Go to full page →

சபையும் அரசாங்கமும் தேவனுடைய மக்களை எதிர்க்கும் கச 106

தேவனுடைய பரிசுத்த நாளைப் புறக்கணித்து, பாவமனுஷனால் ஏற்படுத்தப்பட்ட ஓய்வுநாளை உயர்த்துமப்டி போடப்படுகிற தேசிய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல், தேசிய ஆலோசனை சங்கங்களின் ஆணைக்குத் தலைவணங்காத அனைவரும் போப்புமார்க்கத்தின் ஒடுக்கும் வல்லமையை மட்டுமல்ல, மிருகத்தின் சொரூபமாகிய புராட்டஸ்டண்டு உலகத்தின் ஒடுக்கும் வல்லமையையும் உணர்வார்கள். — 2 SM 380 (1886). கச 106.3

தேவனுடைய எச்சரிப்பின் தூதுகளைக் கேட்க மறுக்கின்ற மார்க்க சம்பந்தமான அமைப்புகள் கடுமையான வஞ்சகத்திற்குள்ளாகி, பரி சுத்தவான்களை உபத்திரவப்படுத்துவதற்கு அரசாங்க வல்லமையுடன் இணைந்துகொள்ளும். புராட்டஸ்டண்ட் சபைகள் பிரமாணத்தைக் கைக்கொள்ளுகின்ற தேவனுடைய மக்களை உபத்திரவப்படுத்துவதில், போப்பு மார்க்க வல்லமையுடன் இணைந்துகொள்ளும். கச 106.4

தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சியை உடையவர்கள்மீது யுத்தம் பண்ணுவதில், வலுசர்ப்பத்துடன் இந்த ஆட்டுக்குட்டிக்கொப்பான வல்லமை இணைந்துகொள்ளும். — 14MR 162 (1899). கச 106.5

சபை, அரசாங்க அதிகாரம் என்னும் பலத்த கரத்தின் உதவிக்காக வேண்டுகொள் விடுக்கும். இந்த செயலில் போப்புமார்க்கத்தாரும், புராட்டஸ்டண்ட் சபைகளும் ஒன்று சேர்ந்துகொள்ளும். — GC 607 (1911). கச 106.6