Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    THE TEST OF DISCIPLESHIP.

    சீஷத்துவப் பரிட்சை

    “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழயவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.” 2 கொரி. 5:17.SC 98.1

    ஒரு மனிதன் தான் குணப்பட்ட காலத்தையும் இடத்தையும் திட்டமாக சொல்ல முடியாமலும், அந்த குணப்படுதலோடு சம்பந்தப்பட்ட பல சம்பவங்களை வரிசைக் கிரமமாகச் சொல்ல இயலாமலும் இருக்கலாம்; இதனால் அவன் குணப்படவில்லையென்று ரூபகாரப்படுத்துவது அசாத்தியம். “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியானால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்” யோவான் 3:8 என்று இயேசு நிக்கொதேமுவுக்குச் சொன்னார். காற்றானது கண்ணுக்கு மறைவாயிருந்தாலும் அதின் கிரியையினால் அதுண்டென்று எல்லாரும் கண்டறிந்துகொள்ள லாம்; அவ்வாறே மனுஷனுடைய இருதயத்தில் தேவ ஆவியானவர் நடத்தும் கிரியையும் இருக்கிறது. மறு ஜென்மத்தையுண்டாக்கக்கூடிய அந்தச் சக்தியானது மனுஷக் கண்களுக்கு புலப்படாமல் ஆத்துமாவிலே புதிய ஜீவனைப் பிறப்பிக்கிறது; தேவசாயலாக ஒரு புதிய உயிரைச் சிருஷ்டிக்கிறது.SC 98.2

    ஆவியானவருடைய கிரியை அரவமற்றதும் காணக்கூடாததுமாயினும், அதன் பலாபலன்கள் வெளியரங்கமானவை. தேவ ஆவி இருதயத்தைப் புதுப்பிக்கும் பொழுது, ஜீவியமானது அதற்குச் சாட்சி பகரும். நம்முடைய இருதயங்களை மாற்றிக் கொள்ளவாவது, நம்மைத் தேவனோடு ஒருமைப்பட்டவர்களாக்கிக் கொள்ளவாவது முடியாதவர்களாயிருக்கிறோமென்றும், நம்மால் ஒன்றும் ஆகாதென்றும், நம்முடைய நற்கிரியைகள் நம்மை ஈடேற்றது என்றும் எண்ணி இவற்றின்மேல் நாம் சாராமலிருக்கையில் தேவ கிருபையானது நமக்குள்ளே குடி கொண்டிருக்கிறதோ இல்லையோயென்பதை நமது ஜீவியம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிவிடும். நம்முடைய குணாதிசயங்களிலும், ஒழுக்க பழக்கங்களிலும், வேலைகளிலும் மாறுதல் தோன்றும். அவைகள் முற்காலத்தில் இருந்ததற்கும் தற்காலத்தில் இருக்கிறதற்குமுள்ள வித்தியாசம் வெகு தெளிவாகக் காணப்படும். நாம் எப்போதாவது செய்கிற நற்கிரியைகளினாலும் வேளாவேளை நடப்பிக்கிற துர்க்கிரியைகளி னாலுமல்ல, எப்பொழுதும் வழக்கமாக நம்முடையவாயினின்று புறப்படும் வார்த்தைகளும் நாம் செய்கிற கிரியைகளும் போகிற போக்கினாலேயே நம்முடைய குணாதிசயம் வெளியாகிறது.SC 99.1

    கிறிஸ்துவினால் உண்டாகிற புதுப்பிக்கும் வல்லமை நம்மில் இல்லாதிருக்கும்பொழுதும் வெளி ஆசாரங்களெல்லாம் சரிவர இருக்கலாம் என்பது மெய்தான், ஒருவனுடைய உள்ளத்தில் அதிகாரப் பிரியமும், மற்றவர்கள் தன்னை மரியாதையுடன் கனப்படுத்தவேண்டுமென்ற ஆசையும் எழும்பும்பொழுது, அவன் ஒருவாறு சீரான ஜீவியம் நடத்தத் தலைப்படுகிறான். மானமும் மரியாதையுமாயிருக்கவேண்டுமென்கிற ஆவல் நம்மிடத்தில் தீமை தலைகாட்டாதபடி செய்துவிடுகிறது. தன்னயம் நிறைந்த ஒருவன் பரோபகாரமான கிரியைகளையும் செய்யலாம். இது இப்படி இருக்க நாம் யார் பக்கத்தைச் சேர்ந்தவர்களென்று எவ்வாறு அறிந்துகொள்ளலாம்.SC 100.1

    நம்முடைய இருதயத்தை ஆளுகிறது யார்? நாம் யாரைப்பற்றி அடிக்கடி நினைக்கிறோம்? யாரைப்பற்றி சம்பாஷிக்கப் பிரியப்படுகிறோம்? யாரை முழு இருதயத்தோடும் நேசிக்கிறோம்? யாருக்காக உழைக்க விரும்புகிறோம்? நாம்கிறிஸ்துவுடையவர்களானால் நம்முடைய எண்ணங்களெள்ளாம் அவரோடிருக்கின்றன. நம்முடைய மனோகரமான நினைவுகள் அவரைப்பற்றியே இருக்கின்றன. நம்மையும் நமக்குள்ள யாவற்றையும் அவருக்குப் பிரதிஷ்டை செய்கிறோம். அவருடைய சாயலை அணிந்து, அவருடைய சுபாவத்தைப்பெற்றுக்கொண்டு, அவருடைய சித்தத்தின் பிரகாரம் நடந்து, எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்தவேண்டுமென்று விரும்புகிறோம்.SC 100.2

    கிறிஸ்துவுக்குள் புதுச் சிருஷ்டிகளாகிறவர்கள் எவர்களோ அவர்கள் ஆவியின் கனிகளைக்கொடுக்கிறார்கள்; அவையாவன : -“அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” அவர்கள் தங்களை முன்னான இச்சைகளுக்கு ஒப்புக்கொடாமல், தேவகுமாரனைப்பற்றும் விசுவாசத்தால், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருடைய குணங்களைத் தங்கள் ஜீவியத்தில் பிரதிபிம்பிக்கச்செய்து, அவர் பரிசுத்தமாயிருக்கிறதுபோலத் தங்களையும் சுத்திகரித்துக் கொள்ளுவார்கள். ஒருகாலத்தில் சென்மப்பகையாய் வெறுத்தவைகளை இப்பொழுது நேசிக்கிறார்கள்; ஒருகாலத்தில் நேசித்தவைகளை இப்பொழுது வெறுக்கிறார்கள். அகந்தைக்காரரும் சுய அதிகாரப் பிரியருமாயிருந்தவர்கள் சாந்தகுணமுள்ளவர்களாகவும் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வீணரும் மேட்டிமைக்காரருமாயிருந்தவர்கள் அடக்கமும் பயபக்தியுள்ளவர்களுமாகத் திரும்புகிறார்கள். மதுபானப் பிரியன் தெளிந்த புத்தியுள்ளவனாகிறான், விபசாரன் சீரடைகிறான். உலகத்தில் வழங்குகிற வீணான பழக்கங் களும் ஆசாரங்களும் ஒழிந்து போகின்றன. 1 பேதுரு 3:3, 4-ல் கண்டிருக்கிறபடி கிறிஸ்தவர்கள் “புறம்பான அலங்கரிப்பை” நாடாமல், “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிறகுணத்தையே” தேடுவார்கள்.SC 101.1

    முழு மாறுதல் தோன்றாவிட்டால் உத்தமமான மனந்திரும்புதலாக மாட்டாது. ஒரு பாவியானவன் மறுபடியும் பிரதிக்கினைசெய்து, தான் திருடிக்கொண்டதைத் திரும்பக்கொடுத்து, தன்பாவங்களை அறிக்கைசெய்து, தேவனையும், தன்னைப்போலொத்த மனுஷரையும் நேசிப்பானாயின், அவன் மரணத்தைக்கடந்து ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கிறதாக நிச்சயங்கொள்ளலாம்.SC 102.1

    நாம் பாவமும் பிழைபாடு முள்ளவர்களாகக் கிறிஸ்துவண்டை வந்து மன்னிக்கும் சுபாவமுள்ள அவருடைய கிருபைக்குப் பங்குள்ளவர்களாகும்பொழுது, அன்பானது நம்முடைய இருதயத்தில் உதயமாகிறது, ஒவ்வொரு சுமையும் இலகுவாகிறது, ஏனெனில் கிறிஸ்து நம்மேல் வைக்கிற நுகம் மெதுவாயிருக்கிறது. கடமை இன் பகரமாகிறது. நம்முடைய சௌகரியங்களைப் பிறருக்காக ஒறுப்பது மனோகரமாகிறது. முற்காலத்தில் இருள் மூடினதாக நமக்குத்தோன்றின பாதையானது நீதியின் சூரியனுடைய கிரணங்களால் இலங்குகிறது.SC 102.2

    கிறிஸ்துவினுடைய குணம் எவ்வளவு அழகு வாய்ந்ததென்பது அவருடைய அடியார்களிடத்தில் காணப்படும். தேவனுடைய சித்தத்தின்படி நடப்பதே அவருடைய ஆனந்தமாயிருந்தது. தேவன் பேரில் அன்பும், அவருடைய மகிமைக்காக வைராக்கியமும் நம்முடைய இரட்சகருடைய ஜீவியத்தை ஆண்டுவந்தன. அன்பே அவருடைய கிரியைகளையெல்லாம் அலங்கரித்துச் சிறந்தவையாக்கிற்று. அன்பு தேவனிடத்திலிருந்து வருகிறது. கர்த்தருக்கென்று பிரதிஷ்டையாகாத இருதயத்தில் அன்பானது உதிப்பதுமில்லை, வளருவதுமில்லை. எந்த இருதயத்தில் இயேசு அரசாளுகிறாரோ அந்த இருதயத்தில் மாத்திரம் அந்த அன்பைக் காணலாம். “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புக்கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம்” 1 யோவான் 4:19 என்று கண்டிருக்கிறது. தெவகிருபையால் புதிதான இருதயத்திலே குடிகொண்டிருக்கிற அன்பானது எல்லாவற்றையுஞ் செய்ய நாடுகிறது. இந்த அன்பானது ஒருவனுடைய ஜீவியத்தை மாற்றுகிறது. அவனுடைய மனோவாஞ்சையை அடக்கி ஆளுகிறது. அவனுடைய ஆசை விருப்பங்களை அடக்குகிறது, பகையை அடக்குகிறது, aneeநேசபாசங்களை மேன்மையுள்ளதாக்குகிறது. ஆத்துமாவிலே இவ்விதமாகப் பரிபாலிக்கப்பட்டு இந்த அன்பானது ஜீவியத்தை சாதுவுள்ளதாகச்செய்து, சுற்றுமற்றுமுள்ள எல்லாரையும் நல்லவர்களாக்கத் தக்கதான வல்லமையையும் தருகிறது.SC 103.1

    தேவனுடைய பிள்ளைகளும் முக்கியமாக இப்பொழுதுதான் அவருடைய கிருபையை நம்பி குணப்பட்டிருக்கிறவர்களும் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய இரண்டு தப்பிதங்கள் உண்டு. இவற்றில் ஒன்று ஏற்கனவே சொன்னோம்; அது யாது என்றால் மனுஷர் தங்கள் சொந்தக்கிரியைகளை நோக்கிக்கொண்டு, தாங்கள் செய்யக்கூடியதெதுவோ அதையே நம்பி, தங்களைத் தேவனோடு ஒரு மனமாக்கிக்கொள்வதுதான். நியாயப்பிரமாணத்தைக்கைக்கொண்டு தன் சொந்தக் கிரியைகளினால் பரிசுத்தனாவதற்குப் பிரயத்தனப்படுகிற ஒவ்வொருவனும், முடவன் கொம்புத்தேனுக் காசைப்படுகிறதுபோல தன்னாலாகாத காரியத்தை முயற்சிப்பதாகும். மனுஷர் கிறிஸ்துவைத் தள்ளிவிட்டுத் தாங்களே செய்கிற ஒவ்வொரு காரியமும் தன்னயத்தாலும் பாவத்தாலும் கறைபட்டுப்போகிறது. விசுவாசத்தால் நமக்குக் கிடைக்கிற கிறிஸ்துவினுடைய கிருபை ஒன்றே நம்மைப் பரிசுத்தராக்கக் கூடியது.SC 104.1

    மேலே சொன்ன தப்பிதத்துக்க மாறானதும் இதைப்போலவே அபாயகரமானதுமான பிழை என்னவென்றால், கிறிஸ்துவை விசுவாசித்தவுடனே தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது அவசியமில்லை என்றும், விசுவாசத்தால் மாத்திரம் நாம் கிறிஸ்துவினுடைய கிருபைக்குரியவர்களானபடியால் நம்முடைய கிரியைக்கும் இரக்‌ஷ்ணியத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றும் எண்ணுவதாம்.SC 104.2

    ஆனால் இவ்விடத்தில் கவனிக்கும்போது கீழ்ப்படிதல் என்பது எனோதானோவென்று செய்யும் புறம்பான கிரியையல்ல, அன்பின் ஊழியமாம். தேவனுடைய கற்பனை அவருடைய சொந்தத் தன்மையின் சொரூபமாயிருக்கிறது; அன்பே உருக்கொண்டு பிறந்ததுக்குச் சரியாகும்; ஆதலால் அது வானத்திலும் பூமியிலும் அவர் நடத்துகிற அரசாட்சிக்கு அஸ்தி பாரமாகிறது. நம்முடைய இருதயங்கள் தேவசாயலாகப் புதிதாகுமானால், தேவநேசமானது ஆத்துமாவில் வேருன்றப்பெற்றால், நம்முடைய ஜீவியத்தில் தெய்வ கட்டளைக்குச் சரியானபடி நடப்பது அசாத்தியமாகுமோ? அன்பானது ஒருவனுடைய இருதயத்தில் வேரூன்றும்பொழுதும் தன்னைச் சிருஷ்டித்த தேவனுடைய சாயலாக அவன் புதுச்சிருஷ்டியாகும் பொழுதும் “நான் என்னுடைய பிராமணங்களை அவர்களுடைய இருதயங்களிலே வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்.” எபி. 10:16 என்று கண்டிருக்கிற புது உடன்படிக்கை வாக்குத்தத்தம் நிறைவேறுகிறது. கற்பனை இரு தயத்தில் எழுதப்பட்டிருந்தால், அது ஜீவியத்தைத் திருத்திவிடாதா? கீழ்ப்படிதல், அதாவது அன்பின் ஊழியமும் அடக்கமும், சீஷத்துவத்தின் உண்மையான அடையாளம். “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்” 1 யோ. 5:3 என்றும், “அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை” 1 யோ. 2:4 என்றும் வேதம் முறையிடுகிறது. விசுவாசம் ஒன்றே நம்மைக் கிறிஸ்துவினுடைய கிருபைக்குப் பங்குள்ளவர்களாக்குகிறது; இந்த விசுவாசமானது கீழ்ப்படிதல் அவசியமன்று என்று சொல்லாமல், ஏற்ற பிரகாரம் கீழ்ப்படியும்படி நமக்குப் பெலனளிக்கிறது.SC 105.1

    நம்முடைய கீழ்ப்படிதலினாலே இரட்சிப்பைச் சம்பாதித்துக்கொள்ளுகிறதில்லை; ஏனெனில் இரட்சிப்பானது தேவனுடைய இலவசமான ஈவாக இருக்கிறது; நாம் அதை விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்கிறோம். ஆனால் கீழ்ப்படிதல் விசுவாசத்தின் பலனாக இருக்கிறது. “அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமுமில்லை. அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை” என்று 1 யோ. 3 : 5. 6-ல் சொல்லியிருக்கிறது.சரியோ தப்போ என்று காட்டுகிற மெய்யான கருவியாகிய உரைகல் இதுதான். நாம் கிறிஸ்துவிலே தரித்திருந்து, தேவ அன்பு நம்மில் குடிகொண்டிருந்தால், vநம்முடைய உணர்ச்சிகள், சிந்தனைகள், நோக்கங்கள், கிரியைகளாகிய இவையெல்லாம் தேவனுடைய பரிசுத்த பிரமாணத்தின் சட்டங்களில் தெளிவாகக்காட்டியிருக்கிற தேவச்சித்தத்துக்கு இணங்கினவைகளாக இருக்கும். “பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத்தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.” 1 யோ. 3 : 7. சீனாய் மலையில் தேவன் கொடுத்த பத்துக் கற்பனைகள் அவருடைய பரிசுத்த நியாயப் பிரமாணம் என்ன தன்மையுள்ளதென்று தெரிவிக்கிறது; அப்படியே தேவப் பிரமாணமானது நீதி என்ன தன்மையானதென்று வரையறுத்துச்சொல்லுகிறது.SC 106.1

    கிறிஸ்து பேரில் வைத்திருக்கிறதாகச் சொல்லப்படுகிற விசுவாசமானது, மனிதர் தேவனுக்குக் கீழ்ப்படிவதவசியமல்லவென்று போதிக்குமானால், அது எடுப்பான குணமே ஒழிய, விசுவாசமல்ல. “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” எபே. 2:8 என்றும், ஆனால், “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும்” யாக் 2:17 என்றும் சொல்லியிருக்கிறது. இயேசுவானவர் தாம் இப்பூலோகத்துக்கு வருகிறதற்கு முன்னே “எந்தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” சங். 40: 8 என்று தன்னைக் குறித்துப் பேசினார். அவர் மீண்டும் பரலோகதிற்குப் போகிறதற்குச் சற்று முன்னே “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறேன்.” யோ. 15: 10 என்று சொன்னார். பரிசுத்த வேதம் சொல்லியிருக்கிறதையும் கவனியுங்கள்; “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம் .......... அவருக்குள் நிலைத்திருக்கிறதென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.” 1 யோ 3: 3-6. “ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார்.” 1 பேதுரு 2: 21. கர்த்தருடைய கற்பனைக்கு முற்றிலுங் கீழ்ப்படிதல், சம்பூரண நீதி ஆகிய இவை இரண்டும் நாம் நித்திய ஜீவனை அடைவதற்கு அவசியமானவைகள். இவைகள் முற்காலத்தில் எப்படியோ, தற்காலத்திலும் அப்படியேயிருக்கிறது, நம்முடைய ஆதித்தாய் தந்தையர் பாவத்தில் விழுமுன்னே ஏதேனில் எப்படி இருந்த்தோ இப்பொழுதும் அப்படியே மாறாமல் இருக்கின்றது.”’’’ பூரண கீழ்ப்படிதல், நீதி ஆகிய இவை இரண்டையும் விட்டு, வேறெந்தக் காரணத்திலாவது தேவன் நித் திய ஜீவனைக் கொடுப்பாரானால், உலகத்தாருடைய இன்பத்துக்குப் பங்கம் நேரிடும். பாவமும், அதின் மூலமாய் வருகிற துக்கமும் நிர்ப்பாக்கியமும் சதா காலமுமாக நிலைத்திருக்கத்தக்கதான காரணங்களாகும்.SC 107.1

    ஆதாம் பாவம் செய்வதற்கு முந்தி, தேவனுடைய சட்ட்த்துக்குக் கீழ்ப்படிந்து உத்தமனாகத்தக்க வழிவகை அவனுக்கிருந்த்து. ஆனால் உத்தமனாகாமல் தவறிப்போனான், அவனுடைய பாவத்தினிமித்தம் நம்முடைய சுபாவம் கெட்டுப்போயிற்று, நம்மை நாமே நீதிமான்களாக்கிக்கொள்வது அசாத்தியமாயிற்று. நாம் பாவிகளும் அசுத்தருமானதால், பரிசுத்தமான சட்ட்த்திற்கு முற்றிலும் கீழ்ப்படிவது நம்மாலாகாது. நாம் என்னென்ன செய்யவேண்டுமென்று தேவனுடைய நியாயப்பிரமாணம் கேட்கிறதோ அதையெல்லாம் சரியாக நடத்துவதற்கு அவசியமான நீதிமார்க்கம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நாம் தப்பித்துக்கொள்வதற்கேற்ற வழியை இயேசு சித்தம் பண்ணி வைத்திருக்கிறார். நமக்கு நேரிடக்கூடிய சோதனைகளும் கஷ்டங்களும் அவர் பூமியில் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த்து. ஆகிலும் பாவமில்லாதவராக இருந்தார். அவர் நமக்காக மரித்தார், இப்பொழுது நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு நீக்கித் தமிமுடைய நீதியை நமக்குத் தருவதாகச் சொல்லுகிறார். உன்னை அவருக்கு ஒப்புக்கொடுத்து, அவரை உன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வாயானால், பாவ முள்ளவனாக இம்மட்டும் நீ ஜீவித்துக்கொண்டு வந்த போதிலும், அவர் நிமித்தம் நீதிமானாக எண்ணப்படுவாய். உன்னுடைய தன்மையிருக்கவேண்டிய இடத்தில் கிறிஸ்துவினுடைய தன்மை நிற்கிறது; தேவன் உன்னை ஒருநாளும் பாவஞ் செய்யாதவனைப் போல் அங்கீகரிக்கிறார்.SC 109.1

    இதையடுத்த இன்னோர் காரியமுண்டு. அதென்னவெனில் கிறிஸ்து இருதயத்தை மாற்றுகிறார், விசுவாசத்தின் மூலமாக உன் இருதயத்தில் அவர் வசிக்கிறார். விசுவாசத்தினாலும் உன்னுடைய சித்தத்தை அவருடைய சித்தத்துக்கு எப்பொழுதும் விடாத்தொடர்ச்சியாக ஒப்புக்கொடுப்பதினாலும், மேலே சொன்ன கிறிஸ்துவோடு கூடிய ஐக்கியதையும் கொண்டு செலுத்த வேண்டியவனாயிருக்கிறாய். இவ்வாறு நீ செய்யுங்காலமெல்லாம், அவருடைய பிரியத்தின்படியே நீ விரும்பவும் நடந்துகொள்ளவும் தக்கதாக அவர் உன்னிலே கிரியை செய்கிறார். அப்பொழுது “நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” கலா. 2: 20 என்று நீ சொல்லலாம். அப்படியே இயேசுவும் தமது சீஷரை நோக்கி “பேசுகிறவர்கள் நீங்களல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” மத். 10: 20 என்றும் சொல்லுகிறார். இப்படியாக இயேசு உன்னிலே கிரியை நட்த்துங்காரணத்தால் நீயும் அவரைபோல நடந்து, அவர்செய்த கிரியைகளையே நீயும் செய்கிறவனாவாய். அதாவது, நீதியின் கிரியைகளையும் கீழ்ப்படிதலையும் செய்கிறவனாவாய்.SC 110.1

    ஆகையால் பெருமை பாராட்டிக்கொள்வதற்கு நம்மிலே ஒன்றுமில்லை. இறுமாப்புக்கொள்வதற்கும் யாதொரு காரணமுமில்லை. அப்படியானால் நம்முடைய நம்பிக்கை என்ன? கிறிஸ்துவினுடைய நீதி நம்முடைய நீதியாவது ஒன்று; அவருடைய ஆவியானவர் நம்மிட்த்திலும் நமது மூலமாகவும் கிரியை செய்வது மற்றொன்று.SC 111.1

    விசுவாசத்தைப்பற்றி நாம் பேசும்பொழுது, மனதில் பதித்துக்கொள்ளவேண்டிய வித்தியாசம் ஒன்றுண்டு. விசுவாசத்துக்கு முற்றிலும் வேறான ஒருவித நம்பிக்கை இருக்கிறது. தேவன் உண்டு, அவர் வல்லமையுள்ளவர், அவருடைய வசனம் சத்தியமானவை என்ற காரியங்களை மறுத்துப்பேச சாத்தானாலும் முடியாது, அவனுடைய பரிவாரக் கூட்டத்தாலும் இயலாது. “பிசாசுகளும் விசுவாசித்து நடுங்குகின்றன” யாக். 2: 19 என்று வேதம் விளம்புகின்றது. ஆயினும் இது விசுவாசமல்ல. தேவனுடைய வசனத்தை நம்பி, அவருக்கே சித்தத்தை அடிமைப்படுத்துகிறது எங்கேயோ, இருதயத்தை அவருக்கு ஒப்புக்கொடுத்து நேச பாசங்களை அவர் பேரிலே ஊன்றுவது எங்கேயோ, அங்கே விசுவாசம் இருக்கிறது, இந்த விசுவாசமானது அன்பினால் கிரியைசெய்து, ஆத்துமாவைச் சுத்திகரிக்கிறது. இந்த விசுவாசத்தினாலே இருதயமானது தேவனுடைய சாயலாக புதுப்பிக்கப்படாவிட்டால் தேவ சட்ட்த்துக்குக் கீழ்ப்படியவும் கீழடங்கவும் ஆகாது. புது ரூபமடையும்பொழுது “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்” சங். 119:97 என்று சங்கீதக்காரன் சொல்லுகிறதுபோல, பரிசுத்த கற்பனைகளின் பேரில் களிகூறுகிறது. நியாயப்பிரமாணத்தின் நீதியானது நம்மிலே நிறைவேறுகிறது. ஏனெனில் நாம் மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறோம். ரோ. 8:1. பார்க்கவும்.SC 111.2

    கிறிஸ்துவானவர் பாவத்தை மன்னிக்கிறதற்குப் போந்த அன்பு நிறைந்தவர் என்று அறிந்து, மெய்யாகவே தாங்கள் தேவனுடைய பிள்ளைகளாவதற்கு விரும்புகிற அநேகர் உண்டு; ஆயினும், தங்கள் நடத்தை இன்னும் சீர்கெட்ட்தாயிருக்கிறதென்றும், தங்கள் ஜீவியமானது குறையுள்ளதென்றும் கண்டறிகிறதோடு, பரிசுத்த ஆவியானவர் தங்கள் இருதயங்களைப் புதுப்பித்திருக்கிறாரோ இல்லையோ என்றும் சந்தேகங்கொள்ளுகிறவர்களாயுமிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நாம் சொல்வது என்னவென்றால், திடனற்று பின் திரும்பிவிடாதேயுங்கள் என்பதே. நம்முடைய குற்றங்குறைகளினிமித்தம் இயேசுவின் பாத்த்திலே சாங்கோபாங்க மாக விழுந்து அவரை நமஸ்கரித்து மனங்கசந்து கண்ணீர் விடவேண்டியது வரும்; ஆயினும் மனந்தளர்ந்துபோக்க்கூடாது. பகைவன் நம்மேல் வெறி கொண்டபோதிலும், தேவன் நம்மைத்தள்ளிவிடார், கைவிடார். ஏனெனில் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தி லிருந்துகொண்டு நமக்காக விண்ணப்பம் செய்கிறார். “நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” 1 யோ. 2:1 என்று சீஷனாகிய யோவான் 16:27 என்று கிறிஸ்துபேசின வார்த்தைகளையும் மறந்துபோகாதிரு. உங்களைத் தம்மண்டைசேர்த்துத் தமது தூய்மையும் பரிசுத்தமும் உங்களிடத்தில் பிரகாசிப்பதைப் பார்க்கும்படி விரும்புகிறார். உங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்தால் உங்களில் நல்ல கிரியையைத்தொடங்கியிருக்கிறவர் இயேசுகிறிஸ்துவினுடைய நாள் பரியந்தம் அந்தக்கிரியையை நடத்துவார். முன்னைவிட ஊக்கமாக ஜெபஞ் செய்யுங்கள்; முழுவதுமாக விசுவாசிப்போம், நம்முடைய சுயபலத்தின்மேல் நம்பிக்கை அற்றுப்போகப்போக, நம்முடையை இரட்சகர் வல்லமையுள்ளவரென்பதை நம்புவோம்; நம்முடைய ஜீவியத்துக்கு சந்தோஷமாயிருக்கிறவரைப் போற்றிப்புகழுவோமாக.SC 112.1

    நீ இயேசுவண்டை நெருங்க நெருங்க, எவ்வளவு குற்றத்தையுடையவனென்று உன் கண்களுக்கு நன்றாய்ப் புலப்படும்; ஏனெனில் உன் கண்கள் தெளிவடையும். அப்பொழுது உன் குறைவுகளுக்கும் அவருடைய பூரண பரிசுத்த சுபாவத்துக்கும் எவ்வளவோ பெரிய வித்தியாசம் உண்டென்பதைப் பார்ப்பாய். சாத்தானுடைய மாயங்கள் சக்தியற்றுப்போயின என்பதற்கும், உயிர்ப்பிக்கின்ற தேவ ஆவியின் வல்லமை உன்னை எழுப்புகிறதென்பதற்கும் இதுவே தேவ அத்தாக்‌ஷி.SC 114.1

    தன்னுடைய சொந்தப்பாவத்தை உணராத இருதயத்திலே இயேசுவானவர் பேரிலுள்ள பூரண அன்பு வசிக்கவே முடியாது. கிறிஸ்துவினுடைய கிருபையானது ஒரு ஆத்துமாவை மறுரூப்ப்படுத்தும்பொழுது, அந்த ஆத்துமாவானது அவருடைய திவ்விய சுபாவத்தைப் பார்த்து அதிசயப்படுகிறது. நம்முடைய ஆவிக்குரிய அங்கவீனத்தை நாம் பார்க்கவில்லையானால் இயேசுவினுடைய அழகையும் சிறப்பையும் நாம் இன்னும் பார்க்கவில்லையென்பதற்கு இது ஏற்றதோர் அத்தாக்‌ஷியாகும்.SC 114.2

    நம்மை நாமே எவ்வளவு குறைவாக மதிக்கிறோமோ, நம்முடைய இரட்சகருடைய மட்டற்ற பரிசுத்தத்தையும் அழகையும் அவ்வளவுக்கு அதிகமாக மதிக்கத்தலைப்படுவோம். நாம் பாவிகள் என்று நாம் கண்டு கொள்ளும்பொழுது, மன்னிக்க்க் கூடியவரண்டை ஓடுகிறோம். ஆத்துமாவானது தனது பலவீனத்தை அறிந்துணர்ந்து கிறிஸ்துவண்டை சேர யத்தனிக்கும் பொழுது அவர் தம்மை வல்லமையுடனே வெளிப்படுத்துவார். இது அவசியமென்று நமக்குதெரிந்தவுடனே அவரண்டைக்கும் அவருடைய வசனத்தண்டைக்கும் போக நாம் எவ்வளவுக்கதிகமாக துரிதப்படுகிறோமோ அவ்வளவுக்கதிகமாக அவருடைய சுபாவத்தைப்பற்றி மகத்தான அபிப்பிராயங்கொண்டு, அவருடைய சாயலை நம்மிடத்திலே பூரணமாக பிரதிபிம்பிக்கச் செய்வோமென்பதற்கு யாதொரு ஐயமுமில்லை.SC 114.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents