Go to full page →

கிறிஸ்துவின் வருகையை தனது காலத்தில் எலன் உவைட் எதிர்பார்த்தார் கச 25

மாநாட்டிற்கு வந்திருந்த ஒரு குழு எனக்கு காண்பிக்கப்பட்டது. “சிலர் புழுக்களுக்கு இரையாவார்கள், சிலர் கடைசி ஏழு வாதைகளில் பலியாவார்கள், சிலர் பூமியின்மீது உயிரோடிருந்து இயேசுவின் வருகையில் மறுரூபமாவதற்கு எஞ்சியிருப்பார்கள் என்று தூதனானவன் கூறினான். - 1T131, 132 (1856). கச 25.3

காலம் குறுகினதாயிருக்கின்றபடியால், நாம் ஜாக்கிரதையோடும் இருமடங்கு ஆற்றலோடும் வேலை செய்யவேண்டும். நமது பிள்ளைகள் கல்லூரிகளுக்குள் ஒருபோதும் நுழைய முடியாமற் போகலாம், - 3T 159 (1872). கச 25.4

இப்பொழுது பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதென்பது உண்மையிலேயே ஞானமான காரியமல்ல. காலம் குறுகினதாயிருக்கின்றது. சிறு பிள்ளைகள், இதற்கு முன்னதாக அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். “Letter 48, 1876. கச 25.5

உலகத்தின் இந்த யுகத்தில், பூமிக்குரிய சரித்திரத்தின் காட்சிகள் விரைவில் முடிவடைகின்ற வேளையிலே, இதுவரை அப்படி ஒருபோதும் இருந்திராத இக்கட்டுக் காலத்திற்குள்ளாக நாம் நுழையவிருக்கும் நேரத்தில், ஒப்பந்தம் செய்யப்படுகின்ற திருமணங்கள் மிகவும் குறைந்து விடுமானால், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராராகிய அனைவருக்கும் அது சாலச் சிறந்ததாயிருக்கும். - 5T 366 (1885). கச 25.6

குறிப்பிட்ட அந்த மணிநேரம் வரும்; அது வெகுதூரத்தில் இல்லை. அந்த மணி வேளையில், இப்பொழுது அதை விசுவாசிக்கின்ற நம்மில் சிலர், பூமியின்மீது உயிரோடிருந்து, முன்னுரைக்கப்பட்டது நிறைவேறுகின்றதைக் காண்பார்கள். மலை, சமவெளி, சமுத்திரத்திலிருந்தும், பூமியின் கடைமுனையிலுள்ள பகுதிகளிலிருந்தும், எதிரொலிக்கின்ற பிரதான தூதனுடைய சத்தத்தையும் தேவ எக்காள சத்தத்தையும் அவர்கள் கேட்பார்கள். - RHJuly 31, 1888. கச 25.7

பாவத்தை மன்னிக்கின்ற மீட்பராகிய கிறிஸ்துவினுடைய நீதியின் வெளிப்பாட்டிலே, மூன்றாம் தூதனுடைய உரத்த சத்தம் ஏற்கனவே துவங்கிவிட்டபடியால், சோதனையின் காலம் இப்போதே நம்மீது வந்திருக்கின்றது. - 1SM 363 (1892). கச 26.1