Go to full page →

அமெரிக்க ஐக்கிய நாட்டிலே மத சுதந்திரத்தின் முடிவு கச 105

சாத்தானுடைய ஏதுகரத்தின்மூலமாக, தேவனுடைய பிரமாணம் பயனற்றதாக ஆக்கப்படும். சுதந்திரத்தைக்குறித்து மேன்மைபாராட்டிக் கொண்டிருக்கின்ற நமது தேசத்திலே (USA), மதச் சுதந்திரம் ஒரு முடிவுக்கு வரும். ஒய்வுநாள் பற்றின சர்ச்சைக்குரிய கேள்வியைக்கொண்டு தீர்மானிக்கப்படும் இந்தப் போராட்டம், முழு உலகத்திலும் கிளர்ச்சி உண்டாக்குவதாக இருக்கும். EV 236 (1875). கச 105.3

தேவனுடைய மக்களுக்கு பெரிய ஒரு நெருக்கடி காத்திருக்கின்றது. நமது நாடு வெகு சீக்கிரத்தில் வாரத்தின் முதல்நாளை ஒரு பரிசுத்தநாளாக ஆசரிக்கும்படி அனைவர்மீதும் திணிக்க முயற்சிக்கும். இப்படிச் செய்வதினால், ஒய்வுநாளாக ஆசரிக்கும்படிக்கு தங்கள் நாடு அறிவித்திருக்கின்ற அந்த நாளை (ஞாயிற்றுக்கிழமையை), மனிதர்கள் தங்களது சொந்த மனச்சாட்சியின் சத்தத்துக்கு விரோதமாய் செய்யக் கட்டாயப்படுத்தும் காரியத்தில் மனவுறுத்தல் இல்லாமல் இருப்பார்கள். — RH Extra Dec. 11, 1888. கச 105.4

ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் பிள்ளைகள், ஏழாம்நாள் ஓய்வுநாளின் காரியத்தைக்குறித்த யுத்தத்தை நடத்துவார்கள். ஜக்கிய நாடுகளிலும், இன்னும் மற்ற நாடுகளிலுபம் இருக்கின்ற அதிகாரிகள், தங்களது பெருமையிலும் அதிகாரத்திலும் எழும்பிநின்று மத சுதந்திரத்தைத் தடுக்கும்படிக்கு சட்டங்களை இயற்றுவார்கள். — Ms 78, 1897. கச 106.1

அமெரிக்க ஜக்கிய நாட்டின் புராட்டஸ்டண்ட் மக்கள், ஆவிமார்க்கத்தின் கரத்தை பற்றிப்பிடிக்கும்படிக்கு, இடைவெளியைக் கடந்து தங்களது கரங்களை நீட்டுவதில் முன்னணியில் இருப்பார்கள். ரோம் வலலமையோடு தங்கள் கைகளை இறுகப்பற்றிக்கொள்ள அவர்கள் இடைவெளியைக் கடந்து செல்லுவார்கள். ஒருங்கிணைந்த இந்த மூன்று வல்லமைகளின் செய்வாக்கின்மீழ், இந்த தேசம் (அமெரிக்கா) மனச்சாட்சியின் உரிமைகளைக் காலின்கீழ் மிதிக்கும்படியாக, ரோம அரசின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும். — GC 588 (1911). கச 106.2