Go to full page →

பத்திரிகை வெளியீடுகள் அவசியம் கச 64

மிகவும் எளிதில் விளங்கக்கூடிய, மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்ட, உலகத்தின்மீது வர இருக்கின்ற காரியங்களைத் தெளிவுப்படுத்துகிற பத்திரிக்கை வெளியீடுகள் வெளியிடப்பட வேண்டும். — HM Feb. 1, 1890. கச 64.3

முதலாம் மற்றும் இரண்டாம் தூது, முறையே 1843, 1844 —ம் ஆண்டுகளில் கொடுக்கப்பட்டது. தற்போது நாம், மூன்றாம் தூதினைக் கூறி அறிவிக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். என்றாலும், மூன்று தூதுகளும் இன்னமும் அறிவிக்கப்பட வேண்டும்… காரியங்கள் எப்படி நடந்து முடிந்தன, எப்படி நடக்கப்போகின்றன என்பதை தீர்க்கதரிசன சரித்திரத்தின் வரிசையில் விளக்கமாகக் காட்டி, பத்திரிகை வெளியீடுகள் மற்றும் பிரசங்கங்கள் வாயிலாக இந்த உலகிற்குக் கொடுக்கவேண்டும். — CW26, 27 (1896). கச 64.4

கலப்படமற்ற உண்மையான சத்தியம் துண்டு பத்திரிகைகளிலும், துண்டு வெளியீடுகளிலும் பேசப்பட வேண்டும். மேலும் இவைகள், இலையுதிர் காலத்தில் உதிருகின்ற இலைகள்போல எல்லா இடங்களிலும் கொடுக்கப்படவேண்டும். — 9T 230 (1897). கச 64.5

:“முற்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்.” “தானியேலும் வெளிப்படுத்தின விசேஷமும்”, “மாபெரும் ஆன்மிகப் போராட்டம்” போன்ற புத்தகங்கள், வேறு எந்தக் காலத்திலும் தேவைப்பட்டிராத அளவு இக்காலத்திலே தேவையாயிருக்கின்றன. ஏனெனில், அவைகள் வலியுறுத்துகின்ற சத்தியங்கள். அநேகருடைய குருடான கண்களைத் திறக்கும் என்பதால், மிகவும் பரந்த அளவில் விநியோகிக்கப்பட வேண்டும். — CM 123 (1905). கச 64.6

கிருபையின் காலம் தொடரும் வரை, புத்தகங்களை விற்கும் வேலைக்கான சந்தர்ப்பமும் தொடர்ந்து இருக்கும். “6T 478 (1900). கச 65.1