Go to full page →

எதிர்ப்பினால் சத்தியத்தின் அழகு தெளிவாகக் காட்டப்படும் கச 102

பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்க சபையும் உலகமும் ஒன்று சேரும்போது, கர்த்தருக்குக் கீழ்ப்படிகின்றவர்களின் வைராக்கியம் அதிகமாகும். தேவனுடைய பிரமாணங்களுக்கு எதிராக எழும்பும் அனைத்து எதிர்ப்புகளும் சத்தியத்தின் முன்னேற்றத்திற்கான வழியை உண்டுபண்ணும். மேலும் சத்தியத்தைச் சொல்பவர்கள், மனிதர்களுக்கு முன்பாக அதனுடைய மதிப்பக்குறித்து எடுத்துச் சொல்வதற்கான வல்லமையை அது அளிக்கும். எதிர்ப்பும் உபத்திரவமும் மிகத்தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுவதுபோல, சத்தியத்திலிருக்கின்ற அழகையும் வல்லமையையும் வேறு எதுவும் வெளிப்படுத்திக்காட்ட முடியாது. — 13MR 71, 72 (1896). கச 102.5

ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்துவதற்காக அப்படிப்பட்ட ஒரு முயற்சி எடுக்கப்படுகின்ற இந்தக் காலம், போலியான ஓய்வுநாளுக்கு எதிராக உண்மையான ஓய்வுநாளைக்குறித்து உலகிற்கு அறிவிக்கின்ற மிகச்சரியான சந்தர்ப்பமாகும். கர்த்தர் தமது அநுக்கிரகத்தின்படி நமக்கு முந்திச் சென்றுகொண்டிருக்கிறார். நான்காம் கற்பனையாகிய ஒய்வு நாளைக் குறித்த சத்தியம் சட்டசபைக் கூட்டங்களுக்கு முன்னிலையில் கொண்டுவரப்பட்டத்தக்கதாக, தேவன் இந்த ஞாயிற்றுக்கிழமையைக் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி முன்னுக்குக் கொண்டுவரப்படுவதை அனுமதித்திருக்கிந்றார். இப்படியாக, தேசத்தின் தலைவர்களாய் செயலாற்றுகின்ற முதன்மையான மனிதர்கள், தங்களது கவனத்தை தேவனுடையை வார்த்தையின் உண்மையான ஓய்வுநாளைப்பற்றிச் சாதகமாகச் சொல்லப்படும் சாட்சியைக் கேட்கும்படியாக கொண்டுவரப்படுவர். — 2MR 197 (1890). கச 103.1