Go to full page →

சர்ச்சைக்குரிய மாபெரும் கருத்தாகிய ஓய்வுநாள் கச 91

கடைசி நாட்களில் தொடர்ந்து நடத்தப்படப்போகின்ற யுத்தத்தில், யேகோவாவின் சட்டத்திற்குரிய கடமையிலிருந்து விலகி, எதிர்த்து நிற்கின்ற தீமை விளைவிக்கும் வல்லமைகள் அனைத்தும், தேவனுடைய மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யும்படியாக ஒன்றுசேரும். இந்த யுத்தத்திலே, நான்காம் கற்பனையாகிய ஓய்வுநாள், வாத அடிப்படையிலான மிக முக்கியமான கருத்தாயிருக்கும். ஏனெனில், பிரமாணத்தைத் தந்த உன்னதமான தேவன், இந்த ஓயுவுநாள் கற்பனையின்மூலமாகவே, வானங்களையும் பூமியையும் படைத்த சிருஷ்டிகராகத் தம்மை அடையாளப்படுத்திக் காட்டுகின்றார். — 3SM 392 (1891). கச 91.1

“நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும், உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்ற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” (யாத். 31:31) என்று கர்த்தர் கூறுகின்றார். “எந்த நாள் ஓய்வுநாள் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று கூறி, ஓய்வுநாளை ஆசரிக்கத் தடைகளை உண்டாக்க சிலர் முற்படுவர். ஆனால், ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வருகிறதென அவர்கள் அறிந்திருப்பார். அதன் ஆசரிப்பைக் கட்டாயப்படுத்தும் சட்டங்களை இயற்றுவதில் மாபெரும் வைராக்கியத்தை காண்பிப்பர். — KC 148 (1900). கச 91.2