Go to full page →

பிரதான சத்துரு செயல் படுகிறான் TamChS 76

பூமியிலுள்ளவற்றின் முடிவு சமீபித்திருக்கிற இந்நாட்களில், உலகத்தைச் சிக்கவைப்பதற்கு சாத்தான் கடும் முயற்சிகளை மேற் கொண்டுள்ளான். மனதை ஆக்கிரமித்து, இரட்சிப்புக்கு அவசிய மான சத்தியங்களிலிருந்து திசைதிருப்புகிற பல திட்டங்களை வகுக்கிறான். தேவபிரமாணத்திற்கு எதிரானர்வகளை குழுக்களாகத் திரட்டுகிற வேலையில் அவனுடைய முகவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். குழப்பத்தையும் கலகத்தையும் உண்டாக்குகிற விஷயங்களை அறிமுகப்படுத்த பிரதான சத்துரு செயல்படுகிறான். அறிவுக்கேற்றிராத வைராக்கியத்தால் மனிதர்கள் வெந்துகொண்டிருக்கிறார்கள். 1AA, p. 219 TamChS 76.3

சாத்தான் கருத்தோடு வேதாகமத்தை வாசிக்கிறவன். தனக்குக் கொஞ்சக்காலம் மட்டும் இருப்பதை அவன் அறிவான். இந்த உலகத்தில் ஆண்டவருடைய பணியை எதிர்ப்பதற்கு ஒவ்வொருவிதத்திலும் முயல்கிறான். 29T, 16 TamChS 77.1

தேவமக்களை செயல்படவிடாத நிலைக்குள் முடக்கவும், சத்தியத்தைப் பரப்புவதில் அவர்கள் தங்களுடைய பங்கைச் செய்ய விடாமல் தடுக்கவும், இறுதியாக தராசில் நிறுக்கப்பட்டு அவர்கள் குறைவுள்ளவர்களாகக் காணப்படவும் சாத்தான் இப்போது பிரயாசப்படுகிறான். 31T, 260 TamChS 77.2