Go to full page →

முத்திரையிடுகின்ற இந்தக் காலத்தில் கச 161

இயேசு பரிசுத்த ஸ்தலத்திலே தமது பரிந்துபேசுகின்ற ஊழியத்தை முடித்து, இரண்டாம் திரைக்குள்ளாக - (மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்) பிரவேசிக்கும்வரை, இப்பொழுதிருக்கும் ஒய்வுநாள்பற்றிய சோதனை வந்திருக்க முடியாது என்பதை நான் கண்டேன். எனவே, 1844-ம் ஆண்டு ஏழாம் மாதத்தில் நடு இராத்திரியின் சத்தம் முடிவடைந்தபோது, மகா பரிசுத்த ஸ்தலத்தின் கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக மரித்துப் போன கிறிஸ்தவர்கள், உண்மையான ஓய்வுநாளை ஆசரிக்கா விட்டாலுங்கூட, தற்போது நம்பிக்கையோடு நித்திரை செய்கின்றார்கள். ஏனென்றால், மகா பரிசுத்த ஸ்தலத்தின் கதவு திறக்கப்பட்டதிலிருந்து நமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் இந்ந ஓய்வுநாள் சத்தியத்தின் வெளிச்சத்தையும். அதற்கான பரீட்சையையும் அவர்கள் பெற்றிருக்க வில்லை; இந்தக் காரியத்தில், தேவனுடைய ஜனங்கள் சிலரை சாத்தான் சோதிப்பதை நான் கண்டேன். எனெனில், உண்மையான ஓய்வுநாளை ஆசரிக்காமலே அநேக நல்ல கிறிஸ்தவர்கள் விசுவாச வீரர்களாக தங்கள் ஓட்டத்தை முடித்திருப்பதால், இந்த ஓய்வுநாள் தற்போது நமக்கு ஒரு சோதனையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றதா என்று அநேகர் சந்தேகித்துக் கொண்டிருந்தார்கள்... கச 161.1

முத்திரையிடுதலின் இந்தக் காலத்திலே, தேவனுடைய ஜனங்களின் மனங்களை நிகழ்கால சத்தியத்திலிருந்து பிரித்து, அவர்களைத் தடுமாறச்செய்ய, சாத்தான் இப்போது எல்லா சூழ்ச்சிகளையும் உபயோ கித்துக்கொண்டிருக்கின்றான். — EW42, 43 (1851). கச 161.2

திருமதி, ஹேஸ்டிங்ஸ் அவர்கள் முத்திரையிடப்பட்டதை நான் கண்டேன், தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவர்கள் உயிர்த்தெழுந்து, 1,44,000 பேரோடுகூட பூமியின்மீது நிற்பார்கள். எனவே, அவர்களுக்காக நாம் துக்கிக்க வேண்டியதில்லை என்றும், அவர்கள் இக்கட்டுக் காலத்திலே இளைப்பாறுவார்கள் என்றும் நான் கண்டேன். — 2SM 263 (1850). கச 161.3

நமது பூமியில் நூறு வயதைக் கடந்த மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், முதிர்வயதின் இயற்கையான விளைவுகள் அவர்களது பெலவீனங்களிலே கானாப்படுகின்றன, ஆனாலும் அவர்கள் தேவனை நம்புகின்றனர், தேவனும் அவர்களை நேசிக்கின்றார். தேவனுடைய முத்திரை அவர்கள் மீது இருக்கின்றது, கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று கர்த்தர் சொல்லுகின்ற கூட்டத்தின் மத்தியிலே அவர்களும் இருப்பார்கள். — 7BC 982 (1899). கச 161.4