Go to full page →

தவணையின் காலம் முடிவடைந்தபின் இரத்தசாட்சிகள் கிடையாது!, செப்டம்பர் 26 Mar 537

“அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.” - சங்கீதம் 91:15. Mar 537.1

தேவ மக்கள் துன்பம் அடைகிறதினின்று விடுதலை பெற்றிருக்கமாட்டார்கள்; ஆனால், உபத்திரவப்படுத்தப்பட்டு துன்பமடையும்பொழுது, தனிமையில் தத்தளித்து ஆகாரமின்றி பட்டினிகிடக்கும்பொழுது, அவர்கள் அழிந்துபோகும்படி விட்டுவிடப்பட மாட்டார்கள்… தனிமையில் ஆகாரமும் தண்ணீருமின்றி தவிக்கும்போது, அழியாதபடி காக்கப்படுவார்கள்… ஆனாலும் இதற்கு முன்பாக மரித்த இரத்தசாட்சிகளைப்போல, தேவனுடைய மக்கள் தங்களது இரத்தத்தினாலே தங்களது சாட்சியை சீக்கிரத்தில் முத்திரை போட வேண்டும் என்பதைப்போன்று மனிதர்களுக்கு காணப்படலாம். அது பயங்கரமான கடுந்துயர் நிறைந்த காலம். விடுதலைக்காக இரவும் பகலும் அவர்கள் தேவனை நோக்கி கதறுகிறார்கள்... Mar 537.2

உலக வல்லமைகளெல்லாம் தேவ மக்களுக்கு எதிரிடையாக நிற்கப்போகின்றன. யுகங்கள் நெடுகிலும் தேவனுடைய கண்கள் தமது மக்கள் சந்திக்கபோகின்ற அந்த இக்கட்டுகாலத்தின்மீது, அவர்களது கண்கள் பதிக்கப்பட்டிருந்தன. இச்சமயத்தில் பூமியின் வல்லமைகள் தேவனுடைய மக்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கும்படிச் செய்யப்படும். நாடுகடத்தப்பட்ட கைதியைப் போன்று, பட்டினியினாலும் கொடுமையினாலும் மரித்துவிடுவோமோ என்று அவர்கள் பயந்துகொண்டிருப்பார்கள்; ஆனால், இஸ்ரவேலிற்குமுன்பாக சிவந்த சமுத்திரத்தைப் பிளந்த பரிசுத்தம் உள்ள ஆண்டவர், அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்படித் தமது வல்லமையைக் காண்பிப்பார். “என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறது போல, நான் அவர்களைக் கடாட்சிப்பேன்” - மல்கியா 3:17. இந்தக் காலத்திலே, கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரருடைய இரத்தம் அவருக்குச் சாட்சியாக சிந்தப்படுமானால், முற்காலத்தில் இரத்தசாட்சிகளாக மரித்தவர்களுடைய இரத்தத்தைப் போன்று, அது ஆண்டவருக்கு ஒரு பெரிய அறுவடையைத் தருவதற்காக விதைக்கப்பட்டதாக இருக்காது. அவர்களுடைய உத்தம விசுவாசம் மற்றவர்களுக்கு சத்தியத்தைக்குறித்த ஞானத்தைக் கொடுக்கும் ஒரு சாட்சியாகயிருக்காது. ஏனெனில், பிடிவாதாமான இதயம் தங்களிடத்தில் அனுப்பப்பட்ட இரக்க்கத்தின் அலைகளை மீண்டும் திரும்பிவரக்கூடாதபடி அவர்களுடைய கல்நெஞ்சு திருப்பி அனுப்பிவிட்டது. நீதிமான்கள் அவர்களுடைய சத்துருக்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்கப்படுவார்களேயானால், அது அந்தகாரத்தின் அதிபதிக்கு வெற்றியாகவே இருக்கும். “தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்” (சங்கீதம் 27:5) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். கிறிஸ்துவும், “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்” (ஏசா. 26:20, 21) என்கிறார். ஜீவ புத்தகத்திலே நாமங்கள் எழுதப்பட்டு, அவருடைய வருகைக்காகப் பொறுமையோடு காத்திருக்கின்ற பிள்ளைகளுடைய விடுதலை மிகவும் மகிமையுள்ளதாயிருக்கும்.⋆ Mar 537.3

வாக்குத்தத்த வசனம்: Mar 538.1

“…கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத்துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச்சொன்னார்.” - ஏசாயா 25:8. Mar 538.2