Go to full page →

3. “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?” கச 22

கிறிஸ்துவிடம் அவரது வருகையைக்குறித்து சீஷர்கள் விசாரித்தல் கச 22

ஒரு பெரிய கூட்டமான ஜனங்கள் கேட்கும்விதமாக கிறிஸ்துவின் வார்த்தைகள் (மத். 24:2) பேசப்பட்டிருந்தன; ஆயினும் அவர் தனித்து ஒலிவமலையின்மேல் அமர்ந்திருந்தபோது, பேதுருவும் யோவானும் யாக்கோபும் அந்திரேயாவும், அவரிடத்தில் வந்தனர். “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று அவர்கள் கேட்டனர். கச 22.1

கிறிஸ்துவானவர், எருசலேமின் அழிவும், தம்முடைய வருகையின் மகாநாளுமாகிய இரண்டையும், தனியாகப் பிரித்து சீஷர்களுக்குப் பதில் கூறவில்லை. அவர், இந்த இரு சம்பவங்களின் வர்ணனையையும் ஒன்றாகக் கலந்தே கூறினார். அவர் கண்டவிதமாக, எதிர்கால நிகழ்ச்சிகளை தம்முடைய சீடர்களுக்கு முன்பாகத் திறந்திருப்பாரானால், அந்தக் காட்சியை அவர்கள் தாங்க முடியாதவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் மீதிருந்த இரக்கத்தினால், அந்த இரண்டு மாபெரும் நெருக்கடிகளின் வர்ணனைகளையும் ஒன்று கலந்து, அவைகளின் பொருளை சீடர்கள் தங்களுக்கென்று தாங்களே ஆராய்ந்துகொள்ளும் படியாக விட்டுவிட்டார். - DA 628(1898). கச 22.2