Go to full page →

செய்தியின் வலதுகரம் TamChS 177

உடலில் கையும் கைவிரல்களும் சேர்ந்திருப்பதுபோலவே மூன்றாம் தூதனுடைய தூதை அறிவிக்கிற ஊழியத்தோடு மருத்துவ நற்செய்தி ஊழியத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென மீண்டும் மீண்டும் எனக்குச் சொல்லப்பட்டது. கிறிஸ்துவின் வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்த தெய்வீகத் தலைவரின் வழிகாட்டுதலின்கீழ் அவர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றவேண்டும். சத்தியம் எனும் சரீரத்தின் வலதுகரம் எப்போதும் சுறுசுறுப்புடன், ஓயாமல் செயல்படவேண்டும். தேவன் அதைப் பெலப்படுத்துவார். ஆனால் அதைச் சரீரமாக்கக்கூடாது. அதேநேரம் சரீரமானது கையைப் பார்த்து, “நீ எனக்கு வேண்டுவதில்லை” என்று சொல்லக்கூடாது. சுறுசுறுப்பாகவும், மும்முரமாகவும் சரீரம் இயங்குவதற்கு கை தேவை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி நியமிக்கப்பட்டுள்ளது. ஒன்று மற்றொன்றைச் சாராமல் இயங்கினால், இரண்டுமே மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கவேண்டியதிருக்கும். 36T, 288 TamChS 177.2

மருத்துவ நற்செய்தி ஊழியத்தைச் செய்யவேண்டும். சரீரத் திற்கு கரம் எப்படியோ,அப்படியே தேவ ஊழியத்தில் இந்தப் பணி இருக்கவேண்டும். 48T, 160 TamChS 177.3