Go to full page →

நாம் அடையவேண்டிய ஓர் இலக்கு!, பிப்ரவரி 23 Mar 107

“சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்த மாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிரிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.” - 1 தெசலோனிக்கேயர் 5:23. Mar 107.1

“சமாதனத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக” என்று பவுல் கூறும்பொழுது, அவர் தமது சகோதரர்களால் ஒரு எட்டமுடியாத படித்தரத்தை வைக்க முற்படவில்லை. தேவனுக்குச் சித்தமில்லாத ஆசீர்வாதத்தை அவர்கள் பெற்றுக்கொள்வதற்காக அவர் ஜெபிக்கவில்லை. கிறிஸ்துவை சமாதானத்துடன் சந்திக்கத் தகுதுயுடையோர் அனைவரும் தூய்மையும் பரிசுத்தமுமான குணலட்சணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். Mar 107.2

ஏழாம் நாள் அட்வெந்து மக்கள் தாங்கள் நம்புவதாகக் கூறுகின்றவைகளை கடைபிடிப்பவர்களாயிருந்திருந்தால், உண்மையான ஆரோக்கிய சீர்திருத்தவாதிகளாயிருந்திருந்தால், உலகமும் தேவதூதர்களும் மனிதர்களும் உற்றுநோக்கத்தக்க சிறப்புக்குரியவர்களாக அவர்கள் நிச்சயமாகவே இருந்திருப்பார்கள்; மேலும், சத்தியத்தை அறியாதவர்களின் இரட்சிப்பிற்க்காக அதிகத் துடிப்புடன் செயல்படுபவர்களாகவும் இருந்திருப்பார்கள். Mar 107.3

கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகைக்குக் காத்திருப்போர் எனக்கூறுபவர்களின் மத்தியில், பெரிய சீர்திருத்தங்கள் காணப்படவேண்டும். நம் மக்கள் மத்தியில் செய்யப்படாமலிருக்கும் ஒரு பணியான, அதாவது ஆரோக்கிய சீர்திருத்தப்பணி செய்யப்பட வேண்டும். மிருகத்தின் இறைச்சியை உட்கொண்டு, அதனால் தங்கள் சரீர, மன, ஆன்மீக ஆரோக்கியத்தை ஆபத்துக்குள்ளாக்கிகொண்டிருப்பவர்கள், புலால் உணவின் அபாயத்தைக்குறித்து விழித்துக்கொள்ளவேண்டும். புலால் உணவு குறித்த கேள்வியில், அரைகுறையாக மனந்திருந்தியிருக்கும் பலர், தேவ மக்களோடு நடக்காதபடி அவர்களைவிட்டுப் பிரிந்துசெண்ட்டுவிடுவர். Mar 107.4

உணவுக் கட்டுப்பாடின்மை ஆயிரமாயிரம் பேர்களின் அழிவிற்க்கு காரணமாயிருக்கும். அவர்கள் இந்த ஒரு காரியத்தில் வெற்றி கொண்டிருப்பார்களேயானால், சாத்தானின் மற்ற அனைத்து சோதனைகளையும் ஜெயங்கொள்ளத்தக்க ஒழுக்கத்தின் மேலான வல்லமையைப் பெற்றிருப்பார்கள்; ஆனால், உணவிற்கு அடிமைகளாக இருப்போர், கிறிஸ்தவ குணத்தில் பூரணமடையத் தவறிவிடுவர். ஆறாயிரம் ஆண்டுகளாக மனிதனின் தொடர்ச்சியான மீறுதல்களே சுகவீனம், வேதனை, மரணம் ஆகிய விளைவுகளைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், நாம் காலத்தின் முடிவை நெருங்கும்போது, உணவைக்குறித்த சாத்தானின் சோதனை மிகவும் வல்லமையானதாகவும், மேற்கொள்வதற்க்கு மிகவும் கடினமானதாகவும் இருக்கும். Mar 108.1

மனிதன் பூமியில் இயற்கையாக விளையக்கூடியவைகளையே உட்கொள்ளத்தக்கதாக, தேவன் தமது பழைய அமைப்பிற்க்கு நம்மை படிப்படியாக வழிநடத்துவதாக, எனக்கு மறுபடியும் மறுபடியும் காண்பிக்கப்பட்டது. கர்த்தரின் வருகைக்கு காத்திருப்போர் மத்தியில், புலால் உணவு இறுதியாக அகற்றப்பட்டுவிடும். அவர்களது உணவின் ஒரு பகுதியாக இறைச்சி இனி இருப்பதில்லை. நாம் எப்பொழுதும் இந்த முடிவை நம் கண்முன் வைத்து, அதை அடைய விடாமுயற்சியுடன் முன்செல்ல வேண்டும். Mar 108.2

வாக்குத்தத்த வசனம்: Mar 108.3

“...வெறிக்க உண்ணாமல் பெலைகொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது.” - பிரசங்கி 10:17 Mar 108.4