Go to full page →

துணிகரமான — அக்கறையற்ற தாமதம்!, ஜனவரி 26 Mar 51

“இதோ, திருடனைப்போல வருகிறேன். தன மானம் காணப்பட்டதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக் கொண்டு, தன வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.” - வெளிப்படுத்தல் 16:15. Mar 51.1

பொல்லாத ஊழியக்காரன், “என் எஜமான் வர நான் செல்லும்” என்று தன இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். கிறிஸ்து வரமாட்டார் என்று அவன் சொல்லுகிறதில்லை. அவரது இரண்டாம் வருகையைக் குறித்து கேலிசெய்கிறதுமில்லை; ஆனால், அவனது இதயத்திலும் மற்றும் அவனது செயல்கள், வார்த்தைகள் மூலமாகவும் ஆண்டவரின் வருகை தாமதமாகும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறான். ஆண்டவர் சீக்கிரமாக வருகிறார் என்று உறுதியாகத் தெரிவிக்கிறான். ஆண்டவர் சீக்கிரமாக வருகிறார் என்பதைக் குறித்து மற்றவர்கள் மனதிலே உறுதியாகக் கொண்டிருக்கும் கருத்தை அகற்றிப்போடுகிறான். அவனுடைய செல்வாக்கானது துணிகரமான அக்கறையற்ற தாமதத்திற்கு மனிதரை வழிநடத்திச் செல்லுகிறது... அவன் உலகத்தோடு கலந்திருக்கிறான்... இது ஆபத்தான நிலையில் உலகத்தோடு ஒன்றிப் போகுதலாகும். உலகத்தோடு அவனும் சேர்ந்து கண்ணியில் அகப்பட்டுக்கொள்ளுகிறான். “... ணீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்” - வெளிப்படுத்தல் 3:3. கிறிஸ்துவின் வருகை பொய்யான போதகர்களை அதிர்ச்சியடையச் செய்யும். அவர்கள் “சமாதானம், சௌக்கியம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எருசலேமின் விலுகைக்கு முன்பாக, இருந்த ஆசாரியார்களையும், போதகர்களையும் போல, உலகத்தின் செழுமையையும் மகிமையையும் அனுபவிக்கத்தக்கதாக, சபையை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலங்களின் அடையாளங்கள் இதை முன்னறிவிக்கின்றன; ஆனால், வேதவசனம் இதைக் குறித்து என்ன கூறுகிறது? “... அழிவு சடுதியாய் அவர்கள்மேல் வரும்” (1 தெச. 5:3) என்று கூறுகிறது. பூமி முழுவதும் வாசஞ்செய்யும் அனைவர்மேலும், இந்த உலகத்தை தங்களது வீடாக வைத்துக் கொண்டிருக்கிறவர்கள்மேலும், தேவனுடைய நாள் ஒரு கண்ணியைப் போல வரும்.. கலகம் நிறைந்த - தேவனுக்கு சம்பந்தமில்லாத - களியாட்டங்கள் நிறைந்த - இந்த உலகம் நித்திரையிலிருக்கிறது. இம்மைக்குரிய பாதுகாப்போடு நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது. மனிதர் ஆண்டவரின் வருகையை வெகுதூரத்திற்கு தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கைகளைக் குறித்து அவர்கள் நகைக்கிறார்கள். “...சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாக இருக்கிறதே” (2 பேதுரு 3:4) என்று சொல்லுவார்கள். “...நாளையத்தினம் இன்றையத்தினம் போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும்” (ஏசாயா 56:12) என்பார்கள். மேற்கூறப்பட்ட வசனங்களைக்கூறி, பெருமையுடன் தற்புகழ்ச்சி செய்கிறார்கள். சிற்றின்ப வேட்கையிலே மேலும் ஆழமாகச் செல்வோம் என்கிறார்கள்; ஆனால், “இதோ, திருடனைப்போல் வருகிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார். அவர் வருவார் என்று வாக்குத்தத்தம் எங்கே என்று உலகத்தார் ஏளனஞ்செய்கின்ற அந்த நேரத்திலேயே அடையாளங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. “சமாதானம், சௌக்கியம்” என்று உரத்த சத்தமிடும்பொழுது, அழிவு சடிதியாக வந்து கொண்டிருக்கிறது. சத்தியத்தை தள்ளிவிடுகிறவராகிய - கேலிசெய்கின்ற அந்த நபர், துணிகரமடையும்பொழுது, கொள்கைக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல், பலவிதமான பணம் சம்பாதிக்கும் வழிகளிலே வேலைகள் அதினதின் போக்கிலே தொடர்ந்து செய்யப்படும்பொழுது, மாணவன் வேதாகமத்தைத் தவிர, ஆரவ்த்தோடு மற்ற அனைத்துக் காரியங்களைப் பற்றியும் அறிவைத் தேடும்பொழுது, கிறிஸ்து திருடனைப்போல் வருகிறார்!⋆ Mar 51.2

வாக்குத்தத்த வசனம்: Mar 52.1

“தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.” - சங்கீதம் 147:11 Mar 52.2