Go to full page →

சுவிசேஷ ஊழியத்தோடு மருத்துவ ஊழியம் TamChS 176

சுவிசேஷ ஊழியத்தையும் மருத்துவநற்செய்தி ஊழியத்தையும் சேர்த்தே செய்யவேண்டும். மெய்யான சுகாதாரச் சீர்திருத்த நியதிகளோடு சேர்த்து, சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும். கிறிஸ்தவ மார்க்கத்தை அனுதின வாழ்க்கையில் வெளிப்படச் செய்யவேண்டும். ஊக்கமான, முழுமையான சீர்திருத்தப்பணியைச் செய்ய வேண்டும். சுகாதாரச் சீர்திருத்த நியதிகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். இந்த நியதிகள் அவசியமானவை என்பதை ஆண்களும் பெண்களும் காணவும், அவற்றின்படி வாழவும் நம் திறனுக்குட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டும். 36T, 379 TamChS 176.2

சீடர்கள் ஊழியம் செய்ததுபோல நாம் ஊழியம் செய்ய வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். சரீரப்பிரகாரமான குணமாக்குதலும் நற்செய்தி ஊழியக்கட்டளையில் இணைந்ததுதான். சுவிசேஷ ஊழியப்பணியில் போதனையையும் குணமாக்குதலையும் பிரித்துப்பார்க்கவே கூடாது. 4 MH, 141 TamChS 176.3

தேவன் தம் தயவை தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருப்பதற்கான ஊடகங்களாக மருத்துவ நற்செய்தி ஊழியத்தையும் சுவிசேஷ ஊழியத்தையும் தெரிந்துகொள்கிறார். அவருடைய திருச்சபைக்கு நீர்ப்பாய்ச்சுகிற ஜீவநதிகளாக அவை இருக்கவேண்டும். 5BE, Aug. 12, 1901 TamChS 176.4

வேதவசனத்தைப் பிரசங்கிப்பதில் அனுபவம்பெற்ற நம்மு டைய ஊழியக்காரர்கள் எளிய சிகிச்சைகளைக் கொடுப்பதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகு, மருத்துவ நற்செய்தி ஊழியர் களாகப் பிரயாசப்படவேண்டும். 69T, 172 TamChS 176.5

புத்தக ஊழியர் ஒவ்வோர் இடமாகச் செல்லும்போது, வியாதி யஸ்தர் அநேகரை அவர் சந்திக்கக்கூடும். நோய்க்கான காரணங்கள் குறித்த அறிவும், அவர்களுடைய பாடுகளைத் தணிக்கும்படி எளிய சிகிச்சைகள்குறித்த அறிவும் அவருக்கு இருக்கவேண்டும். அதைவிட மேலாக, வியாதியஸ்தர்களுக்காக விசுவாசத்தோடும் தாழ்மையோடும் ஜெபிக்கவேண்டும்; மகாவைத்தியரை அவர்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும். அவ்வாறு தேவனோடு சேர்ந்து நடந்து, வேலைசெய்யும்போது, பணிவிடைத் தூதர்கள் அவருக்கு அருகில் இருப்பார்கள். இருதயங்களில் இடம்பிடிக்க அவர்களுக்கு உதவுவார்கள். உண்மையும் அர்ப்பணிப்புமுள்ள புத்தக ஊழியர் செய்கிற ஊழியப்பணி முயற்சிக்கு மிகப்பெரிய களம் காத்திருக்கிறது, தன் ஊழியத்தை கருத்தோடு நிறைவேற்றுவதில் மிகப் பெரிய ஆசீர்வாதத்தை அவர் பெற்றுக்கொள்ளலாம். 1SW, Nov. 20, 1902 TamChS 176.6

சுகாதார வாழ்வுக்கான நியதிகளைப் போதிப்பது தனக்கு நியமிக்கப்பட்ட பணியின் ஒரு பகுதி என்பதை ஒவ்வொரு சுவிசேஷ ஊழியரும் உணரவேண்டும். இந்தப்பணிக்கு மிகப்பெரிய தேவை உள்ளது; இந்தப் பணிக்கு உலகமும் திறந்தே இருக்கிறது. 2MH, 147 TamChS 177.1