Go to full page →

போர் மனப்பான்மையால் உலகம் தூண்டப்பட்டுள்ளது TamChS 77

போர்மனப்பான்மையால் உலகம் தூண்டப்பட்டுள்ளது. தானியேல் பதினொன்றாம் அதிகாரம் கிட்டத்தட்ட நிறைவேறி முடியப் போகிறது. தீர்க்கதரிசனங்களில் சொல்லப்பட்டுள்ள இக்கட்டுக் காட்சிகள் சீக்கிரமே அரங்கேறப் போகின்றன. 49T, 14 TamChS 77.3

பூமியின் குடிமக்கள் மிகப்பயங்கரக்குழப்பத்தில் இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. போரும் இரத்தம் சிந்துதலும் இடர் பாடும் பற்றாக்குறையும் பஞ்சமும் கொள்ளைநோயும் தேசத்தில் எங்கும் காணப்பட்டன. பிறகு அந்தக் காட்சியிலிருந்து வேறொன்றுக்கு என்னுடைய கவனம் திருப்பப்பட்டது. ஒரு சிறிய சமாதான காலம் உண்டாயிருந்ததுபோலத் தெரிந்தது. மீண்டுமாக பூமியின் குடிமக்கள் எனக்குக் காட்டப்பட்டார்கள். மீண்டும் எல்லாமே மிகப்பயங்கர குழப்பத்தில் இருந்தது. சண்டையும் போரும் இரத்தம் சிந்துதலும் பஞ்சமும் கொள்ளைநோயும் எங்கும் பயங்கரமாகக் காணப்பட்டன. இந்தப் போரிலும் குழப்பத்திலும் பிற தேசங்களும் ஈடுபட்டிருந்தன. போரால் பஞ்சம் உண்டானது. பற்றாக்குறையும் இரத்தம் சிந்துதலும் கொள்ளைநோயைக் கொண்டு வந்தன. ‘பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிற தினால் மனிதர்களுடைய இருதயங்கள் சோர்ந்துபோயின. 11T, 268 TamChS 77.4