Go to full page →

தேவனுடைய கோப கலசங்கள் ஊற்றப்படும் கச 174

பக்திவிநயமான சம்பவங்கள் நம்முன் இனிமேல் நிகழவிருக்கின்றன. எக்காளங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ழுழங்கப்படவிருக்கின்றன; பூமியின் குடிகள்மீது கலசங்கள் ஒவ்வொன்றும், ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றப்பட இருக்கின்றன. — 3SM 426 (1890). கச 174.1

உலகம் இரக்கத்தின் தூதனால் விரைவில் கைவிடப்படவிருக்கின்றது; கடைசி ஏழு வாதைகளும் ஊற்றப்படவிருக்கின்றன… தேவனுடைய கோபாக்கினையின் அம்புகள் விரைவில் வரவிருக்கின்றன. தமது கற்பனைகளை மீறினவர்களை அவர் தண்டிக்க ஆரம்பித்த பின்பு, இறுதிவரை ஓய்வே இராது. — TM 182 (1894). கச 174.2