Go to full page →

மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக்காட்டிலும் நாம் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் கச 103

சத்தியத்தின் ஆதரவாளர்கள், தேவனுடைய வார்த்தையின் வெளிப்படையான ஒரு எதிர்பார்ப்பை அலட்சியப்படுத்துவதா அல்லது தங்களது சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதா என்பதக்குறித்து தெரிந்தெடுக்கும்படியாக இப்பொழுது அழைக்கப்பட்டிருக்கின்றனர். நாம் தேவனுடைய வார்த்தையை விட்டுக்கொடுத்து, மனிதனுடைய பழக்கவழக்கங்களையும் சமுதாய கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்வோமானால், மற்ற மனிதர்கள் மத்தியில் சேர்ந்து வாழ்வதற்கும், வாங்குவதற்கும், விற்பதற்கும், அனுமதிக்கப்படுவோம், நமது உரிமைகளும் மதிக்கப்பட்டிருக்கும். மாறாக, தேவனுக்கு உண்மையாயிருக்கும் காரியத்தில் நாம் தொடர்ந்து இருப்போமானால், அது மனிதர்கள் மத்தியில் நமது உரிமைகளைத் தியாகம் செய்வதாகவே இருக்கும். ஏனெனில், தேவனுடைய பிரமாணத்தின் விரோதிகள், மார்க்க சம்பந்தமான விசுவாசக் காரியங்களிலும், மனிதர்களுடைய மனச்சாட்சி யைக் கட்டுப்படுத்தும் காரியங்களிலும், நாம் தனித்து முடிவெடுப்பதை நசுக்கிப்போடும்படியாக ஒன்றாக இணைந்திருக்கின்றனர்… கச 103.2

தேவனுடைய மக்கள், மானிட அரசாங்கத்தை தெய்வீக நியமத்தின் ஒரு மதச்சடங்காக அங்கீகரித்து, அதன் அதிகாரம் அதனுடைய சட்டபூர்வமான எல்லைக்குள்ளாக எவ்வளவு காலம் உபயோகப் படுத்தப்படுமோ அதுவரைக்கும், அதனை (அரசியல் சட்டத்தை) ஒரு பரிசுத்தமான கடமையாக, எழுத்தினாலும் மாதிரியினாலும் அதற்குக் கீழ்ப்படியும்படியாக போதிப்பர். ஆனால் தேவன் உரிமைகோரும் காரியத்துக்கு எதிராக அதனுடைய உரிமைகோருதல் இருக்கும்போது, மனிதனுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தை மானிடச் சட்டங்கள் அனைத்திற்கும் மேலாக, ஒரு அதிகாரமானதாக அங்கீகரிக்கப் பட்டு கீழ்ப்படியச் செய்யப்பட வேண்டும். “கர்த்தர் இப்படிச் சொல்லு கின்றார்” என்ற ஒரு கூற்று, “சபையும் அரசாங்கமும் இப்படிச் சொல் கின்றது” என்ற கூற்றிற்காக ஒதுக்கிவைக்கப்படக்கூடாது. உலகின் பெரும் அதிகாரம் கொண்டவர்களின் அனைத்து மகுடங்களுக்கும் மேலாக, கிறிஸ்துவின் கீரிடம் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டும். — HM Nov. 1, 1893. கச 103.3

சாத்தானுக்கு முதன்மையான நிலையை மனிதர்கள் கொடுக்கச் சம்மதித்தால், அவன் அவர்களுக்கு உலகத்தின் இராஜ்யங்களையெல்லாம் தருகின்றான். அநேகர் இப்படிச் செய்து பரலோகத்தைத் தியாகம் செய்கின்றனர். ஆனால், பாவம் செய்வதைக்காட்டிலும் மரித்துப்போவது நலமாகும்; ஏமாற்றுவதைக்காட்டிலும் குறைபடுவது (வறுமையிலிருப்பது) நலமாகும்; பொய் சொல்வதைக்காட்டிலும் பசியோடு இருப்பது நலமாகும். — 4T 495 (1880). கச 104.1

*****