Go to full page →

1880-களில் நடந்த ஞாயிறு ஆசரிப்புச் சட்ட இயக்கம் 1உதவக்கூடிய பின்னனித் தகவல் மற்றும் எலன் உவைட் அவர்களின் மிக விரிவான மேற்கொள்களுக்காக பார்க்கவும்: 3SM. pp. 380-402; TC. Vol. 5, pp. 711-718. கச 91

நமது தேசத்திலே ஞாயிறு ஆசரிப்பின் சட்டமானதுஇயற்றப்படும் என்று அநேக வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த இயக்கம் இப்பொழுது சரியாக நம்மேல் வந்திருக்கின்றது. இந்த விஷயத்திலே, நமது மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?... என்று நாம் கேட்கின்றோம். தேவனுடைய மக்களுக்கு கிருபையும் வல்லமையும் கொடுக்கப்படும்படியாக, விசேஷமாக இப்பொழுது நாம் தேவனைத் தேடவேண்டும். தேவன் ஜீவிக்கிறார். அவர் நமது செயலுரிமையைத் தடுத்துப்போடக்கூடிய காலம் முழுமையாக வந்துவிட்டது என்பதை நாம் நம்புகிறதில்லை. கச 91.3

“பூமியின் நான்கு திசைகளிலும் தூதர்கள் நின்றுகொண்டு, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது காற்று அடிக்காதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப் பதை” தீர்க்கதரிசி கண்டார். வேறொரு தூதன், சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறி வந்து, அந்த நான்கு தூதரையும் நோக்கி, “நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைப்போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமாய் கூப்பிட்டுச்” சொன்னான். தேவனுடைய ஊழியக்காரர்கள் உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்ட்டு, யேகோவாவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கு எதிராக அறிவிக்கப்படவேண்டிய எச்சரிப்பைக் கொடுக்கும்வரை, தேவதூதர்கள் அந்த நான்கு காற்றுகளையும் விட்டுவிடாமல் பிடித்திருக்கத்தக்கதாக, தேவனிடத்தில் மன்றாட வேண்டிய வேலையே நாம் இப்பொழுது செய்யவேண்டிய வேலையாக உள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. — RH Extra Dec. 11, 1888. கச 91.4