Go to full page →

கிறிஸ்துவின் வருகையின் நேரம் அறியப்படவில்லை கச 22

அட்வெண்டிஸ்ட் மக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கின்ற அநேகர். நேரத்தை நிர்ணயிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். கிறிஸ்துவின் வருகைக்கென காலாகாலமாக நேரம் நிர்ணயிக்கப்பட்டிருந்திருக்கின்றது. ஆயினும், திரும்பத் திரும்ப தோல்விகளே விளைவாக இருந்திருக்கின்றன. நமது கர்த்தருடைய வருகயைப்பற்றிய துல்லியமான நேரம், அழிந்து போகக் கூடியவர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகின்றவர்களுக்கு பணிவிடைச் செய்கின்ற தூதர்களும்கூட, “ஆந்த நாளையும் அந்த நாழிகையையும் அறியாதிருக்கின்றனர். அந்த நாளையும் அந்த நாழிகையையும், என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.” - 4T 307 (1879) கச 22.3

பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல்பற்றிய நேரத்தையோ, அல்லது கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய துல்லியமான நேரத்தையோ, நாம் அறிந்துகொள்ள முற்படக்கூடது… இதைப்பற்றின அறிவை தேவன் ஏன் நமக்கு அளிக்கவில்லை? அப்படி அவர் அதை நமக்கு அளித்திருந்திருப்பாரெனில், நாம் அதை சரியான விதத்தில் பயன்படுத்தியிருக்கமாட்டோம். இந்த அறிவின் (கிறிஸ்துவின் வருகை எப்போது நடைபெறும் என்பதை அறிந்துகொள்வதின்) விளைவு, வரப்போகின்ற அந்த மாபெரும் நாளிற்காக, ஜனங்களை நிற்கச் செய்ய தேவன் ஆயத்தப்படுத்துகின்ற வேலைக்குப் பெரிதாகத் தடங்கல் ஏற்படுத்தக் கூடிய நிலைமையை, நம்முடைய சபை மக்களிடத்தில் ஏற்படுத்தும். ஆதலால் நேரத்தைக்குறித்த கிளர்ச்சியுடன் நாம் வாழக்கூடாது… கச 23.1

ஒன்று, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளில் அவர் வருவார் என்று உன்னால் கூறவும் முடியாது. அவரது வருகை பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு இருக்காது என்று கூறுவதன்மூலம் அதை உன்னால் தள்ளிப்போடவும் முடியாது. - RH March 22, 1892. கச 23.2

தேவனுடைய மாபெரும் நாளை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அடையாளங்கள் நிறைவேறி வருகின்றன. ஆயினும், கிறிஸ்து தோன்றும் நாள் மற்றும் நாழிகையைக்குறித்து கூறுவதற்கு, நம்மிடம் ஒரு செய்தியும் இல்லை. வானத்து மேகங்களில் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் எப்பொழுதும் எதிர்பார்த்து, ஆயத்தமான நிலையில் இருக்கவேண்டும். என்பதற்காக நம்மிடமிருந்து கர்த்தர் இதை ஞானமாக மறைத்து வைத்திருக்கின்றார். - letter 28, 1897. கச 23.3

மனுஷகுமாரனுடைய இரண்டாம் வருகையின் மிகச்சரியான நேரம் தேவ இரகசியமாக இருக்கின்றது. - DA 633 (1898). கச 23.4