Go to full page →

தேவனுடைய மகாநாளை நமது மனங்களுக்கு முன்பாக வைத்திருக்கவேண்டும் கச 28

நமக்கு முன்பாக மிகச் சமீபமாய் இருக்கின்றதான நியாயத்தீர்ப்பின் மாபெரும் காட்சிகளைக்குறித்துச் சிந்தித்துப் பார்க்கும்படியாகவும் எண்ணிப்பார்க்கும்படியாகவும், கண்டிப்பாக நம்மை நாமே பயிற்றுவிக்க வேண்டும். அப்படியாக, அனைத்துமே வெளியரங்கமாக்கப்படப்போகும் தேவனுடைய மகாநாளின் காட்சிகளை நமக்கு முன்பாக வைக்கும்போது, அது நமது குணத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். “சகோதரி உவைட் அவர்களே, கர்த்தர் இன்னும் பத்து ஆண்டுகளில் வந்துவிடுவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?” என்று ஒரு சகோதரர் என்னிடம் கேட்டார். “இரண்டு, நான்கு அல்லது பத்து ஆண்டுகளில் அவர் வருவாரெனில், அது உங்களுக்கு என்ன மாறுதலை ஏற்படுத்தப்போகின்றது?” என்று நான் கேட்டேன். “ஏன் ஏற்படுத்தாது! பத்து ஆண்டுகளில் கர்த்தர் வந்துவிடுவார் என்று அறிந்திருந்தேனானால், நான் இப்போழுது செய்கின்றதைக் காட்டிலும் சில காரியங்களை இன்னும் வித்தியாசமாகச் செய்வேன் என்று நான் நினைக்கின்றேன்” என்றார் அவர். கச 28.9

“நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று நான் கேட்டேன். கச 29.1

அவர்: “ஏன், நான் என்னுடைய சொத்துக்களை விற்று, தேவனுடைய வார்த்தையை ஆராயத் தொடங்குவேன்; ஜனங்களை எச்சரிக்க முயற்சித்து, அவருடைய வருகைக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவேன். நான் தேவனை சந்திக்க ஆயத்த நிலையில் இருக்கும்படி தேவனிடத்தில் கெஞ்சி மன்றாடுவேன்” என்றார். கச 29.2

அப்பொழுது நான்: ” ஒரு வேளை, கர்த்தர் இருபது ஆண்டுகளில் வரப்போகிறதில்லை என்று நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் வித்தியாசமாக வாழ்ந்து காட்டுவீர்களா?” என்று கேட்டேன். அவர்: “நான் வாழ்ந்துகாட்டுவேன் என நினைக்கின்றேன்”… என்றார். கச 29.3

கர்த்தர் பத்து ஆண்டுகளில் வர இருக்கின்றார் என்பதை தான் அறிந்திருந்தால், ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதாக அவர் கூறும் வார்தை, எத்தனை சுயநலமுடையதாயிருக்கின்றது! ஏன், ஏனோக்கு 300 ஆண்டுகள் தேவனோடு சஞ்சரிக்க வில்லையா! ஒவ்வொரு நாளும் நாம் தேவனோடு நடக்க இயலும் என்பதும், நாம் விழித்திருந்தது கத்திருக்கவில்லையென்றால் நமக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதும் நமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. - Ms 10, 1886. கச 29.4