Go to full page →

தேவனுடைய மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மதித்தல் கச 58

ஆரோக்கிய சீர்திருத்தம், மூன்றாம் தூதனுடைய தூதின் ஒரு பகுதியாக இருக்கின்றது என்று எனக்குக் காட்டப்பட்டது. மேலும், மனித சரீரத்தோடு எப்படி கரங்களும் கால்களும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதுபோல இந்த ஆரோக்கிய சீர்திருத்த சத்தியமும் மூன்றாம் தூதனின் தூதோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றது. — T 486 (1867). கச 58.2

சேநீர், காபி, புகையிலை மற்றும் மதுபானம் போன்றவற்றைப் பாவமான பழக்கங்களாக நாம் காண்பிக்க வேண்டும். உணவு மேசயில் வைக்கப்படுகின்ற மாமிசம், முட்டை, வெண்ணை, பாலாடைக்கட்டி போன்ற அப்படிப்பட்ட உணவுப் பொருள்களை அதே அடிப்படையில் வைக்க முடியாது. நமது ஊழியத்தினை பாரம் என்பதுபோல் இவைகளை முன் நிறுத்தவும் கூடாது. ஆனால், மேற்கூறப்பட்ட — தேநீர், காபி, புகையிலை மற்றும் மதுபான வகைகளை அளவோடும்கூட சேர்த்துக் கொள்ளக் கூடாது, அவைகள் முற்றிலுமாக ஒதுக்கப்பட வேண்டும். — 3SM 287 (1881). கச 58.3

உண்மையான இச்சையடக்கம் தீமை பயக்கக்கூடிய அனைத்தையும் முற்றிலுமாக விலக்கிவிடும்படியாகவும், ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய காரியங்களை விவேகமாக பயன்படுத்தும்படியாகவும் நமக்கு போதிக்கின்றது. — PP 562 (1890). கச 58.4

சுத்தமான காற்று, சூரிய ஒளி, இச்சையடக்கம், ஓய்வு, உடற்பயிற்சி, சரியான உணவு, தண்ணீரின் பயன்பாடு, தெய்வீக வல்லமையில் நம்பிக்கை போன்ற இவைகளே உண்மையான நோய்தீர்குகம் வழிகள் ஆகும். — MH 127 (1905). கச 58.5

ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற எந்த ஒன்றும், சரீர வல்லமையை மாத்திரம் குறைப்பதில்லை, மனம் மற்றும் ஒழுக்க சம்பந்தமான வல்லமைகளையும் பெலவீனப்படுத்த வழிவகுக்கும். எந்த ஒரு ஆரோக்கியமற்ற பழக்கத்தின் ஈடுபாடும் ஒருவருக்கு நன்மைக்கும் தீமைக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசத்தைக் கண்டுகொள்ள மிகவும் கடினமாக்கிவிடும். அதனால் தீமையை எதிர்த்து நிற்பதும் மிகவும் கடினமாகிவிடும். — MH 128 (1905). கச 58.6