Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    CONSECRATION

    தற்பிரதிஷ்டை

    நீங்கள் “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” எரே. 29: 13 என்பதே தேவன் நமக்கருளிய வாக்குத்தத்தம்.SC 72.1

    நம்முடைய இருதயம் முழுவதும் தேவனுக்கு இணங்கிப்போகவேண்டும், மற்றப்படி அவருடைய திவ்ய மறுபடியும் அடைந்து கொள்வதற்கேற்ற மாறுதல் ஒருக்காலுமுண்டாகாது. சுபாவத்தின்படி நாம் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்கள். நம்முடைய நிர்ப்பந்தமான நிலைமையை பரிசுத்தாவியானவர் எவ்விதமான வார்த்தைகளால் விவரிக்கிறர் என்று பாருங்கள். “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்த சாத்தானின் வலைகளில் அகப்பட்டது.SC 72.2

    வர்கள்.” எபே. 2: 1. “தலையெல்லாம் வியாதியும் இருதயமெல்லாம் பலட்சயமுமாயிருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அதிலே சுகமேயில்லே.” ஏசா 1:5, 6. ” பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.” 2 தீமோ 2: 26. என்பதே. ஆயினும், தேவன் நம்மைக் குணமாக்கவும் விடுதலையாக்கவும் விரும்புகிறர். இதற்காக நாம் முழுவதும் மறுரூபமாக்கப்படவும், நம்முடைய முழு சுபாவமும் புதிதாக்கப்படவும் வேண்டியதாயிருப்பதினாலே, அவருக்கே நம்மை முற்றிலுங் கையளிக்கவேண்டும்.SC 73.1

    நான் என்னும் இராட்சதனுக்கு விரோதமாய் நடக்கிற பெரிய யுத்தத்தைப்போல வேறெந்த யுத்தமும் எக்காலத்திலும் நடந்ததில்லை. தான் என்னும் அகங்காரமானது அடங்கி, முற்றிலும் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கிப்போவதற்கு ஒர் போராட்டம் வேண்டியதுதான். ஏனெனில், ஆத்துமா பரிசுத்தமாய்ப் புதிதாக்கப்படுவதற்குமுன் அது தேவனுக்கு முழுவதுமாய் கீழமையவேண்டும்.SC 73.2

    தேவனுடைய ஆளுகையானது சாத்தான் வெளிக்குத்தோன்றச் செய்கிறதுபோல் குருட்டாட்டமான வணக்கத்தின்பேரிலும் விசாரணையில்லாத அதிகாரத்தின்பேரிலும் ஸ்தாபிக்கப்பட்டதில்லை. அது மனச்சாட்சிக்கும் உணர்ச்சிக்குமுரியது. சிருஷ்டி கர்த்த வாகிய தேவன், தமது கையின் சிருஷ்டிகளாகிய மனிதரை “வழக்காடுவோம் வாருங்கள்” ஏசா. 1:18 என்று அழைக்கிறர். அவர் தமது சிருஷ்டிகளாகிய மனிதருடைய சித்தத்தைப் பலவந்தஞ் செய்கிறதுமில்லை; முழு மனதோடும் உணர்வோடும் செலுத்தப்படாத வணக்கத்தை அவர் ஏற்றுக்கொள்ளுகிறதுமில்லை. கட்டாயத்தினாலுண்டாகும் வெறும் கீழ்ப்படிதாலனது சரியான குணம் அல்லது மனோ விருத்தியாவற்றிற்கும் இடையூறாய் நிற்கும். இன்னம் அது தன்னில் தானே இயங்கும் எந்திரத்துக் கொப்பாக மனிதனை ஆக்கிவிடும் ஆதலால், இவ்விதமான நோக்கம் சிருஷ்டிகருக்குக் கிஞ்சிற்றேனுமில்லை. தமது சிருஷ்டிப்பின் சத்துவத்தினாலுண்டான சிறந்தகையின் கிரியையாகிய மனிதன் மேலான தோற்றமும், சிறந்த தேர்ச்சியுமடைய வேண்டுமென்பதே அவருடைய கோரிக்கை. தமது கிருபையால் நமக்கு அவர் அருளவிருக்கிற உன்னத ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் நமக்கு எதிரே வைத்திருக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்குள்ளே நிறை வேற்றுவதற்காக நம்மை தமக்கு ஒப்புக்கொடுக்கும்படி வருந்திக் கேட்கிறர். பாவக்கட்டினின்று விடுதலையடையவும், தேவ புத்திரருடைய மகிமையான சுயாதீனத்தில் பங்கடையவும், நம்மை ஒப்புக்கொடுக்கும் சிலாக்கியத்தை தெரிந்துகொள்வது நமக்குரியதாயிருக்கிறது.SC 73.3

    நம்மை தேவனிடத்தினின்று பிரிப்பவைகள் எவைகளோ அவைகளை முற்றுமாய் விட்டுவிடுவதே நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதாம். “உங்க ளில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனுயிருக்கமாட்டான்.” லூக். 14:33 என்று இரட்சகரும் வசனித்திருக்கிறார். நம்முடைய இருதயத்தை தேவனிடத்திலிருந்து இழுத்துக்கொண்டு போகிறவைகளெவைகளோ அவைகளேயே நாம் அகற்றித் தள்ளிவிடவேண்டும் மம்மோன் அநேகருக்கு விக்கிரகமாயிருக்கிறது. பண வாசையும், ஆஸ்தியை சேர்க்க வேண்டும் என்கிற இச்சையுந்தான் அவர்களை சாத்தானேடு இருக்கி கட்டிவிடுகிற இருப்புசங்கிலி. பேர் பிரஸ்தாபத்தையும் உலக மேன்மையையும் கனத்தையும் நாடி அவைகளை வணங்கி வருகிற இன்னேர் வகுப்பாருமுண்டு. தன்னயம் நிறைந்த ஜீவியத்தை வாஞ்சித்து உத்தர வாதமில்லாத சுயாதீன வாழ்வைவிரும்பி காலந்தள்ளு வோரும் ஒர்வித விக்கிரகாராதனைக்காரர்தான், என்றாலும் அடிமைத்தனத்துக்குள்ளாகும் இச்சங்கிலியோ உடைக்கப்படவேண்டும். கொஞ்சம் உலகத்துக்கும் கொஞ்சம் சுவாமிக்கும் நம்மைக் கொடுக்கக்கூடாது. நாம் முழுவதுமாய் அவருடையவர்களாகாவிட்டால் தேவனுடைய பிள்ளைகள் என்கிறபேர் நமக்குக் கிடையாது. சிலர் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதற்கும், உத்தம குணத்தையடைவதற்கும், இரட்சிப்புப் பெறுவதற்கும் தங்களுடைய சொந்த முயற்சிகளின் பேரிலும் எத்தனங்களின் பேரிலும் நம்பிக்கை வைத்திருக்கையில் தேவனையே சேவிக்கிறேம். என்பதாய்ச் சொல்லிக்கொள்ளுகிறதுண்டு. மோட்சகதியை யடைந்துகொள்வதற்கு ஆண்டவர் நியமித்திருக்கிற கிறிஸ்தவ ஜீவியத்தின் கடமைகளை நிறைவேற்ற நாடுகிறார்களேயொழிய கிறிஸ்துவின் அரிய அன்பை உணர்ந்து அவர்கள் இருதயம் உருகுகிறதில்லை. இப்பேர்க்கொத்த மார்க்கம் ஒன்றுக்கும் உதவாது. இயேசு இருதயத்தில் வாசம்பண்ணுவாரானால் அந்த ஆத்துமா அவரோடு ஒட்டிக்கொள்ளத்தக்கதாக அவருடைய அன்பினிலும், அந்நியோந்தியத்தினாலும் அதிகமாய் நிறைந்திருக்கும். மேலும் அந்த ஆத்துமா அவரைப்பற்றிய தியானத்தினால் தன் சித்தத்தை மறைந்துடும். கிறிஸ்துவிடத்தில் அன்புகூர்வதே கிரியைக்கு ஊற்றம். நெருக்கி ஏவுகிற தேவ அன்பை ருசிக்கிறவர்கள் அவருடைய ஊழியத்துக்கு எவ்வளவு கொஞ்சமாய்க் கொடுக்கலாம் என்று விசாரிக்கிறதில்லை. இழிவான காரியங்களில் தங்கள் எண்ணத்தை நாட்டாமல், தங்கள் மீட்பருடைய சித்தத்துக்குப் பூரணமாய் இணங்கிப்போகவே நோக்கமுடையவர்களாகியாவற்றையும் ஒப்புக்கொடுத்து, தாங்கள் தேடும் பொருளின் மதிப்புக்குத்தக்க பிரியத்தைக் காட்டுகிறர்கள். இவ்வித கம்பீரமான பேரன்பு இல்லாத கிறிஸ்தவ ஊழியம் வெறும் பேச்சும், போலி வெளியாச்சாரமும் பெரும்பாடுமாயிருக்கிறது.SC 74.1

    உன்னை முழுவதுமாய் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பது மகா பெரிய பலியென்று நினைக்கிறாயாக்கும்? கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிறதென்ன? என்னும் கேள்வியை நீயே கேள். தேவனுடைய குமாரன் நம்முடைய மீட்புக்காக தம்முடைய உயிர் அன்பு பாடுகளாகிய எல்வாவற்றையும் தானஞ் செய்திருக்கிறாரே. அப்படியானால் அவ்வளவு பெரிய அன்புக்கு அபாத்திரராகிய நாம் நம்முடைய இருதயத்தை அவருக்குக் கொடாமல் வைத்துக்கொள்ளலாமா? நமது ஜீவிய காலத்தின் ஒவ்வொரு நிமிஷமும் அவருடைய கிருபையின் ஆசிர்வாதங்க்ளையனுபவிக்கிறேம். ஆகையால் நாம் எவ்வளவு பெரிய நிர்ப்பந்தத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமென்பதைப் பூரணமாய் உணராதவர்களாயிருக்கிறேம். அவர் காட்டிய அன்பையும் அவர் செலுத்திய பலியையும் அவமதிக்க விரும்பி, நம்முடைய பாவங்கள் பீறின அவரை நோக்கத்தகுமா? மகத்துவம் பொருந்திய கர்த்தாவின் அளவற்ற தாழ்மையை நோக்கும்போது ஜெபத்தினல் அவரோடு மல்லுக்கட்டுவதினாலும் நம்மையே தாழ்த்துவதினாலும் மாத்திரம் ஜீவனுக்குள் பிரவேசிக்கவேண்டியதாகையால் நாம் முறுமுறுக்கலாமா?SC 77.1

    “தேவன் என்னை அங்கிகரித்திருக்கிறர் என்கிற நிச்சயத்தை அடைவதற்குமுன் நான் ஏன் மனஸ்தாபத்தோடும் நொறுங்குண்ட இருதயத்தோடும் போக வேண்டும்” என்பதாய் அகங்காரிகளில் பலர் எண்ணுகிறார்கள். உனக்குக் கிறஸ்துவைக்காட்டுகிறேன். அவர் பாவமற்றவராயிருந்த்து மாத்திரமல்ல, அதற்கு மேலானவராய் அதாவது, வானலோக பிரபுவுமாயிருந்தார். ஆயினும், அவர் மனிதன் நிமித்தமே பாவியானர். “அவர் அக்கிரமக்காரரில் ஒருவாராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேணடிக்கொணடார்.” ஏசா. 53:12.SC 77.2

    நாம் நம்மை முழுவதும் அவருக்கு ஒப்புகொடுத்தாலும் நாம் என்னத்தை அவருக்குக்கொடுக்கிறோம்? பாவத்தினல் தீட்டான நமது இருதயத்தைத்தான். அவர் சுத்திகரிக்கிறதற்கும் தமது சொந்த இரத்தத்தினால் கழுவி தமது இப்பற்ற அன்பினால் இரட்சிப்பதற்கும் கொடுக்கிறோம். அப்படியிருந்தும் எல்லாவற்றையும் சமூலமாய் விட்டு விடுவது லேசான காரியமாவென்று மனிதர் எண்ணுகிறார்கள்! இவ்வித வார்த்தைகளைக் கேட்கிறதற்கு என் காது கூசுகிறது, அவைகளை எழுதவும் அஞ்சுகிறேன்.SC 78.1

    நமக்கு மிகவும் நன்மையாகவுருக்கிற எந்தக்காரியத்தையும் விட்டுவிடவேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்லவே. அவர் செய்கிற எல்லாக்காரியத்தையும் கவனிக்கும்போது, தமது பிள்ளைகளின் நல்வாழ்வையே கோருகிறார். கிறிஸ்துவைத் தெரிந்து கொள்ளாதவர்கள் யாவரும் தாங்களே அடைந்து கொள்ளும்படி தேடுகிற காரியத்தைப்பார்க்கிலும் அதிக மேலான ஆசீர்வாதத்தை யருளுவதற்காக அவைகளை வைத்திருக்கிறர் என்பதை அறியமாட்டார்களா? மனிதன் தேவனுடைய சித்தத்துக்கு விரோதமாக நினைக்கிறபோதும் நடக்கிறபோதும் தன் சொந்த ஆத்துமாவுக்கே பெருந்தீங்கையும் அநியாயத்தையும் வருவித்துக்கொள்ளுகிறான். தமது சிருஷ்டிகளுக்கு நன்மையானவைகள் எவைகளென்று அறிகிறவராலும், அவைகளுக்கு நலமான காரியங்களை ஒழுங்கு செய்கிறவராலும் விலக்கப்பட்ட பாதையில் நடப்போர் யாதொரு சந்தோஷத்தையும் கண்டறியார். மீறிநடக்கிற பாதை நிர்ப்பந்தமும் அழிவும் மிகுத்தது என்பதற்கு யாதொரு சந்தேகமுமுண்டோ?SC 79.1

    தேவன் தமது பிள்ளைகள் படுகிற பாடுகளைப் பார்த்துச் சந்தோஷங்கொள்ளுகிறார் என்கிற எண்ணம் அபத்தமானது. மனிதன் சுகத்தையும் வாழ்வையும் அநுபவிக்கும்போது, வானலோக முழுவதும் பூரித்து மகிழ்கிறது. நம்முடைய பரமபிதா தமது சிருஷ்டிகளிலெதற்கும் அது சந்தோஷமடையும் மார்க்கத்தை அடைக்கிறதில்லை. மோட்சவாசலையும் சந்தோஷக் கதவையும் அடைத்து, நம்மைப் பாடுகளுக்கும் தொல்லைகளுக்கும் உட்படுத்துவதற்குக் காரணமாயிருக்கிற அஜாக்கிரதையானவைகளை நாம் அகற்றிவிட வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பம். லோக இரட்சகர் மனிதரை அவர்கள் இருக்கிற பிரகாரமாகவே குறை, அறிவீனம், பலவீனம் முதலிய குற்றங்களோடு ஏற்றுக்கொள்ளுகிறர். அவர்களுடைய பாவத்தைச் சுத்தி கரிப்பதுமல்லாமல், தமது திரு உதிரத்தினலே இரட்சிப்பைக் கட்டளையிட்டு, தம்முடைய சுமையைச் சுமக்கவும் தமது நுகத்தை அணிந்துகொள்ளவும் சம்மதிக்கிற யாவருடைய ஆத்ம வாஞ்சையையும் திருப்தியாக்குவார். ஜீவ அப்பத்துக்காக அவரண்டை வருகிற யாருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அளிக்கவேண்டுமென்பதே அவருடைய நோக்கம். கீழ்ப்படியாமை அடையக்கூடாதிருக்கிற பாக்கியத்தின் உன்னதத்திற்கு நம்மை நட்த்தும்படியான கடமைகளை மாத்திரம் நாம் நிறைவேற்ற வேண்டுமென்பது அவருடைய ஏற்பாடு. ஆத்துமாவின் சந்தோஷமுள்ள சரியான ஜீவியமாவது, மகிமைக்கு நம்பிக்கையாயிருக்கிற கிறிஸ்துவை உள்ளத்தில் நாட்டிக் கொள்வதேயாம்.SC 79.2

    நான் என்னை தேவனுக்கு ஒப்பக்கொடுப்பது எப்படி? என்று பலர் கேட்பதுண்டு. நீ அவருக்கு உன்னை கையளிக்க விரும்புகிறாயாக்கும். ஆனால் உன் சன்மார்க்க பலங்குன்றி, சந்தேகத்துக்கு அடிமையாகி பாவ ஜீவியஞ் செய்யும் வழக்கத்துக்கு ஆளாய்விட்டாய். உன் வாக்குகளும் தீர்மானங்களும் மணலினால் திரிக்கப்பட்ட கயிறுக்கொப்பானவைகள். உன் நினைவுகளையும், உன் ஊக்கத்தையும், உன் பாசத்தையும் ஆளமுடியாமலிருக்கிறய். நீ மீறின வார்த்தையைப்பற்றிய அறிவும், நீ இழந்து போன பிரதிக்கினையுந்தான் நீ யதார்த்தமாய் நடக்கிறபோது உன். நம்பிக்கையைப் பலவீனப்படுத்திற்று. மேலும், தேவன் உன்னை அங்கிகரிக்கமாட்டார் என்னும் எண்ணத்தையும் உண்டாக்கிற்று. ஆயினும் நீ இளக்கரித்துப் போகவேண்டியதில்லை. மனுஷ சித்தத்துக்கு இருக்கிற மெய்யான சத்துவம் எதுவென்றறிந்து கொள்வதே போதுமானது. தீர்மானிக்கும் அல்லது தெரிந்துகொள்ளும் சக்தியை மனுஷீக சுபாவத்துக்குரிய ஆளுந்திறமையாயிருக்கிறது. ஒவ்வொரு காரியமும் சித்தம் சரியாய் நடந்தேறுவதில்தான் இருக்கிறது. தெரிந்துகொள்ளும் சக்தியை தேவன் மனிதருக்கு அநுக்கிரகித்திருக்கிறார். அதை ஏற்றபடி பிரயோகிப்பதே அவர்களுடைய கடமை. நீ உன் இருதயத்தை மாற்றவும், நீயே அவருக்கு உன் பாசத்தை காட்டவு முடியாது. ஆனல் நீ அவரைச் சேவிக்கும் படிக்குத் தெரிந்து கொள்ளலாம். உன் சித்தத்தையும் அவருக்குக் கொடுக்கலாம். அப்போது அவர் தமது பிரியத்தின்படி செய்யவும் நினைக்கவும் உன்னில்தான் கிரியையை நடப்பிப்பார். இவ்விதமாக உன் முழு சுபாவமும் கிறிஸ்துவானவருடைய ஆளுகைக்குள்ளாகும். உன் நேசம் அவரைப் பற்றியிருக்கும். உன் நினைவுகளும் அவரையடுத்ததாயிருக்கும்.SC 80.1

    நன்மையையும் பரிசுத்தத்தையும் நாடுவது ஒருவாறு நீதியானதுதான். ஆனால் அந்த நாட்டத்தோடு நின்றுவிடுவதினால் பிரயோஜனம் ஒன்றுமேயில்லை. கிறிஸ்தவர்களாயிருக்கவேண்டும் என்று விரும்பும்போதும், எண்ணும்போதும் அநேகர் தவறிப்போகிறார்கள். தங்கள் சித்தத்தை தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுக்கும் அந்தப் பதவிக்கு வந்தெட்டாதபடியால் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்றெண்ணப்படுகிறதில்லை.SC 82.1

    சித்தத்தைச் சரியாய் அப்பியாசப் படுத்துவதினால்தான் உன் ஜீவியத்தில் முழு மாறுதல் உண்டாகும். உன் சித்தத்தை கிறிஸ்துவுக்குக் கொடுப்பதினால் எல்லாவற்றிற்கும் மேலான கர்த்தத்துவத்திற்கும் வல்லமைக்கும் மேலாயிருக்கிறா வல்லவரோடு இணங்கி ஐக்கியப்பட்டுப்போகிறய். உறுதியாய் நிற்கிறதற்கு உனக்கு மேலேயிருந்து பலம் வரும். இப்படி நீ அடிக்கடி தேவனுக்கு அடங்கிப் போவதினால் புதிய ஜீவியத்தையும் விசுவாச ஜீவியத்தையும்கூட நட்த்தக்கூடியவனவாய்.SC 82.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents