Go to full page →

நமது தூது நேரத்தை நிர்ணயிக்கும் தூது அல்ல கச 23

இயேசுவானவர் வல்லமையோடும், மாபெரும் மகிமையோடும், இரண்டாவது முறையாக வருவதற்கு முன்பாக, மிகத்துல்லியமாக இவ்வளவு காலம் கடந்துசெல்ல வேண்டும் என்று, நாம் விளக்குகின்ற பிரிவினரைச் சேர்ந்தவர்கள் அல்ல. சிலர், ஒரு நேரத்தை நிர்ணயிக்கின்றார்கள். அது கடந்து போகும்போது, அவர்களது துணிகரமான ஆவி கடிந்துகொள்ளுதலை ஏற்க மறுத்துவிடுவதால் அவர்கள் வேறொரு நேரத்தை, மீண்டுமாக, மற்றுமொரு நேரத்தை நிர்ணயிக்கின்றார். ஆயினும், இப்படிப்பட்ட அநேகத் தொடர்ச்சியான தோல்விகள், அவர்களைக் கள்ளத் தீர்க்கதரிசிகளாக முத்திரை குத்திவிடுகின்றன. - FE 335 (1895). கச 23.5

இந்த பூமியின் சரித்திரம் முடிவடைவதற்கு முன்னதாக, ஐந்து ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகள் செல்லும் என்று ஒரு தூதை. தேவன் எந்த ஒரு மனிதனுக்கும் கொடுக்கின்றதில்லை. அவரது வருகைக்காக ஆயத்தம் செய்வதில் தாமதப்படுத்துகின்ற, எந்த ஒரு ஆத்துமாவுக்கும் அவர் மன்னிப்பைக் கொடுக்கப்போகின்றதும் இல்லை. “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்று அந்த பொல்லாத ஊழியக்காரன் சொன்னதைப்போல, அவர் ஒருவரையும் சொல்லவிடமாட்டார். “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்ற சிந்தை, அந்த மாபெரும் நாளுக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும், அக்கறையின்றி அலட்சியம் பண்ணுவதற்கு வழி நடத்தும். - RH Nov 27, 1900. கச 23.6