Go to full page →

ஆதி உணவுத்திட்டத்திற்குத் திரும்புங்கள் கச 59

பூமியில் இயற்கையாக உற்பத்தியாகும் ஆகாரப் பொருள்களினால் மனிதன் பிழைத்திருக்க வேண்டுமென்று, தேவன் ஆதியில் கொடுத்த அவரது திட்டத்திற்குப் படிப்படியாக நம்மைத் திரும்பிக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். கர்த்தரின் வருகைக்கு காத்துக் கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில், மாமிசம் உண்ணுதல் இறுதியாக முற்றிலும் விடப்படும்; அவர்களது உணவுப்பட்டியலில், மாமிசம் ஒரு பகுதியாக இருப்பது நிறுத்தப்படும். இந்த முடிவினை எப்பொழுதும் நம் கண்முன் வைத்து, அதனை அடையுமம்படியாக நாம் தொடர்ந்து நிலையாக முயற்சிக்கவேண்டும். — CH 450 (1890). கச 59.1

கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று உரிமைப்பாராட்டுகின்ற மக்களின் மத்தியில் மாபெரும் சீர்திருத்தம் காணப்படவேண்டும். ஆரோக்கிய சீர்திருத்தம் நமது மக்களின் மத்தியில் இதுவரை செய்திராத ஒரு மாபெரும் வேலையைச் செய்யும். மாமிச உணவை சாப்பிட்டுக்கொண்டு, அதனால் இன்னும் தங்கள் சரீரம், மனம் மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள், மாமிசம் உண்பதின் ஆபத்தைக் குறித்து இன்னமும் விழிப்படைய வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். மாமிச உணவு உண்ணுதல் குறித்த காரியத்தில், தற்போது அரைகுறையாக மனமாற்றமடைந்துள்ள அநேகர், தேவனுடைய மக்களோடு இனி என்றுமே நடவாதபடிக்கு அவர்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார்கள். — RH May 27, 1902. கச 59.2