Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    HELPS TO CHRISTIAN LIVING.

    கிறிஸ்தவ ஜீவயத்துக்குதவி.

    தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்தி நம்மைத் தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளத்தேடுகிற வழிவகைகள் அனேகமுண்டு. இயற்கைப்பொருள்கள் இடைவிடாமல் நமது புலன்களுக்கு அறிவைக் கொடுக்கின்றன. தேவனுடைய சிருஷ்டிகளிலே விளங்குகிற அவருடைய அன்பும் மகிமையும் களங்கமற்ற இருதயத்திலே பதிகின்றன. இயற்க்கை வஸ்துக்கள் மூலமாகத் தேவன் அனுப்புகிற செய்திகளைக் கவனுமுள்ள காதுகேட்டு அறிந்து கொள்ளக்கூடும். பசுமையான கழனிகள், மேகமளாவிய விருக்ஷங்கள், மொக்குகள், புஷ்பங்கள், கடந்து செல்லுகின்ற மேகங்கள், பெய்கின்ற மழை, சப்திக்கின்ற சிற்றாறு, வானமண்டலங்களின் மகத்துவங்களாகிய இவை நமது இருதயங்களோடு பேசுகிறதுபோல பேசி, அவையெல்லாவற்றையும் படைத்தவரோடு நாம் பழகிக்கொள்ளும்படி நன்மை அழைக்கின்றன.SC 148.1

    நம்முடைய இரட்சகர் தமதுசிறந்த போதங்களை இயற்கை வஸ்துக்களோடு ஒட்டிப்பேசினார். மரங்கள், பறவைகள், பள்ளத்தாக்கிலுள்ள மலர்கள், குன்றுகள், களங்கள், அழகுவாய்ந்த ஆகாய மண்டலங்களாகிய இவை மாத்திரமல்ல, அன்றாடம் ஜீவியத்தோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களெல்லாம் சத்தியவார்த்தைகளோடு சேர்த்துப் பேசப்பட்டிருக்கிறபடியால், உழைப்பாளியொருவன் தனது சோலிகளின் மத்தியிலுங்கூட அவருடைய போதங்களை மிகவும் எளிதாக அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.SC 149.1

    தேவன் நம்முடைய வீடாகிய பூமியை வெகு அழகுள்ளதாகப் படைத்திருக்கிறார்; அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய சிருஷ்டிப்பின் நலத்தைக்கண்டு, அதின் இயற்க்கையான அழகைப்பார்த்து மகிழ வேண்டுமென்று விரும்புகிறார். அவர் அழகின் மேல் பிரியமுள் ளவர், ஆயினும் வெளியான அலங்காரத்தைப் பார்க்கிலும் இருதயத்தின் உள்ளான அழகையே அதிகமாக விரும்புகிறார். மலர்களின் செளந்தரியமான இலக்ஷணங்களாகிய தூய்மையையும் கபடமின்மையையும் நாம் பரிபாலிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.SC 149.2

    நாம் கூர்ந்து கவனிப்போமானால் தேவன் சிருஷ்டித்திருக்கிறவையெல்லாம், நாம் கீழ்ப்படிந்து நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று நமக்குப் போதிக்கின்றன. வழியொன்றுமில்லாத ஆகாய வெளியில் யுகம் யுகமாய்த் தங்களுக்குக் குறிக்கப்பட்டிருக்கிற பாதைகளில் செல்லுகின்ற நட்சத்திரங்கள் தொடங்கிச் சிறிய அணுக்கள் வரையிலுமுள்ள எல்லா இயற்கைப் பொருட்களும் சிருஷ்டிகருடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிகின்றன. தேவன் படைத்திருக்கிற ஒவ்வொரு வஸ்துவையும் ஆதரித்து வளர்க்கிறார். எல்லையில்லாத ஆகாய வெளியில் தொங்குகின்ற கணக்கற்ற மண்டலங்களைத் தாங்கிக்கொண்டிருக்கிற தேவன், அச்சமின்றிப் பாடிக்கொண்டலைகிற சிறிய ஊர்க்குருவிக்குங்கூட்த் தேவையானதெல்லாவற்றையும் சவதரித்துக் கொடுக்கிறார். மனுஷர் தினந்தோறும் தங்கள் வேலைகளுக்குப் போகும்பொழுதும், ஜெபம் பண்ணும்பொழுதும், இரவில் படுக்கப்போகும்பொழுதும், அதிகாலையில் எழுந்திக்கும்பொழுதும், பணக்காரன் தனது மாளிகையில் மன்ங்களிக்க உண்ணும் பொழுதும், அல்லது ஏழையொருவன் தனது மக்க ளைக்கூட்டித் தன்னிட்த்திலுள்ள சொற்ப ஆகாரத்தை அவர்களுக்குப் பகிரும்பொழுதும், பரமபிதா இவர்கள் ஒவ்வொருவரையும் உருக்கத்தோடு கவனிக்கிறார். கடவுளுக்குத் தெரியாமல் ஒருவரும் கண்ணீர் சிந்துவதில்லை, அவர் பார்க்காமல் ஒருவரும் நகைப்பதுமில்லை.SC 150.1

    இதை நாம் பூரணமாக நம்புலோமானால் நமக்கு அடாத கவலைகளெல்லாம் நீங்கிவிடும். நமது ஜீவியத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தவறிப்போகாமல் கைகூடிவரும்; ஏனெனில், ஒவ்வொரு காரியமும், அது பெரிதானாலும் சரி, சிறிதானாலுஞ்சரி, தேவனுடைய கரங்களில் ஒப்புவிக்கப்பட்டிருக்கும்; தேவனுக்கோ பல கவலைகளால் மயக்கமில்லை, அவற்றின் பாரத்தால் அவர் அழுந்திப்போகிறதுமில்லை. அப்ப்டியானால் அனேகர் அறியக்கூடாத ஆத்தும இளைப்பாறுதலை அடையலாம்.SC 151.1

    உன்னுடைய புலன்கள், கண்ணைக்கவருகின்ற இந்த உலகத்தின் அழகிலே மகிழும்பொழுது, வரப்போகிற மறு உலகத்தைப்பற்றி நினை; அங்கே பாவ மரணங்களின் தோஷம் காணப்படுகிறதில்லை, சாபத்தின் நிழல் இயற்கைப்பொருட்கள்மேல் படுகிறதுமில்லை. இரட்சிக்கப்பட்டவர்களுடைய இன்பகரமான இருப்பிட்த்தை உன் உள்ளத்தில் பாவனை செய்துகொள்; பின்னும் அது நீ பவனை செய்து கொண்டதைக் காட்டிலும் ஆயிரமடங்கு மகத்துவம் பொருந்தியதென்றும் ஞாபகப்படுத்திக்கொள். இயற் கையாக தேவன் அளித்திருக்கிற விதவிதமான வஸ்துக்களில், அவருடைய சிறந்த மகிமையின் ஒரு சிறிய ஒளியைமாத்திரம் நாம் பார்க்கிறோம், “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் காணவுமில்லை காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்” 1 கொரி. 2 : 9 என்று எழுதியிருக்கிறது.SC 151.2

    கவி பாடுகிறவர்களும் தாபரசங்கம் சாஸ்திரிகளும் இயற்கை விஷயமாகப் பல காரியங்கள் சொல்லுகிறார்கள். ஆனால் உலகத்தின் அழகை வெகு கணிசத்தோடு கவனித்து இன்பம் அனுபவிக்கிறவன் கிறிஸ்தவனே; ஏனென்றால் அவன் எது எது தனுடைய பிதாவின் கைவேலை என்று அறிந்து, மலர் செடி மரங்களில் விளங்குகின்ற அவருடைய அன்பைக் காண்கிறேன். குன்று, பல்லத்தாக்கு, நதி, சமுத்திரமாகிய இவைகள் தேவன் மனுஷனுக்குக் காட்டியிருக்கிற அன்பின் தோற்றங்களென்று நோக்கிப் பார்க்காத மனுஷன் அவற்றின் அழகு நலத்தை அறிந்துகொள்ளவுமுடியாது.SC 152.1

    தேவன் நமக்காகச் செய்கிற காரியங்கள் மூலமாகவும், இருதயங்களில் கிரியை நடப்பிக்கிற அவருடைய ஆவியின் மூலமாகவும் அவர் நம்மோடு பேசுகிறார். நமக்குநேரிடுகிறசம்பவங்களிலும் நம்மைச் சுற்றிலும் உண்டாகிற மாறுதல்களிலும் அனேக மேன்மை யான படிப்பினைக்கற்றுக்கொள்ளலாம்; ஆனால் அந்தப்படிப்பினைகளை அறிந்துகொள்ளும்படி நாம் ஆயித்தமாயிருக்கவேண்டும். தேவனுடைய படைப்புத் தொழிலை அறிய விரும்பினசங்கீதக்காரன், “பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது” சங். 33 : 5 என்றும், “எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்க்க் கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்” சங். 107 : 43 என்றும் சொல்லுகிறான்.SC 152.2

    தேவன் தமது வார்த்தையின் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். இதிலே அவருடைய குணாதிசயம் எவ்விதமானதென்றும், அவர் மனுஷரோடு நடந்து கொள்வது எவ்வாறென்றும், மீட்பின் பெரிய வேலை எப்படிப்பட்டதென்றும் வெகு தெளிவாக்க் காட்டியிருக்கக் காணலாம். இன்னும் இதிலே முற்பிதாக்கள், தீர்க்கதரிசிகள், மற்ற மற்ற பூர்வீக பரிசுத்தவான்களாகிய இவர்களுடைய சரித்திரம் நமக்கு முன்னே விரிக்கப்படுகிறது. அவர்களும் “நம்மைப்போலப் பாடுள்ள மனுஷர்தான்” யாக். 5. 17. நமக்கு நேரிடுகிறதைப்போன்ற தடைகள் அவர்களுக்கு இருந்த போதிலும், அவர்கள் அவற்றை எவ்வாறு மேற்கொண்டார்களென்றும், நன்மைப்போல அவர்களுக்கும் சோதனைகளுண்டானபோதிலும், அவர்கள் எவ்விதமாகத் தைரிய நெஞ்சுடையவர்களாகித் தேவகிருபையால் அவற்றை ஜெயித்தார்கள் என்றும் நாம் பார்க்கிறோம் இதைப் பார்க்கப் பார்க்க, நீதிமான் களாவதற்கு நாம் படுகிற பிரயாசத்தில் தைரியங்கொள்ளுகிறோம். அவர்களுடைய கஷ்டங்கள் மூலமாக்க் கிடைத்த விலையேறப்பெற்ற ஞானத்தையும் அறிவைப் பற்றியும், அவர்களுடைய ஒளி, அன்பு, ஆசிர்வாதங்களைப் பற்றியும், அவர்களுக்கு அருளப் பட்டகிருபையின் பெலத்தால் அவர்கள்செய்த வேலையைப்பற்றியும் நாம் படிக்கும்பொழுது அவர்களைத் தூண்டின அதே ஆவியனவர், பரிசுத்த வைராக்கிய மென்ற தீபத்தை நமது இருதயத்திலே ஏற்றி, குணாதிசயத்தில் அவர்களைப்போல- அதாவது தேவனோடு ஜீவிப்பதில் அவர்களைப்போல இருக்கவேண்டுமென்ற ஆசையை எழுப்புகிறார்.SC 153.1

    “என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” யோவா. 5 : 39 என்று இயேசு பழைய ஏற்பாட்டு வேதாகமத்தைப் பற்றிப்பேசினார்; அப்படியே புதிய ஏற்பாட்டைப்பற்றியும் இதற்கதிகமான நிச்சியத்தோடு சொல்ல்லாம். “என்னை” என்ற வார்த்தையில் குறித்த மீட்பர்பேரிலேதான் நித்திய ஜீவனையடைவதற்கு நமக்கு இருக்கிற நம்பிக்கை நிலைத்திருக்கிறது. வேதம் முழுவதும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறது. “உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” யோ. 1 : 3 என்று சொல்லியிருக்கிறபடியால், சிருஷ்டிப்பின் முதல் சங்கதி தொடங்கி. “இதோ சீக்கிரமாய் வருகிறேன்” வெளி. 22 : 12 என்ற கடைசி வாக்குத்தத்தம்வரை அவருடைய கிரியைகளைப்பற்றி வாசித்து அவரு டைய சத்தத்திற்குச் செவிகொடுக்கிறோம். நீ இரட்சகருடனே நெருங்கி பழக விரும்பினால் பரிசுத்த வேதாகமத்தைப்படி.SC 154.1

    தேவனுடைய வசனங்களால் உன் இருதயத்தை நிரப்பு. அவைகள் உன்னுடைய கொடுந்தாகத்தைத் தணிக்கிற ஜீவத்தண்ணீராகிறது. அவைகள் வானத்திலிருந்து வந்த ஜீவ அப்பமுமாம். “னீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலுமிருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” யோவா. 6 : 53 என்றும், “னான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது” யோவா. 6 : 63 என்று இயேசு சொல்லியிருக்கிறார். நம்முடைய சரீரங்கள் நாம் புசித்துக்குடிக்கிறவைகளால் வளருகின்றன இயற்கைப் பொருட்களில் எவ்விதமான ஒழுங்கு இருக்கிறதோ, அவ்விதமே ஆவிக்குரிய விஷயத்திலும் இருக்கிறது; நாம் எதைப்பற்றித் தியானிக்கிறோமோ அது ஆத்தும சுகத்தையும் பலத்தையும் கொடுக்கும்.SC 155.1

    மீட்பின் விஷயத்தைப்பற்றித் தூதர்களுங்கூட கவனித்து நோக்க விரும்புகிறார்கள். நித்தியத்தின் யுகாயுகங்களாக, மீட்கப்பட்டவர்களுடைய சாஸ்திரமும் சங்கீதமும் அந்த விஷயத்தைப்பற்றித் தானிருக்கும். அது இப்பொழுது நாம் கவலையோடு படித்துச் சிந்திப்பதற்கேர்றபொருளல்லவா? இயேசுவினுடைய அலவிறந்த இரக்கம், அன்பு ஆகிய இவற்றைப்பற்றி யும், நமக்காக அவர் செலுத்தின பலியைப்பற்றியும் கவனத்தோடும் வணக்கத்தோடும் சிந்திக்கவேண்டியது நமது அருமையான மீட்பரும் மத்தியஸ்தருமானவருடைய இலட்சணங்களைப்பற்றி நாம் அடிக்கடி பேசவேண்டும். தமது ஜன்ங்களைத் தங்கள் பாவங்களினின்று இரட்சிக்கும்படி வந்தவருடைய வேலையைப்பற்றித் தியானிக்கவேண்டும். பரலோகத்துக்கடுத்த காரியங்கள் நாம் இவ்வாறு தியனிக்கும்பொழுது, நம்முடைய விசுவாசமும் அன்பும் பெலனடைகின்றன; இவற்றோடு நமது ஜெபங்கள் கலந்து வரும்பொழுது, அவைகள் தேவனுக்கு மிகவும் பிரீதியுள்ளவைகளாகும். நமது ஜெபங்கள் கருத்தும் ஊக்கமுமுள்ளவையாகும். இயேசுவின்மீது விடாப்பற்று உண்டாகும்; அவர் மூலமாகத் தேவனண்டை வருகிற எல்லாரையும் கடைசிபரியந்தம் இரட்சிக்க அவருக்கு வல்லமையுண்டு என்ற அறிவானது ஒவ்வொருனாளும் உயிரைடைந்து ஒங்கும்.SC 155.2

    இரட்சகருடைய உத்தமத்தைப்பற்றி நாம் தியானிக்கும்பொழுது, அவருடைய பரிசுத்தத்தின் சாயலாக நாம் முழுவதுமாக மாறி உயிரடையவேண்டுமென்ற ஆசைகொள்வோம். நாம் வழிப்ப்டுத்திகிறவரைப் போல நாம் ஆகவேண்டுமென்று நமது ஆத்துமாவிலே பசிதாகமுண்டாகும். எவ்வளவுக்கதிகமாக நமது எண்ணங்கள் கிறிஸ்து மேலே இருக்கிறதோ, அவ்வளவுக்கதிகமாக நாம் மற்றவர்களிட்த்தில் அவரைப்பற்றிப் பேசி, உலகத்துக்கு அவரை வெளிப்படுதுவோம்.SC 156.1

    வேதமானது அறிவாளிகளுக்காக மாத்திரம் அல்ல, சாதாரண ஜன்ங்களுக்கென்றே எழுதப்பட்டது. இரட்சிப்புக்கவசியமான பெரிய சத்தியங்கள் பட்டப் பகல்வெட்டவெளிச்சமாக வரையப்பட்டிருக்கின்றன. ஆனால், தேளிவாகக் காட்டியிருக்கிற தேவனுடைய சித்தத்தைப்பின்பற்றாமல், தங்கள் சுய புத்தி மார்க்கம் செல்லுகிறவர்களைத் தவிர, வேறொருவராவது தங்கள் வழிதவறிக் கெட்டுப்போகமாட்டார்கள்.SC 157.1

    வேதம் கற்பிக்கிறதைப்பற்றிப் பிறிதொருவன் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளாமல், நமக்குள் நாமே தேவ வசனத்தைப் படிக்கவேண்டும். நாமே சிந்தனை செய்து அறிவடைவதற்குப் பதிலாக, மற்றவர்கள் ஆலோசித்துப் பேசுவதை நாம் அங்கிகரிக்கத் தலைப்படுவோமாகில், நம்முடைய ஊக்கங்கள் குன்றி, நமது திறமையெல்லாம் குறைந்துபோகும் சிறந்த மனோதத்துவங்களுக்கேற்ற காரியங்களில் அவற்றைச் செல்லவிடாமல் தடுப்போமானால், அவையும் குறுகிப்போகும், இப்படிக் குறுகிப்போகுமாயின், தேவ வசனத்தின் ஆழ்ந்த கருத்தை அறிந்துகொள்ளுந்திறமை அந்தத் தத்துவங்களுக்கு இல்லாமலே போகும். வேதவசனங்களையும், ஆவிக்குரிய விஷயங்களையும் ஒன்றோடொன்று ஒத்துப் பார்த்து, இவ்விதமாக வேதாகமத்திலுள்ள பொருட்களின் சம்பந்தத்தைக் கண்டுகொள்ளுவதிலே நமது மனதைச் செலுத்தினால் நமது புத்தி விசாலமாகிறது.SC 157.2

    புத்தியைப் பலப்படுத்துவதற்கு, வேதம் படிப் பதைப் பார்க்கிலும் தக்கது வேறேன்றுமில்லை. எண்ணங்களை மேலானதாக்கித் தத்துவங்களுக்கு ஊக்கத்தைக் கொடுப்பதற்கு, ஆழ்ந்த கருத்துக்கள், சிறந்த சத்தியங்களடங்கிய வேதாகமத்தைப் போன்ற சக்தியுள்ள புஸ்தகம் பிறிதொன்றுமில்லை, மனுஷர் தகுந்த பிரகாரம் தேவ வார்த்தையைப் படிப்பார்களானால் அவர்கள் புத்தி விசாலிக்கும், அவர்களுக்குச் சிறந்த குணமுண்டாகும், காண்பதற்கருமையான உறுதியான நோக்கமுடையவர்களாவார்கள்.SC 157.3

    வேதாசமத்தை விரைவாக வாசிப்பதினால் யாதொரு பயனுமில்லை. அவ்வாறு ஒரு மனுஷன் வேத முழுவதும் வாசித்தபோதிலும், அதின் நலத்தைக் காணவாவது, ஆழ்ந்து புதைந்த கருத்தை அறிந்து கொள்ளவாவது முடியாமல் போகிறான். ஒருவசனத்தின் உட்கருத்து நமது மனதுக்குத் தெளிவாகி, இரட்சணியத்துக்கும் அதற்குமுள்ள சம்பந்தம் பிரத்தியட்சமாகும்வரையிலும் நாம் அந்த ஒரேவசனத்தை படிப்போமானால், அது, குறித்து நோக்கமுமில்லாமல் ஒரு உபதேசமும் அடையாமல் அனேக அதிகாரங்களை வாசிப்பதைப் பார்க்கிலும் மிகவும் பிரயோசனகரமானதாகும். வேதாகமத்தை உன்னிட்த்திலே வைத்துக்கொள். சமயங்கிடைத்தவேளையில் அதைப்படி; வசனங்களை ஞாபகத்தில் பதி. வீதியில் வழி நடக்கும் பொழுதுங்கூட நீ ஒரு பாகத்தை வாசித்து அதைப்பற்றிச் சிந்தனைசெய்து, இவ்வாறாக அதை உன் உள்ளத்தில் பதியச்செய்யலாம்.SC 158.1

    நாம் கருத்தோடு கவனித்து ஜெபசிந்தையோடு படிக்காவிட்டால் நாம் ஞானமடைய முடியாது. வேதத்தின் சிலபாகங்கள் மெய்யாகவே மிகத்தெளிவாயிருக்கிறபடியால், ஒருவராவது தப்பர்த்தம் கொள்ளமுடியாது, ஆனால் பார்த்த உடனே அர்த்தம் விளங்கிக்கொள்ள முடியாத பாகங்களும் இருக்கின்றன. நாம் வேதத்தின் ஒருபாகத்தை மற்றொரு பாகத்தோடு ஒப்பிட்டும் பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட படிப்புக்கு மிகுதியான பலன்கிடைக்கும், சுரங்கம் தோண்டுகிற ஒருவன் பூமியினுள் மறைந்திருக்கிற பொன் தங்கங்கள் படலம் படலமாகப் போகிறதைகணடு கொள்ளுகிறான். அதுபோலவே, மறைக்கப்பட்ட பொக்கிஷத்தைத் தேடுகிறது போல எவன் தேவனுடைய வார்த்தையை விடாமுயற்சியாக ஆராய்கிறானோ அவனுக்குக் கவலையீனமாக வாசிக்கிறவனுடைய கண்ணுக்கு மறைந்துபோகிற அனேக பெரிய சிறந்த சத்தியங்கள் தென்படும். எழுப்புதலான வார்த்தைகளை நாம் நமது இருதயத்திலே வைத்துச் சிந்தனை செய்தால் அவைகள் ஜீவ நீரூற்றிலிருந்து ஒடுகிற நதிகளைப்போலிருக்கும்.SC 159.1

    ஜெபம் செய்யாமல் வேதத்தை வாசிக்கக்கூடாது. அதின் பக்கங்களைத் திறக்குமுன்னே பரிசுத்த ஆவியானவருடைய வெளிச்சம் கிடைக்கும்படி கேட்கவேண்டும், அப்படியானால் அது நமக்கு அளிக்கப்படும். நத்தான்வேல் இயேசுவண்டை வந்தபொழுது “இதோ கபடற்ற உத்தம் இஸ்ரவேலன்” என்று இரட்சகர் சொன்னார். அதற்கு நாத்தான்வேல்” நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். இயேசு அவனை நோக்கி, “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக்கண்டேன் என்றார்” யோ. 1: 47, 48. சத்தியமெது என்று நாம் அறிந்துகொள்ளும்படியாக அறிவை நமக்குத் தரும்படி அவரை நாம் தேடினால், இரகசியமான இடங்களில் நாம் ஜெபித்தபோதிலும் அவர் அங்கும் நம்மைப்பார்க்கிறார். தெய்வ ஆதரவை மனத்தாழ்மையோடு தேடுகிறவர்கள் யார் யாரோ அவர்களுடனே ஒளியுள்ள உலகத்திலிருந்து தேவதூதர்களும் வந்து இருப்பார்கள்.SC 159.2

    பரிசுத்த ஆவியானவர் இரட்சகருடைய மேன்மையையும் மகத்துவத்தையும் உயர்த்திக் காட்டுகிறார் கிறிஸ்துவையும், அவருடைய நீதியின் பரிசுத்தத்தையும், அவராலே நமக்குக்கிடைத்திருக்கிற பெரிய இரட்சிப்பையும் உலகத்துக்குக் காட்டுவதே அவருடைய முக்கிய வேலையாகும். “அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்” யோவா. 16: 14 என்று இயேசு சொல்லுகிறார். சத்திய ஆவியானவர் ஒருவரே தேவனுடைய சத்தியத்தை பிரயோசனமுள்ளதாகப் படித்துக் கொடுக்கக்கூடிய உபாத்தியாயர். மனுக்குலத்துக்காகத் தமது குமாரன் மரிக்கும்படி அவரைக் கொடுத்து, மனுஷனுக்குப் போதகராகவும் எப்பொழுதும் வழிகாட்டியாகவுமாக இருக்கும்படி தமது ஆவியை நியமித்திருக்கிறபடியால் தேவன் எவ்வளவாக மனுஷரை மதிக்கிறார் என்று பாருங்கள்.SC 160.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents