Go to full page →

ஆத்துமாக்களை ஆதாயம் செய்தவருக்கான வெகுமதி கச 216

மீட்கப்பட்டவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, விலையேறப்பெற்ற ஆத்துமாக்கள், தங்கள் சார்பில் விசுவாசமும் பொறுமையுமிக்க முயற்சிகளை எடுத்து, அரணுக்கு ஓடும்படியாகக் கெஞ்சுதல்களையும் அக்கறைமிக்க அறிவுறுத்தல்களையும் ஏறெடுத்தவர்களின் நாமங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களாலேயே இங்கிருக்கிறோம் என்பார்கள். இப்படியாக, இவ்வுலகத்தில் தேவனுடன் ஒன்றாகப் பணியாளர்களாயிருந்தவர்கள் தங்களது பலனைப் பெற்றுக்கொள்வார்கள்.- 8T 196, 197 (1904). கச 216.2

உன்னதத்திலுள்ள இந்த அழகான பட்டணத்தின் ஜொலிக்கின்ற கதவுகளின் கீலஅச்சுகள் பின்னாகத் திறக்கும்போது, சத்தியத்தைக் கைக்கொண்ட ஜாதிகள் உள்ளே பிரவேசிப்பார்கள். அவர்களது சிரசுகளின்மீது மகிமையான கிரீடங்கள் வைக்கப்படும். அவர்கள் தேவனுக்கு மகிமையையும், மரியாதையையும், கனத்தையும் செலுத்துவார்கள். அந்த நேரத்தில் சிலர் உங்களிடம் வந்து, “நீங்கள் என்னோடு அன்பான வார்த்தைகளால் பேசியிருந்திருக்காவிட்டால், உங்களுடைய கண்ணீரும் வேண்டுதல்களும் ஊக்கமான முயற்சிகளும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், நான் ராஜாவை அவருடைய அழகிலே ஒருபோதும் கண்டிருக்கவே மாட்டேன்” என்று கூறுவார்கள். இது என்ன ஒரு மேன்மையான பலனாக இருக்கிறது! இந்த பூலோக நிலையற்ற வாழ்க்கையில் மனிதர்களின் புகழ்ச்சியை, உண்மையுள்ளவர்களுக்காக எதிர்காலத்தில் காத்திருக்கின்ற அழிவில்லாத வாழ்க்கைக்கான எண்ணற்ற பலன்களுடன் ஒப்பிடும்போது. அது எத்தனை முக்கியத்துவமற்றதாக இருக்கும்! — Words of Encouragement to Self-supporting Workers (Ph 113) 16 (1909). கச 216.3