Go to full page →

சாத்தான் கட்டுப்படுகிறான்!, அக்டோபர் 26 Mar 597

“ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவும் கட்டிவைத்து...” - வெளிப்படுத்தல் 20:1,2. Mar 597.1

சாத்தானை முற்றிலும் அகற்றிப்போடுவதைப்பற்றியும், இந்த பூமி பாழடைந்து தாறுமாறாகிப்போன நிலைக்கு வந்துவிட்டது என்பது பற்றியும், வெளிப்படுத்தின விசேஷகன் முன்னறிவிக்கிறார். மேலும் இதே நிலை ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்று உறுதிபடக் கூறுகிறார். ஆண்டவரின் இரண்டாம் வருகை, துன்மார்க்கரின் அழிவு ஆகியவைகளைப்பற்றிய தீர்க்கதரிசனமாகச் சொன்னபின்பு, “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தங்கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவும் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு, அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைகள் போட்டான். அதற்க்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்” (வெளி. 20:1-3) என்று தொடர்ந்து எழுதுகிறார். Mar 597.2

பாதாளக்குழி (bottomless pit) என்கிற வார்த்தை, குழப்பத்திலும் இருளான நிலையிலும் பூமி இருந்தது என்பதை மாற்ற வேத வாக்கியங்களின்மூலமாகச் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் நிலையைப்பற்றிக்கூறும்போது: “ஆதியிலே அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது” (ஆதி. 1:2) என்று வேதாகமம் சொல்லுகிறது. ஓரளவிற்கு பூமி அதின் பழைய நிலைக்கே கொண்டுபோகப்படும் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது. தேவனுடைய மகா நாளை எதிர்பார்த்து நோக்கிக்கொண்டிருந்த எரேமியா தீர்க்கதரிசி: “பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப்பார்த்தேன், அவைகளும் ஒளியில்லாதிருந்தது. பர்வதங்களைப்பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாகுன்றுகளும் அசைந்தன. பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப்பறவைகளெல்லாம் பறந்து போயின. பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிர கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.” (எரேமியா 4:23-26) என்கிறார். Mar 597.3

இந்தப் பாழடைந்த பூமிதான் சாத்தானுக்கும் அவனுடைய தீய தூதர்களுக்கும் ஆயிரம் வருடத்திற்க்கு வீடாக இருக்கும். பூமியை விட்டு மற்ற பரிசுத்த உலகங்களுக்கும் சென்று, மற்ற உலகண்களிலுள்ள, பாவத்தில் விழுந்துபோகாத மக்களை சோதித்து தொல்லைகொடுக்காதபடி, அவ்விடங்களுக்கு செல்லாதவாறு இங்கேயே கட்டப்பட்டிருப்பான். இந்தப்பொருளில்தான் அவன் கட்டப்பட்டிருக்கிறான் என்பது குறித்துக் காட்டப்படுகிறது. அவன் தனது வல்லமையைச் செயல்படுத்தத்தக்கதாக, பூமியின்மேல் எவரும் மீந்திருக்கவில்லை. அனேக நூற்றாண்டுகளாக, அவனது ஒரே மகிழ்ச்சியாகயிருந்த, அந்த வஞ்சகத்தின் அழிவின் வேலைகளைச் செய்யக்கூடாதபடி, அவன் இப்போது முற்றிலும் கட்டப்பட்டிருக்கிறான். ⋆ Mar 598.1

வாக்குத்தத்த வசனம்: Mar 598.2

“கர்த்தர் எனக்காக் யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.” - சங்கீதம் 138:8. Mar 598.3