Go to full page →

கைத்திறம் TamChS 309

ஒழுக்கமும் பூரணமும் செயல்திறனுமிக்க பழக்கங்களைப் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கடமை. எந்த வேலையாக இருந்தாலும், தாறுமாறாகவும் சோம்பலாகவும் செய்தால் அதற்குச் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. சதா வேலையும் கையுமாக இருந்தும், வேலையைச் செய்துமுடிக்காவிட்டால், சிந்தையும் மனதும் அதில் ஈடுபடவில்லையென அர்த்தம். சோம்பலாக, நஷ்டத்திற்கு வேலை செய்கிறவர் இந்தத் தவறுகளைத் திருத்த வேண்டியது அவசியம். சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடத் திட்டமிட மெனக்கெட வேண்டும். மற்றவர்கள் பத்து மணிநேரத்தில் செய்கிற வேலையை சிலர் ஐந்து மணிநேரத்தில் முடிப்பதற்கு சாமர்த்தியமும் செயல்பாணியும் உதவுகின்றன. சிலர் எப்போதும் வீட்டுவேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்; வேலை அதிகமாக இருப்பதால் அல்ல, நேரத்தை மிச்சப்படுத்த அவர்கள் திட்டமிடாததே அதற்கு காரணம். சோம்பலாக, நேரத்தைக் கடத்திக்கொண்டு இருப்பதால், கொஞ்ச வேலையையும் அதிகமாக்குகிறார்கள். எரிச்சலூட்டுகிற, நேரங்கடத்துகிற இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் நிச்சயம் வெற்றிபெறலாம். குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து வேலைசெய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட பணியைச் செய்வதற்கு ஆகிற நேரத்தைத் திட்டமிட வேண்டும். பிறகு, நேரத்திற்குள் வேலையை முடிக்க அனைத்து முயற்சிகளும் செய்யவேண்டும். மன உறுதியுடன் செயல்படுவது கைகளைத் திடப்படுத்தும். 1COL, 344 TamChS 309.3

கிறிஸ்துவின் சேவையில் உடனடிக் கீழ்ப்படிதல் அவசியம். 2SW Aug. 9, 1904 TamChS 310.1

ஆத்துமாக்களின் மதிப்பை உடனே புரிந்துகொள்ள வேண்டும்; செய்ய வேண்டிய கடமையை உடனே பகுத்தறிகிற தன்மை வேண்டும்; தேவன் தங்கள்மேல் சுமத்துகிற பொறுப்புகளுக்கு உடனே இணங்குகிற ஆவி வேண்டும்; இவை தம்முடைய ஊழியர்களில் காணப்படவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். 39T 12 TamChS 310.2

தேவன் நியமித்த கடமைகளைக் களைப்பின்றி நிறைவேற்றுவது மெய்ப்பக்தியின் ஒரு முக்கிய அம்சமாகும். தேவ சித்தத்தை நிறைவேற்றக் கிடைக்கும் தருணங்களை அவருடைய கருவிகளாக மனிதர் பிடித்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் துரிதமும் தீர்மானமுமாகச் செயல்பட்டால், மகிமையான வெற்றிகளைப் பெறலாம். தாமதமும் அலட்சியமும் தோல்வியையும் தேவனுக்கு அவமதிப்பையும் கொண்டுவரும். 4PK, 676 TamChS 310.3