Go to full page →

தாமதம் விளக்கப்படுதல் கச 26

ஒருவேளை எஜமான் வருவாரென்றால், அநேகர் ஆயத்தமற்றவர்களாகக் காணப்படுவார்கள் என்பதனால், மனச்சோர்வான நீண்ட இரவு சோதித்துக்கொண்டிருந்தாலும், காலை நேரம் கிருபையாக தள்ளிபோடப் பட்டுக்கொண்டிருக்கின்றது. - 2T 194 (1868). கச 26.2

1884-ல் ஏற்பட்ட மாபெரும் ஏமாற்றத்துக்குப் பிற்பாடு, அட்வென்டிஸ்டுகள் தங்களது விசுவாசத்தை உறுதியாய் காத்துக்கொண்டு, திறந்திருக்கின்ற தேவனுடைய வழிநடத்துதலை ஐக்கியத்துடன் தொடர்ந்து பின்பற்றி, மூன்றாம் தூதனின் தூதினைப் பெற்று, பரிசுத்த ஆவியின் வல்லமையோடு உலகத்திற்கு அதைக் கூறி அறிவித்திருந்திருப்பார்களானால், அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைக் கண்டிருந்திருப்பார்கள். கர்த்தரும் அவர்களது முயற்சிகளுடன் வல்லமையாக செயல்பட்டிருந்திருப்பார்; ஊழியமும் நிறைவடைந்திருக்கும். கிறிஸ்துவும் தமது ஜன்ங்களுக்கு அவர்களது பலனை அளித்து, அவர்களை அழைத்துச் செல்வதற்கு இதற்கு முன்னமே வந்திருந்திருப்பார்… கிறிஸ்துவின் வருகை, இப்படியாக தாமதமடைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக இருக்கவில்லை… 1ரோமர் 13:11, 12; 1கொரி. 7:29; 1தெச. 4:15, 17; எபி. 10:25; யாக். 5:8,9; 1 பேதுரு 4:7; வெளி. 22: 6, 7; கச 26.3

பூர்வ இஸ்ரவேலரை, அவர்களது அவிசுவாசமும் முறுமுறுப்பும் கலகமும், நாற்பது ஆண்டுகளாக கானான் தேசத்திற்கு வெளியே அடைத்துப்போட்டது. அதே பாவங்கள்தான் இன்றைய ஆவிக்குரிய இஸ்ரவேலர்களை, பரலோகக் கானானுக்குள் நுழைய விடாதபடிக்குத் தாமதப்படுத்தியிருக்கின்றது. இவ்விரு காரியத்திலும், தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பொறுத்தமட்டில், எவ்வித குறையும் இருந்ததில்லை. கர்த்தருடைய ஜனங்கள் என்று கூறிக்கொள்ளுகிறவர்கள் மத்தியிலே காணப்படுகின்ற அவிசுவாசமும் உலகப்பற்றும், அர்ப்பணிக்காத நிலையும், பூசலுமே, நம்மை பாவமும் வருத்தமும் நிறைந்த இந்த உலகத்திலே அநேக வருடங்களாக இருக்கும்படியாகச் செய்துவிட்டது. - Ev 695, 696 (1883). கச 26.4

கிற்ஸ்துவின் சபை, நியமிக்கப்பட்ட தனது பணியைக் கர்த்தர் அபிஷேகித்தவிதத்தில் செய்திருந்திருக்குமானால், இதற்கு முன்னதாகவே முழு உலகமும் எச்சரிக்கப்பட்டிருந்திருக்கும்; நமது கர்த்தராகிய இயேசுவும் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும், நமது பூமிக்கு வந்திருந்திருப்பார். - DA 633, 634 (1898). கச 26.5