Go to full page →

நம் வெளியீடுகளிலே தாக்கி எழுதுதல் கூடாது கச 65

நம் வெளியீடுகளுக்காக எழுதுகிறவர்கள் தயையில்லாத வார்த்தைகளையும், மறைமுகமாக சுட்டிக்காட்டுதலையும் உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் அது நிச்சயமாக பாதிப்பை உண்டாக்கும். மேலும் அது, கத்தோலிக்கர்கள் உட்பட அனைத்து வகுப்பினரையும் சென்றடைவதற்காக, நாம் செய்யவேண்டிய வேலையிலிருந்து தடைசெய்து, முன்னேற முடியாதபடி பாதையையும் அடைத்துப்போட்டுவிடும். சத்தியத்தை அன்போடு எடுத்து பேசுவது நம் வேலையாகுமே ஒழிய, மாம்சமான இருதயத்தினுடைய பரிசுத்தமில்லாத காரியங்களை, சத்தியத்துடன் கலந்து பேசுவது நம்முடைய வேலை அல்ல. மேலும் நமது எதிரிகளால் பெறப்பட்டிருக்கின்ற அதே சிந்தைக்கு ஒத்ததாயிருக்கக்கூடிய காரியங்களை குறித்துப் பேசுவதும் நம் வேலை அல்ல. கச 65.2

கடுமையான மற்றும் இருதயங்களை உருவக் குத்துகின்ற வார்த்தைகளை நாம் உபயோகிக்கக்கூடாது. எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு தலைப்பிலிருந்தும் அவைகளை வெளியேற்றுங்கள். கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு முகவரியிலிருந்தும் அவைகளை எடுத்துவிடுங்கள். தேவனுடைய வார்த்தை மாத்திரமே அந்த வேலையைச் செய்யட்டும். அதுவே உருவிச்சென்று, கண்டித்து, கடிந்துகொள்ளட்டும். அழிவுக்குரிய மனிதன் கிறிஸ்துவுக்குள் தன்னை மறைத்துக்கொண்டு அவரில் நிலைத்திருக்கட்டும். — 9T 240, 241, 244 (1909). கச 65.3

நமது எழுத்துக்களில் எழுதப்பட்ட சொல்லை அல்லது சொற்றொடரை தனியாக எடுத்துப் பார்த்தால், சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் எதிரிடையாகத் தோன்றுவது போன்று அதற்குத் தவறான விளக்கம் கொடுக்கப்படும் என்பதால், அப்படிப்பட்ட ஒவ்வொரு சொற்றொடரையும் நமது கூற்றுகளையும் நாம் களைந்துபோட வேண்டும். நமது நாட்டிற்கும் அதன் சட்டதிட்டங்களுக்கும் உண்மையற்றவர்களாகக் காண்பிக்கக்கூடிய விதத்தில் பத்திரிகைகளில் நம்மைப்பற்றி நாம் எழுதாதபடிக்கு, ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக பரிசீலிக்கவேண்டும். — Letter 36, 1895. கச 65.4

குத்தக்கூடியது போன்ற குற்றச்சாட்டுகளிலும் கண்டனம் செய்வதிலும் கிறிஸ்தவம் வெளிப்படுத்தப்படுவதில்லை. — 6T 397 (1900). கச 65.5