Go to full page →

வஞ்சகக் செயலின் உச்சக்கட்டம்!, செப்டம்பர் 25 Mar 535

“என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.” - வெளிப்படுத்துதல் 3:10. Mar 535.1

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்க நெருங்க, சாத்தானும் அவனுடைய தூதர்களும் அடிமட்டத்தினின்று எழும்புகிறார்கள். சாத்தான் மனிதனைப்போன்று மாத்திரமல்ல, அவன் இயேசு கிறிஸ்துவைப்போன்ற தோற்றத்திலும் வருவான். சத்தியத்தைத் தள்ளிப்போட்ட இந்த உலகம் அவனை இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் ஏற்றுக்கொள்ளும். Mar 535.2

சாத்தானுடைய காலம் குறையக்குறைய அவனுடைய உக்கிரம் அதிகமாகிறது. அவனுடைய தந்திரங்களும், அழிவுகளும் இக்கட்டுக் காலத்திலே அதன் உச்சநிலையை எட்டும்… Mar 535.3

இந்த ஏமாற்றுகிற நாடகத்திலே, அதன் கிரீடமாக, சாத்தான் தானே கிறிஸ்துவின் வேடத்தைத் தரித்துக்கொள்வான். சபை தனது நம்பிக்கை பூர்த்தியடைவதற்கேதுவாக-நெடுங்காலமாக கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்திருக்கிறதாகச் சொல்லிக்கொண்டிக்கிறது; இப்பொழுது சாத்தான், கிறிஸ்து தாமே வந்துவிட்டதைப் போன்று காண்பிப்பான். பூமியின் வெவ்வேறு இடங்களிலே, பிரகாசிக்கிற ஒளியோடு, கெம்பீரமான தோற்றத்தோடு, தேவகுமாரனைப்பற்றி யோவான், வெளிப்படுத்தல் 1:13-15-ல் விவரித்ததற்கு ஒப்பாக, தன்னை வெளிப்படுத்திக் காட்டுவான். அவனைச்சுற்றி இருக்கிற மகிமை இதுவரை மனிதர் பாத்திராத எல்லாவற்றையும் மிஞ்சுகிற மகிமையாக இருக்கும். “கிறிஸ்து வந்துவிட்டார்! கிறிஸ்து வந்துவிட்டார்!” என்கிற வெற்றியின் தொனி வானங்களிலே தொனிக்க, மக்கள் அவன் முன்பு முகங்குப்புற விழுந்து தொழுதுகொள்ளுகிறார்கள். கிறிஸ்து பூமியிலிருந்த பொழுது, தமது சீடர்களை ஆசிர்வதித்தவண்ணமாக அவன் தனது கரங்களை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதிக்கிறான். அவனுடைய குரல் அடக்கமாகவும், மென்மையாகவும், மெல்லியதாக மனதைக் கவரும் இசையுடனும் இருக்கிறது. கனிவான, பரிவோடுகூடிய குரலில், நம் இரட்சகர் கூறிய அதே கிருபைநிறைந்த பரலோக சத்தியங்களில் சிலவற்றை அவர்களுக்கு எடுத்துக்கூறுகிறான். மக்களுடைய நோய்களைக் குணப்படுத்தி, பின்னர் கிறிஸ்துவின் குணத்தை தன்மீது போலியாகப் புனைந்துகொண்டவனாய், தான் ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிவிட்டதாகவும், அவன் ஆசீர்வதித்த நாளை அவைவரும் கனம்பண்ணும்படியாகவும் கிறிஸ்து சொல்வதைப்போலவே அனைவருக்கும் கட்டளையிடுகிறான். ஏழாம் நாளை ஓய்வுநாளாகத் தொடர்ந்து ஆசரிக்கிறதினாலும், சத்திய வெளிச்சத்தை எடுத்துச்சென்ற அவனுடைய தூதர்களுக்கு செவிசாய்க்காமல் மறுத்துப்போட்டதினாலும், மக்கள தன்னுடைய பெயரை தூஷிக்கிறதாகவும் குற்றஞ்சாட்டுகிறான். இதுதான் வல்லமையான, ஏறக்குறைய உச்சக்கட்டமான வஞ்சகமாகும். சீமோனால் ஏமாற்றப்பட்ட சமாரியர்களைப்போன்று, இந்த திரள் கூட்டமும் சிறியவரிலிருந்து பெரியவர்வரை இந்த மாயங்களுக்குச் செவிகொடுத்து, “தேவனுடைய பெரிதான சக்தி இதுதான்” (அப்போஸ்தலர் 8:10) என்பார்கள். Mar 535.4

எனினும், தேவனுடைய மக்கள் தவறாக வழிநடத்தப்படமாட்டார்கள். இந்த கள்ளக் கிறிஸ்துவின் போதகங்கள் வேத வாக்கியங்களுக்கு ஒத்திருக்கவில்லை.⋆ Mar 536.1

வாக்குத்தத்த வசனம்: Mar 536.2

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான். - யாத்திராகமம் 14:14. Mar 536.3