Go to full page →

மக்கள் இல்லாமல் பூமி வெறுமையாயிருத்தல்!, அக்டோபர் 25 Mar 595

“பூமியைப்பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப்பார்த்தேன், அவைகளும் ஒளியில்லாதிருந்தது. பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகள் எல்லாம் பறந்துபோயின.” - எரேமியா 4:23-25. Mar 595.1

கிறிஸ்து வருகையிலே, துன்மார்க்கர் பூமியின்மீதிருந்து அகற்றப்படுகிறார்கள். அவர்கள் அவருடைய வாயின் சுவாசத்தினாலே அழிந்து, அவருடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசமடைவார்கள். கிறிஸ்து தமது மக்களை தேவனுடைய நகரத்திற்கு அழைத்துச்சென்றபின்பு, பூமி குடிகளற்று வெறுமையாக காட்சியளிக்கும். “இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிசைகளைச் சிதறடிப்பார்.” “தேசம் முழுவதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை: “தேசம் தன் குடிசைகளின்மூலமாய் தீட்டுப்பட்டது, அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர் மாத்திரம் மீந்திருக்கிறார்கள்” - ஏசாயா 24:1,3,5,6. Mar 595.2

பூமி முழுவதும் ஒரு பாழடைந்த வனாந்தரம்போன்று காட்சியளிக்கும். பூமியதிர்ச்சியினால், அழிந்த கிராமங்களும், நகரங்களும், வேரோடு சாய்ந்த மரங்களும், கடலிலிருந்து வீசியெறியப்பட்ட கரடு முரடான பாறைகளும், மலைகளும், பூமியின் மேற்ப்பரப்பிலே சிதறிக்கிடந்தன. மலைகள் விலகிப்போனதற்க்கு அடையாளமாக ஆழமான குழிகளும் குகைகளும் பூமியிலே தெரியும். Mar 595.3

பாவ நிவாரண நாளின் இறுதி பக்திவிநயமான ஆராதனையிலே நிழலாட்டமாக முங்குறிக்கப்பட்ட சம்பவம் இப்பொழுது நடைபெறுகிறது. மகா பரிசுத்தஸ்தலத்திலே செய்யப்படும் ஊழியமானது முடிவடைந்து, பாவ நிவாரண காணிக்கையின் இரத்தத்தின் புண்ணியத்தினாலே, ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரின் பாவங்கள் நீக்கப்படும்பொழுது, போக்காடு உயிருள்ளதாக, ஆண்டவருக்கு முன்பாகக் கொண்டுவரப்படும். சபையார் முன்பாக, பிரதான ஆசரியன் அதின் தலையின்மேல் இரண்டு கைகளையும் வைத்து, “...இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும், அவருடைய எல்லாப் பாவங்களிலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிடுகிறார்...” (லேவியராகமம் 16:21). அதைப்போலவே, பரளொக ஆசரிப்புக் கூடாரத்திலே, பாவநிவாரணப்பணி முடிவடைந்து, தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாகவும், பரலோக தூதர்களுக்கு முன்பாகவும், மீட்க்கப்பட்ட கூட்டத்தார் முன்பாகவும், தேவனுடைய மக்களின் பாவங்கள் அனைத்தும் சாத்தானுடைய தலையின்மேல் வைக்கப்படும். அவர்கள் செய்த எல்லாப் பாவங்களுக்கும் அவனே காரணகர்த்தா என்று தீர்க்கப்படுகிறான். ⋆ Mar 596.1

வாக்குத்தத்த வசனம்: Mar 596.2

“நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.” - சங்கீதம் 32:7. Mar 596.3