மாபெரும் சத்தியங்களை அநேக ஊழியர்களும், மக்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆத்துமாக்களுக்கு விரோதியான சாத்தான், இந்த வேலையைத் தடைசெய்ய விரும்புகிறான். இத்தகைய இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்படும் முன்னரே, ஒரு போலியான அற்புதங்களை அறிமுகப்படுத்தி, அந்த வேலையைத் தடைசெய்ய சாத்தான் முயற்சிப்பான். தனது வஞ்சகமிக்க வல்லமைக்கு அடியில் அவன் கொண்டுவரக்கூடிய சபைகளில், தேவனுடைய விசேஷித்த ஆசீர்வாதம் ஊற்றப்பட்டது போன்று தோற்றமளிக்கச் செய்வான். ஒரு மாபெரும் மார்க்க சம்பந்தமான எழுப்புதல் ஏற்பட்டது போன்று எண்ணப்பட்டு, வெளியரங்கமாகக் காட்டப்படும். திரளான கூட்டத்தார், தேவன் தங்களுக்காக அற்புதமான முறையில் கிரியை செய்கிறார் என்று எக்களிப்பார்கள்; ஆனால் அந்த வேலையோவேனில், வேறொரு ஆவியினால் ஏற்பட்டதாகும். மார்க்க சம்பந்தமான மாறுவேடத்திற்கு அடியில், கிறிஸ்தவ உலகத்தின்மீது, சாத்தான் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பான். Mar 49.2

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட அநேக எழுப்புதல்களில், சாத்தானின் இதே செல்வாக்கானது பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ பயன்படுத்தப்பட்டு வந்தது. எதிர்காலத்தில் மிகப் பரவலான இயக்கங்களில் இக்காரியம் வெளிப்படும். அந்தக் கூட்டங்களில் உணர்ச்சிகளின் எழுச்சி காணப்படும். பொய்யோடு உண்மையானது கலந்துகிடக்கும். இவ்வாறு தவறான வழியில் நடத்துவதற்காக நன்கு பொருத்தமாக அமைத்துக் காட்டப்படும்; எனினும், எவரும் எமாற்றமடையத் தேவையில்லை. தேவனுடைய வசனத்தின் வெளிச்சத்திலே இத்தகைய இயக்கங்களின் தன்மைகளைத் தீர்மானிப்பது கடினமல்ல. எங்கெல்லாம் வேதகாம சாட்சியை மக்கள் அலட்சியப் படுத்துகிறார்களோ, எங்கெல்லாம் உலகப்பற்றித் துறந்து, தன்னலத்தை அறவே வெறுக்கும்படி வேண்டுகின்ற, மிகத் தெளிவான ஆத்தும பரிசீலனை செய்கின்ற சத்தியங்களினின்று மக்கள் விலகிவிடுகிறார்களோ, அங்கெல்லாம் தேவனுடைய ஆசீர்வாதம் பொழியப்படாது என்று நாம் நிச்சயமாக அறிந்துகொள்ளலாம்; மேலும், கிறிஸ்து தாமே கொடுத்த கட்டளையின்படியே: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத்தேயு 7:16) என்ற வசனத்தின்படி, இந்த இயக்கங்கள் அனைத்தும் தேவ ஆவியினால் நடைபெறுபவை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ((star)) Mar 50.1

வாக்குத்தத்த வசனம்: Mar 50.2

“.... நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால், என்றைக்கும் கைவிடுவார்” - 1 நாளாகமம் 28:9 Mar 50.3