Go to full page →

ஒ! தேவனுடைய முத்திரை நம்மீது இடப்படலாம்! கச 161

இன்னும் சிறிது காலத்தில், தேவனுடைய பிள்ளைகளாக இருக்கின்ற ஒவ்வொருவரும், அவருடைய முத்திரையைத் தங்கள்மீது பெற்றிருப்பர். ஆ! அது நம்முடைய நெற்றியின்மீது போடப்படுமா! தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளிலே முத்திரையைப் போடுகின்ற தூதன், தங்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை யாரால் தாங்கிக்கொள்ளக் கூடும்? — 7BC 969, 970 (1889). கச 161.5

ஒப்பிட்டுப் பார்க்கப்படும் வகையில் உள்ள இந்த சமாதான நாட்களில், சத்தியத்திலிருக்கும் விசுவாசிகள் தங்களது விசுவாசத்திலே தொடர்ந்து செயலாற்றவில்லையென்றால் மாபெரும் பரீட்சை வரும் போதும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காமலும் அதன் முத்திரையைத் தங்கள் நெற்றிகளிலாவது அல்லது தங்கள் கைகளிலாவது பெற்றுக் கொள்ளாமலும் இருக்கப்போகின்ற அனைவர்க்கும் எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும்போதும், வேறு என்ன காரியம் அவர்களைத் தாங்கி நிலைநிருத்தும்? இந்த பக்திவிநயமான காலம் வெகு தொலைவிலில்லை. தேவனுடைய ஜனங்கள் பெலவீனராயும் மனவுறுதியற்றவராயும் மாறுவதற்குப் பதிலாக, உபத்திரவ காலத்திற்கென்று பெலத்தையும் தைரியத்தையும் ஒன்றுதிரட்டிக்கொண்டிருக்கவேண்டும். 4T 251 (1876). கச 162.1